பணத்தட்டுப்பாடு: எதிர்க்கட்சிகள் கண்டனம்| Dinamalar

பணத்தட்டுப்பாடு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (48)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
CashCrunch, பணத்தட்டுப்பாடு, ராகுல், காங்கிரஸ், மம்தா, திரிணமுல்,

புதுடில்லி: ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுகையில், பிரதமர் மோடி வங்கி நிர்வாகத்தை சீர்குலைத்து விட்டார். நிரவ் மோடி 30 ஆயிரம் கோடி ரூபாயுடன் வெளிநாட்டிற்கு ஒடிய போது பிரதமர் எந்த வார்த்தையும் கூறவில்லை. நமது பாக்கெட்டிலிருந்து 500 மற்றும், 1000 நோட்டுகளை பறித்து நிரவ் மோடியின் பாக்கெட்களில் திணித்துவிட்டதால், நாம் பணத்திற்காக வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது எனக்கூறினார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில், பல மாநிலங்களில் பணம் இல்லாமல் காலியாக உள்ளதாக தகவல் வருகிறது. பெரிய மதிப்பு நோட்டுகளை காணவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் காலம் நினைவுக்கு வருகிறது. நாட்டில் நிதி நெருக்கடி ஏதும் ஏற்பட்டுள்ளதா? எனக்கூறியுள்ளார்.


திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஒ பிரையன் கூறுகையில் , இதுவும் ஒரு நிதி நெருக்கடிநிலைதான். 50 நாளில் அனைத்தும் சரியாகிவிடும் என பிரதமர் மோடி கூறினார். ஆனால், ஒன்றரை வருடங்கள் ஆகியும் பணத்தட்டுப்பாடு சரியாகவில்லை எனக்கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஏப்-201807:06:42 IST Report Abuse
ஆரூர் ரங் //நிரவ் மோடி 30 ஆயிரம் கோடி ரூபாயுடன் வெளிநாட்டிற்கு ஒடிய போது பிரதமர் எந்த வார்த்தையும் கூறவில்லை/ஆனால் அதே நீரவ் மோடி கோஷ்டியின் வக்கீல் இப்போது கர்நாடக காங்கிரஸ் எம் எல் ஏ வேட்பாளர் .தப்பியோட உதவியதில் கனெக்ஷன் புரிகிறதா?
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
17-ஏப்-201821:18:33 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam இவர்களுக்கு எந்த தட்டுப்பாடும் வறாது.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஏப்-201820:50:13 IST Report Abuse
Pugazh V @அநாகரிக காட்டுமிராண்டி காசிமணி, நீங்கள் திருந்தவே போவதில்லை. வாத்தி ன்னா என்ன எழவு அர்த்தம் ???? 22 ரூபாய்க்கு விக்ஸ், 30 ரூபாய்க்கு மருந்துகள் வாங்க / 40 ரூபாய்க்கு காலை உணவு சாப்பிட / 40 ரூபாய்க்கு குழந்தைகளுக்கு பால் வாங்க / 80 ரூபாய்க்கு ரயில் டிக்கெட் வாங்க/ தேவையான அளவு படிப்பு, ஆரோக்கியம், கண்பார்வை கூர்மை இல்லாமல் இருக்கும் லட்சோப லட்ச வயதானவர்கள் டிஜிட்டல் க்கு மாறணுமா? கார்டு மெஷின் இல்லாத கிராமங்கள், கார்டு இல்லாத வயோதிகர்கள் பற்றியெல்லாம் யோசிக்க அறிவோ தெளிவோ மூளையோ இல்லாமல் அநாகரிகமாக அவமரியாதையாக நீங்கள் உளறுவதை பதிவு செய்வதால் உங்களை ஒரு மனித ஜென்மமாக கருதவே இயலவில்லை. வெரி ஸாரி. சிங்கப்பூரிலாவது நாகரிகம் கற்க முயலவும். கெட்ட வார்த்தைகளை எழுதுவது மனிதமே அல்ல. //அனைத்து வாசகர்களின் சிந்தனைக்கு.
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஏப்-201807:04:01 IST Report Abuse
ஆரூர் ரங்பாவாடை நாடா கட்சிக்காரர்கள் தான் நாகரீகமானவர்கள் .(அடுத்ததா அப்படி ஒரு டயலாக் சட்டசபையில் பேசவேயில்லைன்னுகூட பதில்வரும் )...
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா
17-ஏப்-201820:02:05 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா முதல்ல Cash Crunch அதனால வங்கிகளிடம் பணம் இல்லை.. அதனால் ஏடிஎம்மில் பணம் இல்லை என்பது ஆகப்பெரும் பொய். காரணம்.. வங்கிகளால்..ஏடிஎம்மில் போட காஷை ஷார்ட் டெர்மில் மட்டுமே Financial மார்க்கெட்டிலிருந்து வாங்கிவிட முடியும். அந்த ஷார்ட் டெர்ம் என்பது.. call money market அதாவது 15 நாள் வரை வட்டிக்கு கிடைக்கும் மார்க்கெட். இப்படி வங்கிகள் திவால் ஆகிறமாதிரி நிலைமை என்றால் 70 சதம் கூட இன்டர்பேங்க் வட்டி போகும். இப்படி பல முறைபோயிருக்கிறது காங் அரசில். ஹர்ஷத் மேஹ்தா காலங்களில் 100 சதம்லாம் போய் இருக்கிறது. இப்போது 5.8 முதல் 6 சதம் வரைதான் இருக்கிறது. அதாவது வங்கிகளுக்குள் கொடுக்கல் வாங்கல் இந்த சதவீதங்களில் நடை பெறுகிறது என்றால்.. பணம் புழங்குகிறது என்றுதான் அர்த்தம். உண்மையும்கூட. ஏடிஎம்மில் பணம் இல்லையைன்றால்.. சின்ன நோட்டுகள் பற்றாக்குறை. அல்லது பெரிய நோட்டுகள்2000 ரூபாய் நோட்டுகளை configure ஏடிஎம்மில் பண்ணாமலும் இருக்கலாம். இதனால் பணம் வைத்தவுடன் ஏடிஎம் காலியாக வாய்ப்பிருக்கிறது. 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெற வாய்ப்பும் இருக்கிறது.. அல்லது circulationஇல் இருந்து லபக்கினாலும் சின்ன நோட்டுகள் அரிதாகும் வாய்ப்பு இருக்கிறது. இதையும் வைத்து அரசியல் பண்ணுவதை பார்த்தால். கீரியே இல்லாமல்.. கீரியும் பாம்பும் சண்டை காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு கடைசிவரை டபாய்க்கும் பாம்பாட்டி ஞாபகம் தான் வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
17-ஏப்-201819:22:47 IST Report Abuse
bal மம்தாவும் ராகுலும் அடுத்து என்ன கூட்டு களவானித்தனம் பண்ணலாம் என்று குசு குசு என்று பேசுகிறார்கள்...
Rate this:
Share this comment
Narayanan Muthu - chennai,இந்தியா
17-ஏப்-201820:17:51 IST Report Abuse
Narayanan Muthuகோணல் புத்திக்காரனுக்கு அப்படித்தானே தோணும். இரண்டு லட்சம் கோடி அளவில் வராக்கடன் அறிவிக்கப்பட்டுள்ளது. பணத்தட்டுப்பாடு நாடெங்கிலும் உள்ளது. இதற்கெல்லாம் பதிலில்லை. கேனத்தனமான யோசனைகள் கேவலமான ரசனைகள். கேடுகாலம் தொடர்கதையாகி போனது....
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
17-ஏப்-201819:01:32 IST Report Abuse
bal எல்லா பணத்தையும் எல்லா கட்சிகளும் எடுத்து பதுக்கி உள்ளன....2019 தேர்தலும் கர்நாடக தேர்தலும் வருகின்றன அல்லவே...பட்டுவாடா பண்ண வேண்டாமா...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஏப்-201818:30:04 IST Report Abuse
Bhaskaran நேற்று மந்தவெளி statebank atm இல்கூட பணம் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-ஏப்-201818:21:28 IST Report Abuse
Kuppuswamykesavan கர்நாட சட்டசபை தேர்தல் முடிவை வைத்து, எப்போது வேண்டுமானாலும், பாராளுமன்ற தேர்தல் வரலாம். ஆக, அரசியல் கட்சிகளின் பினாமி(?) பிரமுகர்கள், இந்த 2000ரூபா நோட்டுக்களை, தேர்தல் செலவுக்காக, இப்பவே, பதுக்க தொடங்கி இருக்கலாம்?. அதான் டிமாண்டோ என்னவோ?.
Rate this:
Share this comment
Cancel
Appavi Tamilan - Chennai,இந்தியா
17-ஏப்-201818:08:05 IST Report Abuse
Appavi Tamilan என்ன சோனமுத்தா உங்க ஆட்சி அவலட்சணம் இப்பிடி நாலே வருஷத்துல சாயம் வெளுத்து பல் இளிக்குதே, அடுத்த தேர்தலல்ல மறுபடியும் ஆட்சிக்கு வருவீங்களா? வந்தா என்ன வராட்டி என்ன கும்பானில இருந்து சோக்சி வரைக்கும் எல்லோர்கிட்டையும் கமிஷன் பிச்சை வாங்கி குவிச்சாச்சு. கட்சி காரங்க அடிச்ச கொள்ளை பணமும் இருக்கு. பத்து லட்சம் ரூவா கோட்டுங்க இன்னும் நெறைய இருக்கு. இப்போதைக்கு பஞ்சம் இல்லை. அடுத்த தேர்தலுக்கு முன்னாடி இன்னொரு மதக்கலவரத்தை வெச்சு ஒரு ஆட்டம் ஆடிருவோம்ல...
Rate this:
Share this comment
Cancel
Appavi Tamilan - Chennai,இந்தியா
17-ஏப்-201818:04:32 IST Report Abuse
Appavi Tamilan ராவோட ராவா பணம் செல்லாதுன்னு சொல்லிட்டு, இன்னும் ஐம்பது நாட்கள் பொறுத்திருங்க. எல்லாம் சரியாகி, இந்தியா வல்லரசு நாடாகிடும்னு ஒரு தலீவரு தெரு தெருவா, மேடை மேடையா கூவுனாரு. போதாக்குறைக்கு அப்படி சரி ஆகலைன்னா தூக்குல தொங்கவும் தயார்னு ஐம்பத்தி ஆறு இன்ச் மார்பை நிமித்தி சொன்னாரு. அவரோட அல்லக்கைகள், எல்லையில் ராணுவம் நிற்கும்போது உங்களால் கொஞ்ச நேரம் ஏடிஎம் வாசலில் நிற்க முடியாதான்னு வேற சப்போர்ட்க்கு கூவுனாங்க. பலரு கால் கடுக்க நின்னு முடியாம செத்து போனாங்க. இதனை கொடுமைகள் நடந்தும் அந்த தலீவரு வாய திறக்கலை. இப்போ ஒன்னரை வருஷம் ஆச்சு. கருப்பு பணமும் ஒழியவில்லை. கள்ள நோட்டு அச்சடிக்கறதோ அதிகமாகிடுச்சு. தீவிரவாதம் எப்பவும் போல நடக்குது. தலீவருகிட்ட கேட்டா எல்லாத்துக்கும் காங்கிரஸ்தான் காரணம்னு சொல்லிட்டு வெளிநாட்டுக்கு ஓடிப்போறாரு. இப்போ அச்சடிக்கக்கூட கரன்சி நோட்டு இல்லைன்னு ஏடிஎம் எல்லாம் மூடி கிடக்குது. நிதி அமைச்சரு பட்டும்படாம தொட்டும் தொடாம ஒரு ஏனோ தானோ அறிக்கை விடுறாரு. சில ஏமாளிங்க கருநாடக தேர்தல்ல மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டி அதிக பணத்தை எடுத்துட்டாங்க அதனால இந்த பற்றாகுறைன்னு சொல்லுறாங்க. அப்படின்னா நாளைக்கு நாடு முழுக்க பொது தேர்தல் வந்தா நாடு முழுக்க வங்கிகளும், ஏடிஎம்களும் பல நாளுக்கு மூடி கிடைக்குமா??? அட அப்பரசண்டிகளா??? நாட்டோட வங்கி துறையை சீரழிச்சி சின்னா பின்னமாக்கிட்டு எதிர்க்கட்சி தலைவருங்க கேட்ட அவங்களை திருப்பி திட்டுறீங்களே. உங்களை எல்லாம் மீண்டும் அதிகாரத்துல மக்கள் உக்காரவைப்பாங்கன்னு நினைக்கிறீங்களா?? வாய்ப்பே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை