2ம் வகுப்பு வரை வீட்டு பாடம் கூடாது! ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
2ம் வகுப்பு வரை வீட்டு பாடம் கூடாது!
ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

சென்னை: 'இரண்டாம் வகுப்பு வரை, வீட்டு பாடம் கூடாது; இரண்டாம் வகுப்பு வரை, இரு பாடங்கள், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, மூன்று பாடங்களை மட்டுமே கற்பிக்க வேண்டும் என, தேசிய பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

2ம் வகுப்பு,வீட்டு பாடம்,கூடாது,ஐகோர்ட்,மத்திய அரசு,தகவல்

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர், எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்த மனு:மத்திய இடைநிலை கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், என்.சி. இ.ஆர்.டி., நிர்ணயித்ததை விட, கூடுதல் பாடங்களை படிக்கின்றனர். இதனால், அதிக புத்தகங்களை சுமக்கின்றனர். என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிடும் புத்தகங்களை வாங்காமல், தனியார் வெளியிடும் புத்தகங் களை, பள்ளிகளில் வாங்குகின்றனர்.


எனவே, என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டப்படி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் குறிப்பிட்ட பாடங்களை மட்டுமே நடத்த, உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி, கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தது. மனு வுக்கு, மத்திய அரசு பதில் அளிக்கும்படி, உத்தர விட்டிருந்தார். அதன்படி, மத்திய பள்ளிகல்வித் துறை சார்பில், என்.சி.இ.ஆர்.டி., செயலர், ஹர்ஸ்குமார் தாக்கல் செய்த பதில் மனு:


பள்ளி பாடங்களுக்கு என, தனி பாடத்திட்டத்தை வகுத்து, தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள், சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை அடிப்படையில், பாடத்திட்டங்களை கொண்டு வருகிறோம். அனைத்து பாடங்களுக்கும், வகுப்புகளுக்கும் என, ஒவ்வொரு ஆண்டும், 364 தலைப்புகளில், புத்தகங்களை வெளியிடுகிறோம். இரண்டாம் வகுப்பு வரை, வீட்டுப்பாடம் இருக்கக் கூடாது.


மூன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, வாரத்துக்கு இரண்டு மணி நேரம், வீட்டுப்பாடம் இருக்க வேண்டும். நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தினசரி, ஒரு மணி நேரம்; உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தினசரி, இரண்டு மணி நேரம் என, வீட்டுப்பாடம் இருக்கும்படி பரிந்துரைக் கப்பட்டுள்ளது.

மனப்பாடம் செய்வதை விட, குழந்தைகள் தானாக முன்வந்து, படிப்பதற் கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். முதல் மற்றும் இரண்டாம் வகுப்புக்கு,

Advertisement

மொழி பாடம் மற்றும் கணிதம் என, இரண்டு பாடங்கள்; மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, மூன்று பாடங்கள் மட்டுமே, கற்பிக்க வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில், அனைத்து பாடங்களையும் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு நாளும், இரண்டு அல்லது மூன்று பாடங்கள் என, அந்த பள்ளியே முடிவு செய்து கொள்ளலாம். எல்லா நாட்களிலும், அனைத்து புத்தகங்களையும் கொண்டு வர தேவை யில்லை. தினசரி, இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் கொண்டு வரலாம்.


என்.சி.இ.ஆர்.டி., வெளியிடும் புத்தகங்கள், மாணவர்கள் வாங்கும் விலையில் உள்ளன. பள்ளிகளில் இருந்து தான் புத்தகங்களை வாங்க வேண்டும் என, மாணவர்களை, பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201800:45:04 IST Report Abuse

Mani . Vஇப்பொழுது உள்ள தமிழக மந்திரிகள் "சை, நாம் படிக்கும் போது இந்த நடைமுறை இல்லாமல் போய் விட்டதே" என்று வருத்தப்படுவார்கள் (என்னது, மொத்தமே படித்தது இரண்டாம் வகுப்பு வரைதானா?).

Rate this:
20-ஏப்-201814:24:13 IST Report Abuse

மைதிலிகுறைவாக கொடுக்கலாம்.

Rate this:
Advaiti - Chennai,இந்தியா
20-ஏப்-201812:51:29 IST Report Abuse

Advaitiசரியான முடிவு, எல். கே. ஜிலயே ஒழுங்கா உங்க பையன் எழுத மாட்டேங்கறான், விளையாடிட்டே இருக்கான், பேசிட்டே இருக்கான்னெல்லாம் ரிபோர்ட். மூணாவதுலேந்து ஹோம் வொர்க் தான் சரி. விளையாடிட்டே, குழந்தைகளுக்குப் புடிச்சாப்ல ரைம்ஸ் வடிவுல எல்லாம் க்ரியேட்டிவா பாடம் சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க நெறையா டீச்சர்ஸ், குழந்தைகளுக்கும் படிக்கறோம்னு தெரியாமலே பதிஞ்சிடுது. மூட்டை தேவையே இல்ல. நாமிருவர் நமக்கிருவர், நாமிருவர் நமக்கொருவர், நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை, கேவலம், அந்த ஒரு புள்ளையும் இஞ்சி நீர், இல்ல காம்பெடிஷன் எக்ஸாம்க்கு தயார் ஆகனும், நா வேலைக்குப் போவேன், புள்ள வெளில போகக்கூடாது, நான் டிவி, வாட்ஸுப், ஃபேஸ் புக் பாப்பேன், புள்ள படிக்கனும், இஞ்சினீர் ஆனதும் கை நெறையா சம்பாதிக்கற வேலைக்குப் போகனும், எஜுகேஷன் லோன், ஹவுசிங் லோன், கார் லோன், முப்பது வயசுல கல்யாண விற்பனை, டப்பால டாக்டர்டேந்து குழந்தை 1 -2 லக்ஷத்துக்கு, அமெரிக்காவுல புள்ளய பாத்துக்க ஆயா வேலைக்கு உங்களுக்கும், உங்க சம்மந்தியம்மாவுக்கும் ஆறாறு மாசம் ஃப்ரீ ட்ரிப், போனஸ் உங்க புருஷனுக்கும், திருப்பி நீங்க பண்ணின அதே சைக்கிள், நீங்க ஹோமுக்கு போறது நிச்சயம், இதெல்லாம் ஒரு பொழப்பு, ஐந்து வயது வரை அரவணைப்போம் - சாணக்யர்.

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
20-ஏப்-201811:16:19 IST Report Abuse

கைப்புள்ளவீட்டுப்பாடம் என்பது ஒரு ரெஸ்பான்சிபிலிட்டி (responsibility). ரெஸ்பான்சிபிலிட்டி இருந்தால் தான் ஒரு குழந்தை டைம் மேனேஜ்மேண்ட் என்பதை கற்று கொள்ள முடியும். தனக்கு இருக்கும் மல்டிபிள் ரெஸ்பான்சிபிலிட்டிகளையும் கையில் இருக்கும் நேரத்தையும் வைத்து அதுக்கு ஒரு நேரத்தை ஒதுக்கி கொள்ள, ஒரு கணக்கீடு செய்து கொள்ள நாம் உதவ வேண்டும். அப்போதான் சின்னதில் இருந்தே ஒரு பொறுப்போடு வளரும். குழந்தைக்கு அதனுடைய ரெஸ்பான்சிபிலிட்டிக்கு அதுவே அக்கவுண்டபிள் என்று புரிவதற்கு இதுதான் நல்ல சமயம். அப்போதான் வாழ்க்கை என்பது பன்முக தன்மை கொண்டது, பல விதமான ரெஸ்பான்சிபிலிட்டிகளையும் நாம் வாழ்க்கையில் ஹேண்டில் செய்ய வேண்டி வரும் என்று குழந்தை கற்று கொள்ளும். அதை விட்டு விட்டு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று சொல்வது எப்படி ஏற்புடையதாகும்?

Rate this:
Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
20-ஏப்-201810:48:11 IST Report Abuse

Vakkeel VanduMuruganவீட்டு பாடம் இல்லனா, பசங்க விடீயோ கேம் விளையாடுவாங்க இல்லனா டிவி பாப்பாங்க. இந்த திட்டத்தினால் பசங்க குட்டிசுவராவது நிச்சயம்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஏப்-201808:43:50 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎந்த திட்டமும் இல்லாமல்... படிக்க வழி வகைகள் உண்டா...

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
20-ஏப்-201808:14:33 IST Report Abuse

Kuppuswamykesavanபுள்ளைங்க நிஜமாகவே படித்து தகுதியானவர்களாக வந்தால் சரிதான். அதே நேரம், விளையாடவும் ஒரு பீரியட் நேரம் ஒதுக்கினால், அது இன்னும் கூடுதல் சரிதான், இந்த கோடையில் கூட. வீட்டில் இருந்தால், தியேட்டர், டிவி, மொபைல் இன்டர்நெட், வீடியோ கேம் மற்றும் தூக்கம், இதானே நடக்கும் பொதுவாக.

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
20-ஏப்-201807:33:07 IST Report Abuse

தங்கை ராஜாபள்ளிப் பிள்ளைகளை சுமைதூக்கிகளாக மாற்றி விட்ட கொடுமை மாற வேண்டும். சுயமாக சிந்திக்கும் திறனுள்ள மாணவ சமுதாயம் உருவாக்கப்பட வழி வகைகள் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

Rate this:
தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா
20-ஏப்-201807:27:25 IST Report Abuse

தம்பி அதை பள்ளிகள் தான் முடிவு செய்ய வேண்டும் பள்ளி கட்டணங்களை அரசு நிர்ணயித்தது செய்தார்களா இல்லை பெற்றோரும் கவலையில்லாமல் பள்ளிகள் சொல்லும் கட்டணத்தை தான் செலுத்துகிறார்கள் ஆகவே இது போன்ற விஷயங்களில் அரசு தலையிடாமல் இருப்பது நலம்

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
20-ஏப்-201807:09:47 IST Report Abuse

தேச நேசன் வீட்டுப்பாடம்தான் விளையாட்டின் எதிரி . பெற்றோருக்கும் அனாவசிய சுமை . பள்ளியில் படிக்காததை மாணவன் வீட்டில் படிக்கப்போவதில்லை .ஒரே லாபம் வீட்டுபாடத்தால் கொஞ்சநேரம் டிவி பக்கம் போகமுடியாமல் அடிப்பதுதான்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement