tirukural | செல்லங்களல்ல திருக்குறள் செல்வங்கள்...| Dinamalar

செல்லங்களல்ல திருக்குறள் செல்வங்கள்...

Updated : ஏப் 18, 2018 | Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பார்வையற்றவர்கள் நடத்திய அந்தககக்கவி பேரவையின் விழா


விழாவில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தன


திடீரென ஒரு நிகழ்வு


ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய இருபது மாணவ மாணவியர் முன்வந்து நின்றனர்


திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் படிக்கும் செல்வங்களான இவர்கள் திருக்குறளில் உள்ள 1330 குறள்களைகளையும் சொல்லும் திறன் பெற்றவர்கள். அது மட்டுமல்ல நீங்கள் இந்த அதிகாரத்தில் இத்தனையாவது எண் உள்ள குறள் எது என்று கேட்டாலும் சொல்வர், அல்லது குறளின் முதல் வார்த்தையைச் சொன்னால் முழுக்குறளையும் அது எந்த அதிகாரத்தில் வருகிறது என்ற விளகத்துடன் சொல்வர், நீங்களே ஒரு குறளைச் சொன்னால் அது எந்த அதிகாரத்தில் எத்தனையாவது குறளாக வருகிறது என்றும் சொல்வர் என்றனர்.


ஆச்சரியமாக இருந்தது.ஆனால் அவர்களை சோதித்த போது பளீர் பளீர் என சொன்ன சரியான பதிலால் அந்த ஆச்சரியம் அதிகரித்தது.


இந்த ஆச்சரியங்களின் பின்னால் இருப்பவர் பள்ளியின் தமிழ் ஆசிரியர் செந்தில்குமார்.ஒரு தனியார் ஆங்கிலப்பள்ளியில் உள்ள சராசரி தமிழாசிரியர் போலவேதான் செந்தில்குமாரும் இருந்தார்.ஒரு முறை பள்ளிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வந்திருந்தார்.


அவர் பேசும் போது என் வாழ்க்கைக்கு வழிகாட்டியே திருக்குறள்தான் என்று சில பல திருக்குறள் உதாரணங்களுடன் அன்று அவர் பேசிய பேச்சு பள்ளியில் உள்ள மாணவர் மத்தியில் நன்றாக பதி்ந்தது ஆசிரியர் செந்தில்குமார் மனதில் ஆழமாகவே பதிந்தது.


அதன்பிறகு திருக்குறள்தான் வாழ்க்கை என்று சொல்லுமளவு ஒன்றிப்போனார் பள்ளி நேரம் முடிந்த பிறகு கூடுதலாக பள்ளி வளாகத்திலேயே நான்கு மணி நேரம் அமர்ந்து விருப்பமுள்ள மாணவர்களுக்கு திருக்குறள் சிறப்பு வகுப்பு நடத்தினார்.


இதன் காரணமாக அறத்துப்பாலில் உள்ள அத்தனை குறள்களையும் மாணவர்கள் சிலர் ஒப்புவிக்க அதைபலரும் பாரட்டினர் திருக்குறள் வகுப்பு சூடு பிடித்தது ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் கூட


ஆர்வமாக வந்து திருக்குறம் படித்தனர்.


கொஞ்ச காலத்தில் 1330 குறள்களையும் சொல்லும் வல்லமை பெற்ற குழந்தைகள் உருவாயினர் இவர்களுக்கு பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விருதுகளை வழங்கி குவித்தனர்.


அடுத்த கட்டத்திற்கு போகவேண்டும் என்ற ஆர்வமுடன் இன்னும் ஆழமாக திருக்குறளை கற்றதன் விளைவுதான் பார்க்காமலே குறளின் முதல் வார்த்தையை கேட்டதுமே அது 1330 குறளில் எந்தக்குறள் என்பதை முழுமையாகச் சொல்லி எந்த அதிகாரத்தில் வருகிறது எத்தனையாது இடத்தில் வருகிறது அதன் பொருள் என்ன என்பதை சொல்லும் திறனைத்தந்தது.


இப்போது திருக்குறள் தொடர்பான எந்தப் போட்டி நடந்தாலும் அதற்கான முதல் பரிசு ஸ்ரீநிகேதன் பள்ளிக்குதான் என்பது எழுதாத விதியாகிவிட்டது அவ்வளவு திறமை.


திருக்குறள் இந்த மாணவர்களுக்குள் இறங்கியபிறகு அவர்களது வாழ்க்கை


முறையே மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்படியாக மாறிவிட்டது அவ்வளவு அமைதி ஒழுக்கத்துடன் பண்பின் குவியல்களாகிவிட்டனர்.


மாணவர்கள் பற்றியும் திருக்குறள் பற்றியும் பேசும்போது எவ்வளவு உற்சாகமாகவும் உணர்ச்சகரமாகவும் செந்தில்குமார் பேசினாரோ அதே தொனியில் பள்ளி தாளாளர் விஷ்ணுசரண் பற்றி பேசும் போதும் மகி்ழ்கிறார்.அவரது தமிழ்ப்பற்றும் அவர்தரும் ஊக்கமும் உற்சாகமும்தான் இத்தனைக்கும் காரணம் என்று சொல்லி கூடுதலாக நெகிழவும் செய்கிறார்.


நெகிழ்விற்கு ஒரு காரணம் இருக்கிறது மெத்த தமிழ் படித்துவி்ட்டு அதற்கான வேலை வாய்ப்பு கிடைக்காமல் ஒரு பெயிண்டராக மாறி வீடுகளுக்கு வௌ்ளை அடித்துக்கொண்டு இருந்தார் செந்தில்குமார் .இந்த பள்ளிக்கு அப்படி வந்தவரின் தமிழ் திறமையையும் இவரது பின்னனியையும் அறிந்து தமிழ் ஆசிரியராக்கி இப்போது அந்தத்துறையின் தலைவராகவும் உயர்த்தி அழகு பார்த்து இருக்கிறார் தாளாளர் விஷ்ணுசரண் இப்போது தெரிகிறதா செந்தில்குமாரின் நெகிழ்விற்கு காரணம்.

பள்ளியின் தமிழாசிரியரான கலையரசன் பற்றியும் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும் மாணவர்களின் இந்த திருக்குறள் முழக்கத்தை எனது தோளிலும் சுமக்கிறேன் என்று சொல்லி இதற்கான பணிகளை செந்தில்குமாருடன் பகிர்ந்துகொள்கிறார்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும் இந்தப்பள்ளி குழந்தைகளின் திருக்குறள் திறமையை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டதா?அப்படியானால் செந்தில்குமாரை தொடர்பு கொள்ளுங்கள் அவரது எண்:9385361193.


எல்.முருகராஜ்


murugaraj@dinamalar.in
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X