பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: தோகைமலை பஸ் ஸ்டாண்டில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். குளித்தலை அடுத்த தோகைமலை பஸ் ஸ்டாண்டில் தினமும், 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லுகின்றன. இங்குள்ள வணிக வளாகத்தில் ஐந்து கடைகள், 47 தரைக்கடைகள் என, மொத்தம், 52 கடைகள் உள்ளன. இதன் மூலம், ஆண்டுக்கு, 30 லட்சம் வரை, பஞ்சாயத்துக்கு வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட, கூடுதலாக, 30 முதல், 50 அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், பஸ் ஸ்டாண்டின் மையப் பகுதி வரை ஆக்கிரமிப்பில் இருந்தது. இதனால் பயணிகளுக்கு, பெரிதும் இடையூறு ஏற்பட்டது. விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தோகைமலை ஏ.பி.டி.ஓ., விஜயகுமார், பஞ்., செயலாளர் இளங்கோவன் ஆகியோர், சுகாதார பணியாளர்களை வைத்து, கடைகளின் அளவு மற்றும் ஆக்கிரமிப்புகளை நேற்று அளவிட்டு குறித்து, இன்று மாலைக்குள் ஆக்கிரமிப்பு அகற்ற அவகாசம் அளித்துள்ளனர். அவ்வாறு அகற்றாவிட்டால், கடைகளில் உள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை