முதல்வர் வீட்டை முற்றுகையிட முயற்சி: 121 பேர் கைது: ஆறு தெருக்கள் மூடப்பட்டதால் மக்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் வீட்டை முற்றுகையிட முயற்சி: 121 பேர் கைது: ஆறு தெருக்கள் மூடப்பட்டதால் மக்கள் அவதி

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: சேலத்தில், முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த, ஆதி தமிழர் பேரவை மாநில தலைவர் உட்பட, 121 பேரை போலீசார் கைது செய்தனர். பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில், ஆறு தெருக்களை போலீசார் மூடியதால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, மாநில அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டித்து, ஆதி தமிழர் பேரவையினர், சேலத்தில் முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதையடுத்து, நேற்று அதிகாலை முதல், சூரமங்கலம் மெயின் சாலையில் இருந்து, முதல்வர் வீடு செல்லும் சாலை வரை, இரு புறங்களிலும் உள்ள ஆறு தெருக்களின் நுழைவு வாயில்கள், தடுப்புகளை கொண்டு முற்றிலும் மூடப்பட்டன. பொதுமக்கள் பயன்படுத்தாத வகையில், போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதனால், வேலைக்கு செல்வோர் வெளியில் செல்ல முடியாமலும், வெளியில் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.காலை, 10:30 மணிக்கு, நெடுஞ்சாலை நகருக்குள் பிரியும் சாலையிலும், தடுப்பு கொண்டு மூடப்பட்டது. ஆதிதமிழர் பேரவையினர், 11:00 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட கார்களிலும், தனித்தனி குழுக்களாக பிரிந்தும், முதல்வர் வீடு நோக்கி வந்தனர். அவர்களை, துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார், துரத்தி துரத்தி பிடித்தனர். இதில், ஒருவர் மண்ணெண்ணெய், பெட்ரோல் கலந்த பாட்டிலுடன் வந்திருந்தார். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆதிதமிழர் பேரவை மாநில தலைவர் அதியமான் தலைமையில், 121 பேரை கைது செய்த போலீசார், அவர்களை திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மதியம், 1:00 மணி வரை திருவாக்கவுண்டனூர் பைபாசில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் கெடுபிடியால், நெடுஞ்சாலை நகரில் உள்ள ஆறு தெருக்களை சேர்ந்த, குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை