காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் விவசாயிகளின் மவுனம், போராட்டமாக மாறும்: வாசன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் விவசாயிகளின் மவுனம், போராட்டமாக மாறும்: வாசன்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மேட்டூர்: ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில், தமிழக விவசாயிகள் நடத்தும் மவுன புரட்சி, போராட்டமாக வெடிக்கும்,'' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, ஜி.கே.,வாசன் தலைமையில், த.மா.கா.,வினர் நேற்று மேட்டூர் அணை அடிவாரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜி.கே.வாசன் பேசியதாவது: தமிழகத்தில், 60 சதவீத நெல் உற்பத்திக்கு காவிரியே ஆதாரமாக உள்ளது. காவிரி வறண்டால் தமிழகத்தில் ஒட்டு மொத்த வளர்ச்சி பாதிக்கும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத பட்சத்தில், விவசாயிகள் மத்தியில் நீடிக்கும் மவுன புரட்சி, போராட்டமாக வெடிக்கும். மே, 3ல் தமிழகத்திற்கு சாதகமான முடிவை, உச்சநீதிமன்றம் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழக அரசு, நடப்பாண்டு பாடப்புத்தகங்களில் விலையை, 20 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதனால், நடுத்தர குடும்பத்தினர் பாதிக்கப்படுவர். வாரியம் அமைப்பது தொடர்பாக, தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை, கூட்டியும் பலனில்லாதது வேதனைக்குரியது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, பொதுப்பணித்துறை அலுவலகம் அருகிலிருந்து, காலிக்குடங்களுடன் பெண்கள், ஏர்கலப்பைகளுடன் கட்சியினர் முன்னால் செல்ல, ஆர்ப்பாட்டம் நடந்த மேடைக்கு வாசன் டிராக்டர் ஓட்டிச் சென்றார்.


* ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி பேசியதாவது: கர்நாடகா காவிரியாற்றில், 484 கனஅடி நீர் வருகிறது. இதில், 2018 தீர்ப்பு படி, 284.75 கனஅடி நீரை கர்நாடகமும், 177.21 கனஅடி நீரை தமிழகம், இதர நீரை கேரளா, புதுச்சேரி பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப, தினமும் தண்ணீரை பகிர்ந்து வழங்க வேண்டும். அப்போதுதான் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி, முழுமையான தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும். நீரை பகிர்ந்து அளிப்பதற்காக, உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை