சைமன் உடல் சொந்த கிராமத்தில் அடக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சைமன் உடல் சொந்த கிராமத்தில் அடக்கம்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டூர்: சந்தன வீரப்பன் கூட்டாளி சைமன் உடல் நேற்று சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த, 1993 ஏப்.9ல், மேட்டூர் அருகே, பாலாறு அடுத்த சொரக்காமடுவில் சந்தன வீரப்பன் வைத்த கன்னிவெடியில் சிக்கி, தமிழக எஸ்.பி.,கோபாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். உடன் சென்ற போலீசார், வனஊழியர்கள், இன்பார்மர்கள் உள்பட, 22 பேர் பலியாயினர். சம்பவம் தொடர்பாக கர்நாடகா, சாம்ராஜ்நகர் மாவட்டம், ஒட்டர் தொட்டி சைமன், சந்தனபாளையம் பிலவேந்திரன், ஞானபிரகாசம், மேட்டூர் அடுத்த கோட்டமடுவு கிராமத்தை சேர்ந்த மீசைமாதையன் ஆகியோரை, கர்நாடகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நால்வருக்கும் தூக்குதண்டனை விதித்த நிலையில், ரத்துசெய்யக்கோரி நால்வரும் கடந்த, 2013ல் ஜனாதிபதிக்கு மேல்முறையீடு செய்தனர். அதை அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். பின்னர் கடந்த, 2014ல் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதனால், நால்வரும், கர்நாடகா மாநிலம் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், உடல்நலம் பாதித்த சைமன், 60 நேற்று முன்தினம் பெங்களூரு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். சைமன் உடல் அஞ்சலிக்காக நேற்று சொந்த கிராமமான, மேட்டூர் அருகே உள்ள ஒட்டர் தொட்டியில் வைக்கப்பட்டது. சந்தன வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, அவரது உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில், நேற்று மதியம் சைமன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை