விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவோம்: ஜி.கே.வாசன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவோம்: ஜி.கே.வாசன்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓமலூர்: ''விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, த.மா.கா., துணை நிற்கும்,'' என, ஜி.கே.வாசன் பேசினார்.
சேலம் விமான நிலையம் விரிவாக்கத்துக்கு, தும்பிபாடி, சிக்கனம்பட்டி, பொட்டிபுரம், காமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில், 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அதற்கான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று தும்பிபாடி மாரியம்மன் கோவில் திடலில், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், நான்கு கிராம விவசாயிகளை சந்தித்து பேசியதாவது: உங்களது போராட்டத்துக்கு ஆதரவாக, த.மா.கா., துணை நிற்கும். 5,000க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய வகையில், நிலம் கையகப்படுத்துவது உறுதியானால், விமான நிலையத்தை மூடும் நடவடிக்கையை, த.மா.கா., முன்னிலைப்படுத்தும். விவசாயிகளின் போராட்டத்துக்கு, அனைத்து கட்சி தலைவர்களும், அரசியல் பாராமல் ஒன்றிணைந்து போராட வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்று கூறி, கிராமங்களை பாதிக்கக்கூடிய கூடிய எந்த திட்டத்தையும் எதிர்த்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை