'பெண்களுக்கு எதிரான குற்றம் பற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை' Dinamalar
பதிவு செய்த நாள் :
'பெண்களுக்கு எதிரான குற்றம் பற்றி
பிரதமர் மோடிக்கு கவலை இல்லை'

புதுடில்லி: ''நாட்டில், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாலும், தலித்து கள் மிரட்டப்பட்டாலும், அதுபற்றி, பிரதமர், நரேந்திர மோடிக்கு கவலை இல்லை; மீண்டும் பிரதமர் பதவியை அடைய வேண்டும் என்பது மட்டுமே, அவரது விருப்பம்,'' என, காங்., தலைவர், ராகுல் கூறியுள்ளார்.

விழிப்புணர்வு


டில்லியில் நேற்று, 'அரசியலமைப்பு சட்டத்தை காப்போம்' என்ற பெயரில் விழிப்புணர்வு பிரசாரத் திட்டத்தை, காங்., தலைவர், ராகுல் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:நாடு, பற்றி எரிந்தாலும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாலும், தலித்துகள் தொடர்ச்சியாக மிரட்டப்பட்டாலும், அது பற்றி, பிரதமர் நரேந்திர மோடி கவலைப்படுவதாக தெரியவில்லை. மீண்டும் பிரதமர் பதவியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்பதில் தான், மோடி உறுதியாக உள்ளார்.மோடியின் ஆட்சியில், அரசியலமைப்பு சட்ட மாண்புகள் அபாய கட்டத்தில் உள்ளன. இந்த நிலை தொடர்வதை, காங்., ஒருபோதும் அனுமதிக்காது. உச்ச நீதிமன்றத்தை இயங்க விடாமல், மத்திய அரசு தடுக்கிறது.

பார்லிமென்டை, மத்திய அரசு முடக்கிவைத்துள்ளது.

வாக்குறுதி


பார்லி.,யில், நிரவ் மோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நான், 15 நிமிடங்கள் பேசினால் போதும்; பிரதமர் மோடி, அங்கிருந்து உடனே ஓட்டம் பிடிப்பார். ஆர்.எஸ்.எஸ்., கொள்கையில் முழு நம்பிக்கை உள்ள நபர்களால், மத்திய அரசின் கீழ் உள்ள அமைப்புகள் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த தேர்தலின்போது, வேலை வாய்ப்பு உட்பட பல்வேறு வாக்குறுதிகளை, பிரதமர் மோடி அள்ளி வீசினார். அவை எதையும், அவரால் நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில், அடுத்த தேர்தலில், மேலும் புதிய பல வாக்குறுதிகளை, அவர்அள்ளி வீசுவார்.இவ்வாறு அவர் கூறினார்.

அமித் ஷா பதிலடி


காங்., தலைவர், ராகுலின் விமர்சனங்கள் குறித்து, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா கூறியதாவது:காங்., கட்சியின் வம்சாவளி அர

Advertisement

சியலை பாதுகாக்கவே, 'அரசியலமைப்பு சட்டத்தை காப்போம்' என்ற பெயரில், பிரசார திட்டத்தை, ராகுல் துவக்கி உள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக, ராகுலுக்கு உள்ள வெறுப்புணர்வு, இந்தியாவுக்கு எதிரானதாக திரும்பி உள்ளது.அரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரே கட்சி, காங்., மட்டுமே. மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், தேர்தல் கமிஷன், ராணுவம், உச்ச நீதிமன்றம் என, பல்வேறு அமைப்புகள் மீது, பல்வேறு சமயங்களில், காங்., தாக்குதலை தொடுத்துள்ளது; இவை அனைத்தின் மீதும் நம்பிக்கை வைக்காத, காங், தற்போது, அவை ஆபத்தில் உள்ளதாக கூறுகிறது. 1975ல், நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்ததும், காங்கிரசே. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (61+ 112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
24-ஏப்-201822:33:28 IST Report Abuse

s t rajanRaw Fool என்று நிருபிக்கிறார். மக்களின் ஆசை மோடி தான் ப்ரதமராக இன்னும் பத்து வருடமாவது இருக்க வேண்டும்.அவருக்கு முன் நிக்கக்கூட அருகதையில்லாத குடும்ப ஊழல் கொள்ளைக்காரன் நீங்கள். பயத்தில் உளறிக் கொட்டியே காங்கிரஸை அழித்துவிடும் நற்பணியைத் தொடருங்கள்.

Rate this:
SS -  ( Posted via: Dinamalar Android App )
24-ஏப்-201821:41:20 IST Report Abuse

SSIndians, mark my word. Until you throw away these parties out of your interest, you and india will really never grow. I was once a BJP supporter, when Vajpayee was the PM of india. Now i really hate modi and BJPs. These people must understand one thing. India policy is Unity in Diversity. I am hindu and am saying this. we dont need digital. All we need is our nature and natural resources, farmers and farming lands. See how india is changing. Once farmers and farming are the backbone of india. Now we are importing paddies. Mark these words also. Soon there will be nothing in india. Water, tress, farming land, food and even good aor

Rate this:
downstrodden - thiruvallur, chennai,இந்தியா
24-ஏப்-201820:13:15 IST Report Abuse

downstrodden 2004-2014 வரை ராகுல் ரொம்ப கவலைபட்டவர்.

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஏப்-201820:10:12 IST Report Abuse

Lion Drsekarதம்பி ஏதாவது சொல்லிவிடப்போகிறோம், வந்தே மாதரம்

Rate this:
downstrodden - thiruvallur, chennai,இந்தியா
24-ஏப்-201820:00:41 IST Report Abuse

downstrodden இந்தியா மிக வளர்ந்த நாடுகள் list இல்லாம வளர்ந்து வரும் நாடுகள் listல இருக்க காரணமே உன் family.

Rate this:
bal - chennai,இந்தியா
24-ஏப்-201819:44:51 IST Report Abuse

bal1984 இல் உங்கள் அப்பா செய்த சீக்கிய படுகொலைக்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையே இதுவரை... வெட்கமிருந்தால் நீங்கள் அம்மாவுடன் இத்தாலி ஓடிப்போயிருக்க வேண்டும்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-ஏப்-201818:57:09 IST Report Abuse

Pugazh Vஇந்த பிஜேபி வாசகர்கள் இருக்காங்களே, எத்தனை முறை சொன்னாலும் உறைக்காத ஜென்மங்கள். அதே பப்பு சொப்பு இத்தாலி என்கிற பழைய பல்லவியை பிலாக்கணம் பாடறாங்க. இந்த அவல ஆட்சி யை எவருமே விமர்சிக்க கூடாதா? இந்த பிஜேபி அரசின் ஒவ்வொரு துறையும் மக்களின் மீது வரிச்சுமைகளை சொல்லி சொல்லி ஏற்றி சாவடிக்கிறது. இருந்தாலும் தொடச்சுப் போட்டுண்டு வக்காலத்து வாங்கறா. நேக்கே போறும்னு ஆயிடுத்து.

Rate this:
Rajan - chennai,இந்தியா
24-ஏப்-201820:06:35 IST Report Abuse

Rajan//புகழ் அவர்களே// நான் ஒரு போதும் பப்பு என்று தனி மனித தாக்குதலில் ஈடுபடவில்லை...நீங்கள் சும்மா கத விடாதீங்க கருத்துக்களை முழுமையாக படிக்காமல்... சும்மா GST னு குதிக்காதீங்க ஜி., GST யை மோடி கண்டுபிடிக்கவில்லை. கிட்ட தட்ட 30 வருடங்களாக விவாதத்திலுள்ளது.. அதை மோடி அவரகள் செயல்படுத்தியுள்ளார் (அதை அவர் பாராளுமன்ற கூட்டத்தில் ஜூலை 1 2017 அன்று சொல்லியுள்ளார்).அப்போது உடன் இருந்தார் அப்போதைய ஜனாதிபதி (முன்னாள் காங்கிரஸ் நிதி அமைச்சர்) பிரணாப் அவர்கள்... பிரணாப் அவர்கள் கூட GST யை ஆதரித்தவர் தான்...வரி சுமை நம் மீது உள்ளது உண்மையே. ஆனால் நாட்டிற்கு எத்தனை பேர் இது வரையிலும் வரி ஏய்ப்பு ஈடுபட்டார்கள் என்று GST வருமானத்தை வைத்துப்பார்த்தால் புரியும். ஆனால் நீங்கள் அதை பார்க்க மாடீர்கள். மோடி மோடி மோடி னு .......

Rate this:
Manian - Chennai,இந்தியா
26-ஏப்-201805:54:42 IST Report Abuse

Manianஓசி, தாய் மதம் இட ஒதுக்கீட்டில் தகுதி அற்றவர்களை அரசாங்கத்தில் நியமித்தவர்கள், திருடர்களை அரசியல் வியாதிகளாக தேர்ன்தெடுத்தது எல்லாம் உன் போன்றவர்கள் தானே செய்தார்கள், இப்போ ராணுவம் உன்னை காப்பாத்தணும், இலவசமா ரயிலில் திருவாருர் குழுவுடன் டிக்கட் வாங்கம போகணும், காவேரியை முதலி தாரை வார்கானும் அப்புறமா அதை மறைக்க போராட்டம் .. எப்ப எப்ப உன் போன்ற மனோ வியாதி உள்ளவர்களை திருத்த - சுயமா சிந்திக்க வைக்க - ஈசனாலும் முடியாதே- இங்கே வந்து உலரும் வேளையில், ஒரு சில கராமங்களையாவது தத்தெடுத்து, அங்கே மக்களிடம் ஓடடை விற்காதீர்கள், தண்ணிர், மருத்துவம், ரோடுகள், போக்குவரத்து வரும் வரை நாணுண்ணாவிரதம் இருப்பேன் என்று ஒரு திராவிட தொண்டனாக நீ இருந்தால் உனக்கு படையல் போடுவோமே? செய்வாயா?...

Rate this:
24-ஏப்-201818:22:59 IST Report Abuse

kulandhaiKannanநாடு பற்றி எரிந்தால் மோடி எப்படி ஜெயிக்கமுடியும்? ராகுல் பித்தம் தலைக்கேறிவிட்டது

Rate this:
downstrodden - thiruvallur ,chennai.,இந்தியா
24-ஏப்-201816:40:21 IST Report Abuse

downstroddendownstrodden: இந்த ஜென்மத்துல நீ pm ஆகவே முடியாது .

Rate this:
24-ஏப்-201816:24:03 IST Report Abuse

கண்ணன்பப்பூவும் பிரம்மச்சாரிதான் . அவருக்கு குடும்பம் கிடையாது.அவர் யாருக்காக கோடிக்கணக்கில் பணம் சேர்க்கப் போகிறார். இந்த நாட்டு மக்களை காக்க வந்த ரக்ஷகன் . நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த குடும்பத்தின் வாரிசு. நாட்டுக்கு நல்லது செய்ய காத்திருக்கும் அவருக்கு பிரதமர் பதவி ஆசையே இல்லை. இன்னும் ஒரு 60 வருடம் வந்து ஆட்சி செய்து இந்த நாட்டினை காப்பாற்றுங்கள் கூடவே மம்தாவையும் லாலுவையும் வைத்துக்கொள்ளுங்கள் . பண மதிப்பிடப்படுகிறது நடவடிக்கையில் எத்தனை கோடிகள் தங்கள் வகையறாவுக்கும் தங்களுக்கும் நக்ஷ்டம் என்பது வெளியே சொல்ல முடியாது.ஆகையால் எவ்வளவு கூப்பாடு போட முடியுமோ அவ்வளவு கூப்பாடு போடுங்கள்.

Rate this:
மேலும் 49 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement