ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சொற்ப அளவில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சொற்ப அளவில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில், சொற்ப அளவிலேயே தண்ணீர் கொட்டுவதால், பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு சிறப்புகள் கொண்ட கொல்லிமலைக்கு, விடுமுறை நாட்களில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூரை சேர்ந்தவர்கள், சுற்றுலாப்பயணிகள் என, ஏராளமானோர் வந்து செல்வர். நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மழைக்காலங்களில், இங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில், 300 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரை கண்டு ரசிக்க, குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுப்பது வழக்கம். மூலிகை கலந்து வரும் நீரில் குளித்தால், பல்வேறு நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. இந்நிலையில், நீர் வீழ்ச்சியில், சொற்ப அளவிலேயே தண்ணீர் ஊற்றுகிறது. வேறுவழியின்றி பயணிகள் குளித்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது, அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை