விபத்து வழக்கில் 7 டவுன் பஸ்கள் சிறைபிடிப்பு: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விபத்து வழக்கில் 7 டவுன் பஸ்கள் சிறைபிடிப்பு: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: விபத்து வழக்கில், இழப்பீடு வழங்காததால், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில், ஏழு டவுன் பஸ்களை, ஜப்தி செய்வதற்காக, சிறை பிடித்தனர்.
கேரளா, திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் சிவசுதன், நைனாகுமாரி. இவர்களது மகன் சபரி, 21; விநாயகா மிஷன் பல் மருத்துவ கல்லூரியில், பல்மருத்துவம் படித்து வந்தார். கடந்த 2009, அக்டோபர் 13ல், நண்பர்களுடன் காரில் வரும் போது, அரசு பஸ் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். சேலம் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில், 50 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு, பெற்றோர் மனுதாக்கல் செய்தனர். 2015ல், சேலம் நீதிமன்றத்தில், 9.79 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, உத்தரவிடப்பட்டது. இதை ஒப்புக்கொள்ள மறுத்த, பெற்றோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அங்கு, 30.93 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. ஆனாலும், அரசு போக்குவரத்துக்கழகம் இழப்பீடு வழங்காமல், இழுத்தடித்து வந்தது. நிறைவேற்றுதல் மனு, சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், சேலம் பழைய பஸ் நிலையத்திலிருந்து கிளம்பும், 10 டவுன் பஸ்களை ஜப்தி செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, வழக்குதாரர் சிவசுதன், வக்கீல்கள் ஹரிபாஸ்கர், ஷாலினி, அமீனா அரவிந்த் ஆகியோர், நேற்று சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு வந்து, அடிவாரம் செல்ல காத்திருந்த பஸ்களை சிறை பிடித்தனர். ஏழு பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டதால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால், பதட்டம் உருவாகியது. அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாட்களுக்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்ததையடுத்து, பஸ்கள் விடுவிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை