பா.ஜ., கூட்டணியா? : தேர்தல் நேரத்தில் முடிவாம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பா.ஜ., கூட்டணியா? : தேர்தல் நேரத்தில் முடிவாம்

சென்னை ''பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை முடிவு செய்யும்,'' என, லோக்சபா துணை சபாநாயகர், தம்பித்துரையும், தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும் ஒரே கருத்தை வலியுறுத்தி கூறினர்.

 Bharatiya Janata Party,AIADMK Alliance, Thambidurai,பாரதிய ஜனதா- அதிமுக கூட்டணி, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை,  
தமிழக அமைச்சர் ஜெயக்குமார், லோக் ஆயுக்தா, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், Bharatiya Janata Party-AIADMK Alliance, Lok Sabha Deputy Speaker Thambidurai,
Tamil Nadu Minister Jayakumar, Lok Ayukta, DMK Chief executive Stalin,

.சென்னை விமான நிலையத்தில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று அவர் அளித்த பேட்டி: தற்போது, பார்லிமென்டில் தனி கட்சியாகவே செயல்படுகிறோம். தமிழகத்தில், இரட்டை குழல் துப்பாக்கி என்று, ஒன்றும் இல்லை; ஒற்றைக் குழல் துப்பாக்கி தான் உள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக செயல்பட்டு வருகின்றன. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து,

தேர்தல் நேரத்தில், கட்சித் தலைமை முடிவு செய்யும்.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, 'லோக் ஆயுக்தா' அமைக்கவில்லை. அப்போது அமைக்காத, அக்கட்சி செயல் தலைவர், ஸ்டாலின், இப்போது அமைக்கப் போகிறாரா? மக்களை திசைதிருப்புவதற்காக, தி.மு.க.,வினர், இதுபோன்ற விஷயங்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் ஆட்சியில் செய்த, பல்வேறு ஊழல்களை வெளியே கொண்டு வர வேண்டியுள்ளது.இவ்வாறு தம்பித்துரை கூறினார்.

இது சரியான நேரம் இல்லை: ஜெயக்குமார்


''தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி முடிவு செய்யப்படும்,'' என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: கட்சி நாளிதழில், யார் வேண்டுமானாலும் கட்டுரைஎழுதலாம். ஒரு கட்டுரையாளர், கூட்டணியை முடிவு செய்ய முடியாது. எங்களுடைய நிலைப்பாடு தெளிவாக உள்ளது. நமது மாநிலத்தின் நலன் காக்கப்பட வேண்டும்.எனவே, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து

Advertisement

, அனைத்து திட்டங்களுக்கும், நிதியை பெறுகிறோம். இது ஒரு நிலைப்பாடு. அரசியல் ரீதியான இணக்கத்தை, தனிப்பட்ட முறையில், யாரும் முடிவு செய்ய முடியாது; கட்சி தான் முடிவெடுக்கும். உரிய நேரத்தில், கட்சி அறிவிப்பு வெளியிடும். தற்போதுள்ள சூழ்நிலையில், கூட்டணி கிடையாது. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி முடிவு செய்யப்படும். கூட்டணி முடிவு செய்ய, தற்போது, சரியான நேரம் இல்லை. தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் எதிராக செயல்படுவோர் உடன், கூட்டணி வைக்க முடியாது. அதை நிர்ணயம் செய்வது, கட்சி தான். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Roopa Malikasd - Trichy,இந்தியா
24-ஏப்-201817:20:05 IST Report Abuse

Roopa Malikasdnallathu

Rate this:
24-ஏப்-201815:37:26 IST Report Abuse

Arun,ChennaiIf this alliance became true, then admk may have to face a huge defeat

Rate this:
Larson - Nagercoil,இந்தியா
24-ஏப்-201815:26:06 IST Report Abuse

Larsonஅதிமுக பிஜேபியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் இப்போதைய விருப்பம். அப்போதுதானே ஒரே நேரத்துல இரண்டு கட்சிகளையும் அடியோடு துடைத்தெறிய நல்ல வாய்ப்பு கிடைக்கும். தினமும் நடக்கும் கொலை, கொள்ளை, பலாத்காரம் இவற்றை தடுக்க வழி தெரியாமல் மத்திய அரசுக்கு சாமரம் வீசும் ஒரு மாநில அரசு.

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X