துணிக்கடைகாரரிடம் ரூ. 20 லட்சம் மோசடி: நான்கு பேருக்கு போலீசார் வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துணிக்கடைகாரரிடம் ரூ. 20 லட்சம் மோசடி: நான்கு பேருக்கு போலீசார் வலை

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில், துணிக்கடைகாரரிடம், 20 லட்ச ரூபாய் மோசடி செய்த, நான்கு பேரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம், பாலே மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ஜின்சிங்,45; இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில், கடந்த, 20 ஆண்டுகளாக, மொத்த ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம், கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன், ராஜஸ்தான் மாநிலம், பாலே மாவட்டத்தை சேர்ந்த கெவர்ராம்,30, தேவன்லால்,25, தூதாராம்,23 ஆகிய, மூன்று பேரும், 10 லட்ச ரூபாய் மதிப்பில், துணியாகவும், கடனாகவும் வாங்கி சென்று, போச்சம்பள்ளி அடுத்த, அரசம்பட்டியில், லட்சுமி டெக்ஸ்டைல் என்ற கடை வைத்து, நடத்தினர். இதேபோல், ராஜஸ்தான் மாநிலம், பாலே மாவட்டத்தை சேர்ந்த பேராராம்,30, என்பவர், அர்ஜீன்சிங்கிடம், 10 லட்ச ரூபாய் வாங்கி, போச்சம்பள்ளி அடுத்த, சந்தூரில் ஜெய்பவானி என்ற, துணிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அர்ஜீன்சிங்கிடம் பணம் வாங்கி, துணிக்கடை நடத்திய, நான்கு பேரும், கடந்த, சில நாட்களுக்கு முன், கடையை மூடி விட்டு, திடீரென தலைமறைவாகினர். இதுகுறித்து, அர்ஜீன் சிங், காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தப்பியோடிய, நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை