மீன்பிடி தடை காலம் அமல்: முட்டை விலை உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீன்பிடி தடை காலம் அமல்: முட்டை விலை உயர்வு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: ஆழ்கடலில், மீன் பிடி தடை காலம் அமலுக்கு வந்துள்ளதால், முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.
நாமக்கல்லில், நேற்று நடந்த, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலை, 10 காசு உயர்த்தப்பட்டு, 360 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த, 10 நாளில், 35 காசு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: கிழக்கு கடற்கரை முழுவதும், நேற்று முதல், மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, 61 நாட்களுக்கு நீடிக்கும். அதன் காரணமாக, முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதுடன், உற்பத்தி சரிவால், கொள்முதல் விலையும் உயர்ந்து வருகிறது. இது, மேலும் உயர வாய்ப்புள்ளது. வெளிமண்டலங்களில், 'நெக்' நிர்ணயிக்கும் விலைக்கே பண்ணையாளர்கள் விற்பனை செய்கின்றனர். அதேபோல், நாமக்கல் மண்டல பண்ணையாளர்களும் விரும்புகின்றனர். இது, விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை