" மேக் இன் இந்தியா " - சுவீடன் பிரதமர் பாராட்டு| Dinamalar

" மேக் இன் இந்தியா " - சுவீடன் பிரதமர் பாராட்டு

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
" மேக் இன் இந்தியா " ,சுவீடன், பிரதமர், மோடி, பாராட்டு

ஸ்டாக்ஹோம்: சுவீடன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமரை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இருவரும் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய பிரதமர் மோடி;
" இங்கு எனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு பிரதமர் ஸ்டீபன் லோப்வனுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . கடந்த 30 ஆண்டுகளில் சுவீடன் வரும் இந்தியாவின் பிரதமராக எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மகிழச்சி அடைகிறேன். இரு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் இணைந்து செயல்பட கூட்டு நடவடிக்கை திட்டத்தில் கையொப்பமிட்டுள்ளோம். குறிப்பாக புதுப்பிக்கப்பட்ட எரி சக்தி , வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்கள் இதில் அடங்கும். புதிய கண்டுபிடிப்புகள் எங்களின் முக்கிய ஆர்வம் ஆகும். இதனால் மேக் இன் இந்தியா திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்த மேக் இன் இந்தியா திட்டத்திற்கு சுவீடன் முக்கிய பங்காற்றுகிறது.
தொடர்ந்து சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வன் நிருபர்களிடம் பேசுகையில்; இந்தியாவின் புதிய உருவாக்கம் குறித்து நான் பாராட்டுகிறேன். இது தொடர்பாக எனது கருத்து என்னவெனில் இந்த கண்டுபிடிப்புகள் , உருவாக்கம் இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணையாக இருக்கும். என்றார். முன்னதாக பிரதமர் மோடி அந்நாட்டு அரசர் கஸ்டாபை சந்தித்து பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஏப்-201808:11:31 IST Report Abuse
Srinivasan Kannaiya சுய விளம்பரம் சோறு போடாது... மக்களின் வாக்கை பெற்று தராது... சுவீடன் மக்கள் உங்களக்காகா வாக்கு அளிக்கமுடியாது.......
Rate this:
Share this comment
Cancel
18-ஏப்-201801:27:48 IST Report Abuse
ஆப்பு இந்த ஸ்வீடன் நாட்டுக் காரங்க கம்பெனிதான் போஃபோர்ஸ்....1.4 பில்லியன் அமெரிக்க டாலர் பெருமானத்துக்கு நமக்கு ஹோவிட்ஸர் துப்பாக்கிகளை விற்று ஹிந்துஜா, கொட்ரோச்சி கூட்டுடன் காங்கிரஸ் ஊழல் செய்து கல்லா கட்டுனாங்க. இப்போ இதே நாட்டோட ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாச்சு. நடத்துங்க இனி உங்க வரிசைக்கு கல்லா கட்டுங்க. ராம ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் ஸ்வீடனுக்கு கவலையில்லே... மக்களும் பழசையெல்லாம் மறந்தாச்சு.
Rate this:
Share this comment
Cancel
Gautham Tholkapiyan - Madurai,இந்தியா
18-ஏப்-201800:15:33 IST Report Abuse
Gautham Tholkapiyan நிக்காம ஓடு..ஓடு..ஓடு..ஓடு..ஓடு..ஓடு..
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai ,இந்தியா
17-ஏப்-201821:11:20 IST Report Abuse
Shanu இந்தியாவில் பெரிய பிரச்சினை வந்தவுடன் வெளி நாட்டுக்கு மோடி ஓடி விடுவார். இவர் கடவுளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
poonguzhali - singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201820:26:03 IST Report Abuse
poonguzhali பூனை கண்ணை மூடிகொண்டால் உலகமே இருண்டுவிடுமாம். புத்தாக்கங்கள் தேடுபவருக்கு அதன் வாய்ப்புகள் திறந்தே இருக்கு. மேலும் பல அலுவலக தொடர்புகள் எளிமையாக்கப்பட்டிருக்கிறது. அல்ப புத்தியுள்ள சில அதிகாரிகள் (அவர்களும் அரசியலினால்) தன்னையும் தன் பதவியையும் தாழ்த்திக்கொண்டு ஊழலில் முக்கிய பங்கு வகிப்பதால் மட்டுமே நமக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் தாமதமாகின்றன.. வருடம் 365 நாட்களும் உழைக்கும் ஒருவரை தூற்றுவதை தவிர, நமக்கு வேண்டியதை எடுத்து சொல்லி பெறுவதற்கு, திருத்தங்களுடன் சில கொள்கைகளை ஏற்பதற்கு முயற்சிக்கும் சிறப்பான தமிழக தலைமை இருந்தால் , நாமும் நன்மை அடையலாம்.
Rate this:
Share this comment
Yezdik Damo - Chennai,இந்தியா
18-ஏப்-201800:07:33 IST Report Abuse
Yezdik Damoஊழலை ஒழிப்பேன் அப்படின்னு சொல்லி வந்தவர்,அந்த ஊழலை ஒழிக்க எந்த புதிய சட்டத்தையும் கொண்டு வரவில்லை இதுவரை. ஊழலை ஒழிக்காமல் வளர்ச்சியே காணமுடியாதுங்க அம்மணி....
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-ஏப்-201818:28:23 IST Report Abuse
Kuppuswamykesavan பிரதமர் ஐயா, ஏடிஎம்களில், 2000ரூபா நோட்டுக்கள் கிடைக்கலைனு சொல்றாங்க, பொதுமக்கள். இந்த பிரச்சனைய தீர்க்க முயலுங்கையா.
Rate this:
Share this comment
poonguzhali - singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201820:27:17 IST Report Abuse
poonguzhaliஅதற்கு தான் நிதி அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறார்........
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-ஏப்-201818:25:57 IST Report Abuse
Kuppuswamykesavan " மேக் இன் இந்தியா ", வெற்றி பெற பிரதமர் மோடிஜியும் தான், அவரால் முடிந்தளவு கஷ்டப்பட்டு முயற்ச்சிக்கிறார் எனலாம் தானே?. முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார், என்ற பழமொழி போல.
Rate this:
Share this comment
Cancel
Jamesbond007 - Nagercoil,இந்தியா
17-ஏப்-201818:24:29 IST Report Abuse
Jamesbond007 அய்யா ஸ்வீடன் பிரதமரே, மோடியை எங்க நாட்டுக்கு சீக்கிரமா திருப்பி அனுப்பிவிடுங்க, இங்க தலைக்கு மேல பிரச்சனை இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
17-ஏப்-201818:19:15 IST Report Abuse
sundaram அடுத்து அக்டோபர் 31 ம் தேதி குஜராத்தில் சைனாவில் செய்து மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் திறக்கப்பட இருக்கும் படேல் சிலை விழாவுக்கு சுவீடன் பிரதமர் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Appavi Tamilan - Chennai,இந்தியா
17-ஏப்-201818:14:06 IST Report Abuse
Appavi Tamilan உண்மை தெரியாம பாராட்டி இருக்காங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை