சேலத்தில் வளர்ப்பு நாட்டுக்கோழி முட்டை விற்பனை கனஜோர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் வளர்ப்பு நாட்டுக்கோழி முட்டை விற்பனை கனஜோர்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: சேலத்தில் வளர்ப்பு நாட்டுக்கோழி மூட்டை, மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சேலத்தில் நேற்றைய நிலவரப்படி, கிராமத்து நாட்டுக்கோழி முட்டை ஒன்று, ஏழு ரூபாய் முதல், 10 ரூபாய் வரையும்,பிராய்லர் கோழி முட்டை, அதிகபட்சமாக, 4.10 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆனால், உடுமலைப்பேட்டை, சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, நாமக்கல் ஆகிய இடங்களில், வளர்ப்பு நாட்டுக்கோழி மூலம் உற்பத்தி செய்யப்படும் முட்டை, தற்போது விற்பனைக்கு வருகிறது. இந்த முட்டைகளை வாங்க பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக உள்ளதால், பண்ணையாளர்கள் அவற்றின் விலையை குறைத்து, மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த முட்டைகள், சேலம் உழவர்சந்தைகள், காய்கறி, கறி, மீன் மார்க்கெட் அருகே, அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. விலை குறைவு என்பதால், ஏழை எளிய மக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்த முட்டை வியாபாரி பெரியசாமி கூறியதாவது: வளர்ப்பு நாட்டுக்கோழி முட்டை, சுத்த வெள்ளை நிறம் என்றில்லாமல், சிகப்பு, மஞ்சள் கலந்து காணப்படும். இந்த முட்டைகள் அதிக அளவில் உற்பத்தியாக துவங்கி உள்ளதால், மக்கள் மத்தியில் அவற்றை கொண்டு சேர்க்கும் வகையில், பண்ணையாளர்கள் பிற முட்டைகளை விட விலையை குறைத்து விற்பனை செய்கின்றனர். இவற்றை, கிராமத்து நாட்டுக்கோழி முட்டை எனக் கூறி, 10 ரூபாய் வரை கூட வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உஷாராக இருந்து கொள்வதோடு, நாட்டுக்கோழி முட்டையை விட, வளர்ப்பு நாட்டுக்கோழி முட்டை, அளவில் பெரியது என்பதை மனதில் கொண்டாலே ஏமாற்றப்படுவதை தவிர்த்து விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை