வீட்டுக்குள் புகுந்த வியாபாரியை அடித்து கொன்ற வாலிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டுக்குள் புகுந்த வியாபாரியை அடித்து கொன்ற வாலிபர் கைது

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஜோலார்பேட்டை: வியாபாரியை அடித்து கொன்ற, வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த, தர்மகர்த்தா வட்டம் பகுதியில், கடந்த, 14ல், தமிழ் புத்தாண்டையொட்டி, இரவு, 7:00 மணிக்கு, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபகுதியை சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி வீட்டில் இருந்து, ஒருவர் வெளியே ஓடி வந்தார். அவரை, திருடன் என நினைத்த மக்கள் விசாரிக்காமல், தர்ம அடி கொடுத்தனர். அந்த நபர் இறந்ததால், சடலத்தை வயல்வெளியில் போட்டு விட்டு, மக்கள் ஓடினர். ஜோலார்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர். அதில், கொலை செய்யப்பட்டவர், ஆந்திர மாநிலம், ரங்காரெட்டி பரிய மால்குடா டாக்டர்ஸ் காலனியைச் சேர்ந்த, குமாரசாமி மகன் அந்தோஜி வீராச்சாரி, 38; தச்சு வியாபாரியான இவர், வியாபார விஷயமாக, கடந்த, 12ல் ஐதராபாத் சென்று, ஊர் திரும்பியது, தெரியவந்தது. அவர், எதற்காக தர்மகர்த்தா வட்டம் பகுதிக்கு வந்தார், விவசாயியின் வீட்டுக்குள் ஏன் சென்றார், என்ற விவரம் தெரியவில்லை. வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணதாசனை, 21, போலீசார், நேற்று கைது செய்தனர். வியாபாரியை, தாக்கிய பொதுமக்களின் விபரங்கள், குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை