ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ஹரியானாவில் ,இளம்பெண்கள், மொபைல், பயன்படுத்த ,தடை

சோனிபட்:ஹரியானா மாநில கிராமத்தில், மொபைல் போன் பயன்படுத்த, இளம்பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை, அமலுக்கு வந்து உள்ளது.
ஹரியானா மாநிலத்தில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சோனிபட் மாவட்டம், இஷாபூர்கெரி கிராமத்தில், ஊராட்சித் தலைவராக இருப்பவர், பிரேம்சிங். இவர், தங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்கள், இன்டர்நெட் வசதி உள்ள மொபைல் போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் உள்ளிட்ட நாகரிக உடை அணியவும் தடை விதித்தார்.
இஷாபூருக்கு அருகில் உள்ள மற்ற சில ஊராட்சிகளும், இந்த தடை உத்தரவை வரவேற்றன. ஆனால், இஷாபூர் கிராமத்து பெண்கள், இந்த உத்தரவுக்கு கட்டுப்படவில்லை. இந்நிலையில், மொபைல் மற்றும் நாகரிக உடை ஆகியவற்றுக்கான தடை, அமலுக்கு வந்து விட்டதாக, பிரேம்சிங் நேற்று தெரிவித்தார்.
இதுபற்றி, பிரேம்சிங் கூறியதாவது:இன்டர்நெட் வசதி உள்ள மொபைல் போன் பயன்படுத்தும் இளம்பெண்கள், இளைஞர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, காதல் திருமணம் செய்கின்றனர். நாகரிக உடை அணிவதால், மற்ற ஆண்களை எளிதில் கவர முடிகிறது.பெற்றோருக்கு தெரியாமல், சில பெண்கள், காதலர்களுடன் சென்று விட்டனர். அதனால் தான், இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம். சாதாரண மொபைல் போன் பயன்படுத்த தடை இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shanmuga Sundaram - Bangalore,இந்தியா
18-ஏப்-201812:13:02 IST Report Abuse
Shanmuga Sundaram bak was Janata Party?
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
18-ஏப்-201811:56:07 IST Report Abuse
Syed Syed muzuvivaramillada thadi velaiku agadhu.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
18-ஏப்-201811:09:02 IST Report Abuse
pattikkaattaan நடக்கவேண்டியது எப்படியும் நடக்கும்
Rate this:
Share this comment
Cancel
ArulKrish -  ( Posted via: Dinamalar Android App )
18-ஏப்-201810:22:06 IST Report Abuse
ArulKrish super....please implement all over the country for all age groups and gender...
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
18-ஏப்-201810:21:49 IST Report Abuse
christ ஒரு விதத்தில் நல்ல விசயமாகவே படுகிறது
Rate this:
Share this comment
Cancel
பிஜெபியின்எதிரிக்குஎதிரி ஆனால் நீ இந்தியாவில் தான் இருக்கிறாய்.அதனால் தான் அரசுக்கெதிராக தினமும் கூவுகிறாய்.அராபிய நாடாக இருந்திருந்தால் நீயெல்லாம் வாய்திறக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
UshaDevan -  ( Posted via: Dinamalar Android App )
18-ஏப்-201808:38:15 IST Report Abuse
UshaDevan அவசிய அவசர ஆபத்துக்களை தெரிவிக்க வந்த கருவி செல்பி, காமரா விபரீதங்களை தவிர்த்தால் நன்மையே.
Rate this:
Share this comment
Cancel
suresh - Tirupur,இந்தியா
18-ஏப்-201808:24:30 IST Report Abuse
suresh ஒரு புறம் பிரதமர் digital india என்கிறார்... மறுபுறம் அவர் கட்சி ஆளும் மாநிலத்தில் இப்படி ஒரு சட்டம்... என்ன டிஜிடலோ என்ன வளர்ச்சியோ...? ஒரே கு(க)ஷ்டமப்பா.........
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஏப்-201808:05:54 IST Report Abuse
Srinivasan Kannaiya நல்ல மாற்றம்... பல பிரச்சினைகள் உண்டாக காரணம் கேமரா மொபைல்களாலதான் . எனவே அதை தடை செய்வது அவசியம்
Rate this:
Share this comment
Cancel
Natesaganapathy KH - Chennai,இந்தியா
18-ஏப்-201807:26:35 IST Report Abuse
Natesaganapathy KH தடை ஹரியானா முழுதுமா அல்லது ஹரியானாவில் ஒரு கிராமத்திலா? தடை விதித்தவர் கிராம தலைவரா அல்லது மாநில முதல்வரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை