'2020க்குள் எட்டு கோடி பேருக்கு காஸ் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'2020க்குள் எட்டு கோடி பேருக்கு காஸ் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம்'

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: பாரத பிரதமரின் சிறப்பு திட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 29 கிராமங்களில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, இலவசமாக காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, ஐ.ஓ.சி.,யின் கோவை மண்டல மேலாளர் சுனில்குமார் மற்றும் துணை மேலாளர் கீதுமோல் ஆகியோர், நிருபர்களிடம் கூறியது: இந்தியா முழுவதும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள, பெண்கள் பயன்படுத்தும் வகையில், ஐந்து கோடி பேருக்கு, இலவச காஸ் இணைப்பு வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மார்ச் வரை, 3 கோடியே, 56 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2020க்குள், எட்டு கோடி பேருக்கு, புதிய காஸ் இணைப்பு வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு, வரும், 20 முதல், 1,600 ரூபாய் மதிப்புள்ள, இலவச காஸ் இணைப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான சிறப்பு முகாம், வரும், 20ல், ஐ.ஓ.சி.,சார்பில், 29 கிராமங்களில் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X