தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு கைதிக்கு ஜி.ஹெச்.,சில் சிகிச்சை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு கைதிக்கு ஜி.ஹெச்.,சில் சிகிச்சை

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு கைதிக்கு, வேலூர் அரசு மருத்துவமனையில், மூன்றாவது நாளாக, டாக்டர்கள் சிகிச்சையளித்தனர்.
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் முறைகேடு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 2000ம் ஆண்டு, பிப்., 2ல், சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.,வினர் கலவரங்களில் ஈடுபட்டனர். கோவை வேளாண் பல்கலை., மாணவர்கள் வந்த சுற்றுலா பஸ்சுக்கு, தர்மபுரி இலக்கியம்பட்டியில், அ.தி.மு.க.,வினர் தீ வைத்தனர். இதில், மாணவியர் கோகிலவாணி, ?ஹமலதா, காயத்திரி ஆகியோர் இறந்தனர். இந்த வழக்கில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, மாது, நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகியோருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியதையடுத்து, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்கள், வேலூர் மத்திய சிறையில், தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில், நெடுஞ்செழியனுக்கு, கடந்த, 14ல், தினம் இரவு, 10:00 மணிக்கு, திடீரென, வயிற்றுவலி ஏற்பட்டது. சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், போலீஸ் பாதுகாப்புடன், வேலூர் அரசு மருத்துவமனையில், அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு, நேற்றுடன் மூன்றாவது நாளாக, நான்கு சிறப்பு டாக்டர்கள் அடங்கிய குழுவினர், சிகிச்சை அளித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை