விடைத்தாள் திருத்தும் மையத்தில் மயங்கி விழுந்து ஹெச்.எம்., சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விடைத்தாள் திருத்தும் மையத்தில் மயங்கி விழுந்து ஹெச்.எம்., சாவு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபி: கோபியில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில், பணியில் ஈடுபட்டிருந்த, மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர், மயங்கி விழுந்து இறந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம், கோபி, பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. கோபி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, புஞ்சை புளியம்பட்டி, கே.வி.கே., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏசுராஜா, 53, மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலராக, பணியில் இருந்தார்.விடைத்தாள் திருத்தும் மையமாக உள்ள, பள்ளி கட்டடத்தின் முதல் மாடி படிக்கட்டில், நேற்று மதியம், 3:00 மணி அளவில் நடந்து சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். சக ஆசிரியர்கள், தேர்வுத்துறை அதிகாரிகள், முகத்தில் தண்ணீர் தெளித்தனர். சுயநினைவின்றி இருந்ததால், கோபி தனியார் மருத்துவமனைக்கு, உடனடியாக கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதையடுத்து சொந்த ஊருக்கு, உடல் அனுப்பி வைக்கப்பட்டது. ஏசுராஜா, மாரடைப்பால் இறந்திருக்கலாமென, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்த ஏசுராஜாவின் மனைவி ஜெசிலியா, 48; இவர் புன்செய்புளியம்பட்டி, ஜெ.ஜெ.நகர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக உள்ளார். இரு மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணமாகி விட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X