பர்வத மலையில் திடீர் தீ விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பர்வத மலையில் திடீர் தீ விபத்து

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே, பர்வத மலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், தீயை அணைக்கும் பணியில், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் உள்ள, 4,560 அடி உயரம் கொண்ட, பர்வதமலையில் பிரம்மாம்பிகை சமேத மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த மலையில், அரிய வகை மூலிகை மரம், முயல், குரங்கு, குள்ள நரி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. நேற்று காலை, 10:00 மணிக்கு, 400 அடி உயரத்தில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர், தீயை அணைக்க போராடினர். பலத்த காற்று வீசியதால், தீயை அணைப்பதில், சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து, தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில், நூற்றுக்கணக்கான ஏக்கரில், சிறிய வகை மரம், செடி, கொடிகள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து, வனத்துறையினர் விசாரிக்கின்றனர். கடந்த, 6ல், நள்ளிரவில் மலையில், தீ விபத்து ஏற்பட்டது, குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை