நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை ஸ்டாலின் வலியுறுத்தல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை
ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:''நிர்மலா தேவி விவகாரம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என,தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

 நிர்மலாதேவி, விவகாரத்தில் ,சி.பி.ஐ., விசாரணை , ஸ்டாலின் வலியுறுத்தல்


சென்னை, கொளத்துாரில், தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட,ரேஷன் கடையை, ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி:


ஊழல் வெளியாகிவிடும் என்ற பயத்தால், 'லோக்பால்' சட்டத்தை, தமிழக அரசு கொண்டு வராமல் உள்ளது. இதை, உச்ச நீதிமன்றம் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. காவிரி

பிரச்னையை திசை திருப்பவே, நிர்மலா தேவி விவகாரம்உள்ளிட்டவை கிளப்பப்படுகிறதோ என்ற, சந்தேகம் உள்ளது. பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜாவின் அநாகரிகமான பதிவு, கவர்னர் நடவடிக்கைகள் போன்றவற்றை பார்க்கிறபோது, மக்களை திசை திருப்பும் எண்ணத்தில், இவை நடப்பதாகவே கருதுகிறேன்.


மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகை யில், கவர்னர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்; அவரை திரும்ப பெற வேண்டும். அதற்காக, எங்களுடைய போராட்டம் தொடரும். பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம், தமிழகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதில், அனைத்து உண்மைகளும் வெளிவர, உயர் நீதிமன்ற மேற்பார்வையில், சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும் என, வலியுறுத்தினேன்.அரசு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால்,சி.பி.சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி.,யை மாற்றி உள்ளனர். அவர் நேர்மையானவர். உண்மை வெளி யாகி விடும் என்ற அச்சத்தில், சம்பந்தப்பட்டவர் களை தப்பிக்க வைக்கும் முயற்சியில்,

Advertisement

அரசு ஈடு பட்டுள்ளது. கவர்னர் அமைத்துள்ள விசாரணை ஆணையத்தில், நியாயம் கிடைக்காது. சம்பந் தப்பட்டவர்களே, விசாரணைக்கு உத்தரவிடு வது வேடிக்கையானது. இவ்வாறு கூறினார்.


கட்சியினருக்கு அழைப்பு!:

'காவிரி உரிமையை நிலைநாட்ட, அனைத்து மாவட்டங் களிலும்,வரும்,23ல், மாலை,4 மணி முதல், 5 மணி வரை, மனித சங்கிலி அறப் போராட்டம் நடைபெறும். இதில், அனைவரும் பங்கேற்க வேண்டும்' என, கட்சியினருக்கு, ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittal Anand - Chennai,இந்தியா
21-ஏப்-201817:16:03 IST Report Abuse

Vittal Anandஎது எப்படியோ. சுடலை தன் முகத்தை நன்கு பரிபாலிக்கிறார். இவர் தாத்தா வா பேரனா என்று வியக்கும்படி அமைந்துள்ளது . வாழ்க சிங்கப்பூர் மேக்கப்

Rate this:
bal - chennai,இந்தியா
20-ஏப்-201820:40:19 IST Report Abuse

balநீர் பதவியில் இருந்திருந்தால் சிபிஐ யை அழைத்திருப்பீர்களா...எங்கள் போலீஸ் துறை மிகவும் திறமையானது என்றியிருப்பீர் அல்லது அந்த பெண்மணி ரொம்ப சுத்தமானவர் என்று கலைமாமணி பட்டம் தந்திருப்பீர்.

Rate this:
ram - chennai,இந்தியா
20-ஏப்-201818:14:08 IST Report Abuse

ramசமீபத்தில் உங்க கட்சி ல கூட யாரையோ உங்க தொண்டனே தப்பு பண்ணிட்டாருன்னு ஒரு செய்தி வந்துசே ஸ்டாலின்..??? நீங்க இத பத்தி பேசலாமா...???

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
20-ஏப்-201817:47:39 IST Report Abuse

Sundaramகாவிரி பிரச்சனையை தொடர்ந்து ஆசிரியை விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-ஏப்-201815:33:02 IST Report Abuse

Cheran Perumalஇவரெல்லாம் கண்டிக்கும் அளவுக்கு கவர்னரின் நடத்தை அமையவில்லை. துர்க்கா ஸ்டாலின் ஒருமுறை அவரது கோவில் வழிபாடு பற்றி குறிப்பிட்டபோது ஸ்டாலின் உடல்நிலைக்காக கோவில்களுக்கு செல்கிறீர்களா என்று கேட்கிறார்கள், அதற்காக இல்லை, அப்பாவும் மகன்களும் செய்த பாவங்கள் என் மக்கள் தலையில் விடியக்கூடாதே என்றுதான் செல்கிறேன் என்று கூறியதாக சொன்னார்கள்.

Rate this:
grg - chennai,இந்தியா
20-ஏப்-201815:29:55 IST Report Abuse

grgஅப்பறோம் சிபிஐ ஏதாச்சும் சொன்ன - அவிங்க கூண்டு கிளிகள் -

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-ஏப்-201815:27:53 IST Report Abuse

Cheran Perumalசம்பந்தப்பட்டவர்களே என்று கவர்னரை சொல்லுகிறாரா? தகுந்த ஆதாரத்துடன் பேசுகிறாரா அல்லது கெஜ்ரி யைப்போல பின்னர் பாவ மன்னிப்பு கோருவாரா?

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஏப்-201815:25:58 IST Report Abuse

Endrum Indianநோ சி .பி .ஐ விசாரணை ? தீர்ப்பு முதலில் பிறகு தான் விசாரணை???? செய்யுமா இந்த அநீதிபதிகள் நிறைந்த கோர்ட் ????செய்யவே செய்யாது? பிறகென்ன குற்றம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

Rate this:
20-ஏப்-201814:43:53 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்உங்கள் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட அந்த பெண் செய்தி வாசிப்பாளர் விஷயத்தையும் CBI விசாரிக்கலாமா?

Rate this:
venkat subramanian - Tuticorin,இந்தியா
20-ஏப்-201814:14:08 IST Report Abuse

venkat subramanianஎன் பொறுமைக்கும் எல்லை உண்டு பேசாம போயுடு ஸ்டாலின் சார் சிறுச்சிருவேன்

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement