5 பேர் பலியான பட்டாசு தொழிற்சாலை லைசென்ஸ் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

5 பேர் பலியான பட்டாசு தொழிற்சாலை லைசென்ஸ் ரத்து

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: ஐந்து பேர் பலியான பட்டாசு தொழிற்சாலையின், லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. வேலூர் அருகே, முள்ளிப்பாளையம், இந்திரா நகரில், கே.எல்.ஏ.கே., பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதை, கொணவட்டத்தை சேர்ந்த அப்துல்காதர், 45, நடத்தி வந்தார். கடந்த, 7 ல், பட்டாசுகளை பேக்கிங் செய்தபோது, அவை, கீழே விழந்ததில், வெடித்து சிதறின. அதில், இந்திரா நகரை சேர்ந்த தீபா, 25, சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த, கன்சால்பேட்டையை சேர்ந்த ஷீலா, 30, கவியரசன், 30, சிவா, 35, சண்முகம், 34, ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இந்த விபத்தில், ஐந்து பேர் இறந்ததையடுத்து, தொழிற்சாலையின் லைசென்சை ரத்து செய்து, கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை