தேடி வந்த தேசிய விருது : சந்தோஷத்தில் சாஷா| Dinamalar

தேடி வந்த தேசிய விருது : சந்தோஷத்தில் சாஷா

Added : ஏப் 22, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தேடி வந்த தேசிய விருது : சந்தோஷத்தில் சாஷா

காற்றை குடித்து இசையை சுரக்கும் புல்லாங்குழலுடன் போட்டியிடும் இதழ் குரல்...கீ போர்டின் கருப்பு வெள்ளை கீக்களுடன் கலகலப்பாய் கலந்தாடும் விழிச்சூழல்...கழுத்து வளைவில் நெளிந்து, நெங்க துவிக்கும் வழலின்கள், விரல்களுக்குள் ஊடுருவி உறவாட உருகிடும் கிடார்கள், சிரிக்கும் போதெல்லாம் தெறித்திடுமே சிம்பொனி, நீ தானே இன்னிசையை உற்பத்தி செய்யும் மியூசிக்கல் கம்பெனி...தமிழ் திரையில் குரலிசையின் அதிபதி...சாஷா திருப்பதி...மணிரத்தினம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தில் 'வான் வருவான்' பாடலுக்காக தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தில் நம்முடன் பேசுகிறார்...

* தேசிய விருது அறிவிப்பு?அறிவிப்பு வந்ததும் ஒரு 30 நிமிடம் அழுது விட்டேன். 'வான் வருவான்' பாடலுக்கு தேடி வந்த இந்த தேசிய விருதால் என் பொறுப்பு கூடி இருக்கிறது. இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது கூடுதல் உற்சாகத்தை தருகிறது.
* வான் வருமான்?இந்த பாடல் எனக்கு ஸ்பெஷல், என்னை மிகவும் பாதித்த பாட்டும் இது தான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த பாடலை கேட்கும் போது, ஒரு இனிக்கும் வலியை நம்மால் உணர முடியும். 2020 ல் நான் ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்கப் போகிறேன்; அவளுக்கு 'வான்' என்ற பெயர் வைக்க முடிவு செய்துள்ளேன்.
* ஏ.ஆர்.ரஹ்மான்?இந்த விருது என் கடின உழைப்பிற்கு கிடைத்தது என்று நான் சொல்ல மாட்டேன். ஏ.ஆர்.ரஹ்மானின் கடின உழைப்பிற்கு கிடைத்த விருது.
* இயக்குனர் மணிரத்தினம்?பாடல் ரிக்கார்டிங் நேரங்களில் அவரை நான் பார்த்து இருக்கிறேன். அருமையான மனிதர், இயக்குனர். அவரது படத்தில் பாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது கடவுள் கொடுத்த பரிசு.
* தமிழில் பாட்டு ஓ.கே., பேச்சு வருமா?சென்னை வரும்போதெல்லாம் கொஞ்சம், கொஞ்சம் தமிழில் பேச கற்றுக் கொள்கிறேன். விரைவில் சரளமாக தமிழில் பேசுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ் மொழியை நான் காதலிக்கிறேன். தமிழ்நாடு எனக்கு இரண்டாவது வீடு.
* நீங்கள் விரும்பும் பாடகர்கள்?சித்ரா, சின்மயி...இருவரிடமும் இருந்து நிறைய இசை குறித்து விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். இவுர்கள், என்னைப் போன்ற புதிய பாடகர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுப்பவர்கள். பாடகர் பென்னியின் துள்ளல் ஸ்டைலை ரசிப்பேன். என்றென்றும், நான் விரும்பும் பாடகர் ஏ.ஆர்.ரஹ்மான் தான்.
* ஏ.ஆர்.ரஹ்மான் குரலில்?'குரு' படத்தில் 'ஆருயிரே ஆருயிரே மன்னிப்பாயா என் சகியே'... ஆஹா! என்ன ஒரு குரல், கேட்டாலே காற்றில் பறப்பது போல இருக்கும்.
* நீங்கள் பாடியதில் பிடித்தது?கோச்சடையான் - 'வாடா வாடா', காவியத் தலைவன் - 'ஏ மிஸ்டர் மைனர்', லிங்கா - 'என் மன்னவா', ஓ காதல் கண்மணி - 'காரா ஆட்டக்காரா', 24 - 'புன்னகையே', அச்சம் என்பது மடமையடா - 'ராசாலி'...
* நடிக்க வருவீங்களா?ஏற்கனவே உல்க்கா மயூர் எழுதி இயக்கிய 'ஐ கிளவுட்' என்ற நாடகத்தில் நடித்து இருக்கிறேன். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X