கரூரில் கொளுத்துது வெயில்: வேலை உறுதி திட்ட பணியாளர் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூரில் கொளுத்துது வெயில்: வேலை உறுதி திட்ட பணியாளர் அவதி

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள், பெரும் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாவட்டத்தில், 157 கிராம பஞ்சாயத்துகளில், தேசிய ஊராக வேலை உறுதி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம், வாய்க்காலை தூர் வாருதல், சாலையோரம் உள்ள முட்புதர் களை அகற்றுதல், குளத்தை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, 96 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. இதனால், பகல் வேலைகளில் மக்கள் சாலையில் நடமாடவே அஞ்சுகின்றனர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள், கொளுத்தும் கோடை வெயிலில் வேலை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை