வேலூரில் அதிகரிக்கும் வழிப்பறி: இரவில் நடமாட பெண்கள் அச்சம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலூரில் அதிகரிக்கும் வழிப்பறி: இரவில் நடமாட பெண்கள் அச்சம்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

வேலூர்: வழிப்பறி கொள்ளையர்கள் செயினை பறித்த போது, தவறி விழுந்த பெண்ணுக்கு மண்டை உடைந்தது. வேலூரில் டூவீலர்களில் செல்லும் பெண்கள் மற்றும் தம்பதியினரை குறிவைத்து, வழிப்பறி கொள்ளைச்சம்பங்கள் அதிகரித்துள்ளதால், பெண்கள் பீதியில் உள்ளனர்.
வேலூர் அடுத்த, பெருமுகையைச் சேர்ந்தவர் பெருமாள், 50; இவர், வேலூரில், தனியார் மரக் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது, மனைவி சுமலதா, 40. இருவரும், நேற்று முன் தினம் ரத்தினகிரி கோவிலுக்கு சென்று, சுவாமி கும்பிட்டு விட்டு, இரவு, 10:00 மணிக்கு, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பெருமுகை அருகே வந்த போது, ?ஹல்மெட் அணிந்து, பைக்கில் வந்த இரு மர்மநபர்களில், ஒருவன், சுமலதா அணிந்திருந்த, ஐந்து பவுன் தங்க செயினை பறித்தான். இதனால், தடுமாறி பைக்கில் இருந்து, கீழே விழுந்ததில், சுமலதாவின் மண்டை உடைந்தது. அவ்வழியாக வந்தவர்கள், சுமலதாவை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சத்துவாச்சாரி போலீசார், செயின் பறிப்பு ஆசாமிகளை தேடி வருகின்றனர். கடந்த மாதம், 20ல், பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்த, மல்லிகா, 50, பணி முடிந்து, தன் கணவர் வீராசாமியுடன், பைக்கில் சென்ற போது, செயின் கொள்ளையர்கள், மல்லிகா கழுத்தில் இருந்த, செயினை பறித்தனர். இதில், பைக்கில் இருந்து விழுந்து, படுகாயமடைந்த மல்லிகா இறந்தார். இந்த வழக்கில், குற்றவாளிகளை பிடிக்க முடியாமல், போலீசார் திணறி வரும் நிலையில், வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை