பெரியார் பல்கலை வளாகம் முழுவதும் 110 கண்காணிப்பு கேமிரா பொருத்த முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியார் பல்கலை வளாகம் முழுவதும் 110 கண்காணிப்பு கேமிரா பொருத்த முடிவு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: பெரியார் பல்கலை வளாகத்தில், அனைத்து துறை மற்றும் அலுவலகங்களிலும், 110 கண்காணிப்பு கேமிரா, பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம், பெரியார் பல்கலையில், 27 துறைகளில், 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், முதுகலை மற்றும் ஆய்வுபடிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான துறை மற்றும் நிர்வாக அலுவலகங்கள், தேர்வாணையம், தொலைநிலைக்கல்வி இயக்குனரகம், மாணவ, மாணவியர் விடுதிகள், நூலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள், பெரியார் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ளன. கடந்த மாதத்தில், இயற்பியல் துறை பேராசிரியர்கள், செருப்பில் அடித்துக்கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, பல்கலையில் பல்வேறு கெடுபிடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து அலுவலகங்களிலும், கண்காணிப்பு கேமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேமிரா பொருத்துவதற்கான, கணக்கெடுப்பு நடத்தியதில், 110 கேமிராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதுகுறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் கூறியதாவது: பல்கலை நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கும் போது, மக்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அதன் ஒரு பகுதியாக, வளாகத்தில், 110 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X