பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: 158 ஆசிரியர்களுக்கு பணி விடுவிப்பு ஆணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: 158 ஆசிரியர்களுக்கு பணி விடுவிப்பு ஆணை

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஆத்தூர்: பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் மூன்று மையங்களில், பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, 158 ஆசிரியர்களுக்கு பணி விடுவிப்பு ஆணை வழங்கியதுடன், விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில், ஆத்தூர், சேலம், தாரமங்கலம் ஆகிய மூன்று மையங்களில், கடந்த, 11 முதல், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கின. அதன்படி, ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தில், 379 உதவி தேர்வாளர், முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், 128 பேர் என மொத்தம், 507 பேர் ஈடுபட்டுள்ளனர். நேற்று, 97 ஆசிரியர்கள், பிளஸ் 1 தேர்வு கண்காணிப்பு பணிக்கு சென்றதால், மீதமுள்ள, 389 ஆசிரியர்களுக்கு விடைத்தாள்களை, மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேல் வழங்கினார். இதில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, சேலம் மாவட்ட துணைத்தலைவர் சரவணன் தலைமையில், 21 பேர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் வாங்க மறுத்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, தேர்வு மதிப்பீட்டு முகாமிலிருந்து 'பணி விடுவிப்பு ஆணை' மற்றும் 24 மணி நேரத்தில் பணி புறக்கணிப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென, நோட்டீஸ் வழங்கி, மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து, சேலம் முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது: விடைத்தாள் திருத்தும் பணிகளில், முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி தேர்வாளர் என, 1,214 பேர் ஈடுபட்டுள்ளனர். இன்று (நேற்று), 1,124 பேர் பணிக்கு வந்தனர். தாரமங்கலம் - 135 பேர், சேலம் - இரண்டு, ஆத்தூர் - 21 என, மொத்தம் 158 பேர், பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால் அவர்களுக்கு, பணி விடுப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் நாள் குறித்து, தமிழக அரசு முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நிலையில், இவர்களது செயல் உள்ளதால் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை