பணத்தட்டுப்பாடு தற்காலிகமே: ஜெட்லி விளக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பணத்தட்டுப்பாடு தற்காலிகமே: ஜெட்லி விளக்கம்

Updated : ஏப் 17, 2018 | Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (74)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
CashCrunch, அருண் ஜெட்லி, பணத்தட்டுப்பாடு

புதுடில்லி: பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தற்காலிகமானது எனவும், இந்த பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
தெலுங்கானா, உ.பி., டில்லி, மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. இதனால், பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர்.


ஆலோசனை


இது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: பணத்தட்டுப்பாடு தொடர்பாக தற்போதைய சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. போதிய அளவில் பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. வங்கிகளிடம் கையிருப்பில் உள்ளது. திடீரென மற்றும் வழக்கத்திற்கு மாறான பணதேவை காரணமாக தற்காலிகமான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது விரைவில் சரி செய்யப்படும் என்றார்.


மத்திய அரசு உறுதி


பொருளாதார விவகார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தேவைக்கு ஏற்ப பண விநியோகம்செய்யப்பட்டு வருகிறது என்பதை மத்திய அரசு உறுதி செய்யும். வரும் காலங்களில் தேவை அதிகரித்தலுக்கு ஏற்றவாறு பணம் விநியோகம் செய்யப்படும். ஏடிஎம்களில் தேவையான அளவு பணம் கிடைக்கவும், செயல்படாமல் உள்ள ஏடிஎம்கள் வழக்கமான நிலைக்கு திரும்பவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தட்டுப்பாடு இல்லை


பணத்தட்டுப்பாடு தொடர்பாக ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறுகையில், விவசாயிகளின் பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் காலம் வந்துள்ளதால், அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளதால் ஏடிஎம்களில் பணம் இல்லை. ஸ்டேட் வங்கி கவலைப்பட்டது போல்,மும்பையில் பணத்தட்டுப்பாடு ஏதுமில்லை என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
18-ஏப்-201808:04:20 IST Report Abuse
Jaya Prakash ' திடீரென மற்றும் வழக்கத்திற்கு மாறான பணதேவை காரணமாக தற்காலிகமான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது '... ஏன்யா நீ எல்லாம் ஒரு நிதி அமைச்சர்... ATM யில் பணம் எடுக்க ஒரு நாளைக்கு இவ்வளவுதான் என்று கட்டுப்பாடு உண்டு... அப்போ அந்த லிமிட்டை அமைச்சதும் அரசு... அதை மீறி எவனும் எடுக்க முடியாது... அப்போ எங்கே இருந்து வந்தது இந்த அளவுக்கு பணத்தட்டுப்பாடு?
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
18-ஏப்-201806:55:03 IST Report Abuse
Sanny ஐயா உங்க நாட்டில பணம் தட்டுப்பாடும், நம்ம நாட்டில பணத்தை கண்ணால பார்க்கமுடியலே, சம்பளம் வந்ததும், UTILITY பில் , வீட்டு வாடகை அல்லது mortgage , காருக்கு full tank petrol , மளிகை சாமான், இன்சூரன்ஸ், பிள்ளைகள் செலவு எல்லாத்துக்கும் கார்ட் உரசி, உரசி போக வீடுவந்து net இல் bank balance பார்த்தல், இரட்டை இலக்கத்தில் இருக்கும். இதே இந்திய சாதாரண மக்களின் வாழ்வைப்பார்த்தால் அதைவிட கொடுமை சார், உழைக்கும் பணத்தையாவது தட்டுப்பாடு இல்லாமல் கொடுத்துடுங்க சார்.
Rate this:
Share this comment
Cancel
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201821:09:30 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USA இந்த ஆட்சியில் எல்லாமே தற்காலிகமானதுதான்....நடந்து கொண்டிருக்கும் ஆட்சி உட்பட ?.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஏப்-201820:31:18 IST Report Abuse
Pugazh V தட்டுப்பாடே இல்லை என்று சில காவிகள் இதே பேப்பரில் வேற பகுதியில் எழுதி நிதி அமைச்சர் முகத்தில் கரி பூசியிருக்கிறார்களே
Rate this:
Share this comment
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
17-ஏப்-201820:20:05 IST Report Abuse
rsudarsan lic எங்கே அந்த சாமி? குவார்ட்டருக்கு ஒரு தரம் முத்துதிர்ப்பாரே
Rate this:
Share this comment
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
17-ஏப்-201820:18:24 IST Report Abuse
rsudarsan lic ஒரே ஒரு பாராளுமன்ற தொடரில் இந்த ஆளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அமளி செய்தால் நாடு முன்னேறும்.
Rate this:
Share this comment
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
17-ஏப்-201820:17:10 IST Report Abuse
rsudarsan lic முகம்மது பின் துக்லக் என்றொரு ராஜா இருந்தாராம்.
Rate this:
Share this comment
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
18-ஏப்-201807:56:27 IST Report Abuse
Jaya Prakashஅந்த ராஜாவை கேவல படுத்ததேயா.... இது அதை விட மோசம்.......
Rate this:
Share this comment
Cancel
CJS - cbe,இந்தியா
17-ஏப்-201820:14:51 IST Report Abuse
CJS வழக்கத்திற்கு மாறாக பண தேவையா இல்லை வருகிற தேர்தலுக்கான பத்துக்கலா. பண தேவை என்பதற்கு இந்த அரசு எதுவும் வெட்டி முறிக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
17-ஏப்-201820:10:31 IST Report Abuse
rsudarsan lic ஓ இவர்தான் புது ரிசர்வ் வங்கி கவர்னரா?
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
17-ஏப்-201819:53:53 IST Report Abuse
bal ஏனென்றால் இவர் வீட்டிலிருந்து கொண்டு வந்து போடுவார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை