கட்சி துவக்கம் எப்போது? கூற முடியாது என்கிறார் ரஜினி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கட்சி துவக்கம் எப்போது?
கூற முடியாது என்கிறார் ரஜினி

சென்னை: 'அரசியல் கட்சி துவக்குவது உறுதி. ஆனால், எப்போது துவக்குவேன் என, கூற முடியாது,'' என, நடிகர் ரஜினி கூறினார்.

ரஜினி,  கட்சி, அமெரிக்கா,

அமெரிக்க பயணம்

நடிகர் ரஜினி, சென்னையில் இருந்து, நேற்று இரவு, அமெரிக்கா சென்றார். அங்கு, 10 நாள் தங்கியிருந்து, மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறார். முன்னதாக, நேற்று காலை யில், தன் போயஸ் கார்டன் இல்லத்தில், 'ஆடிட்டர்'

குருமூர்த்தியுடன், அவர் ஆலோசனை நடத்தினார். அதன்பின், கோடம்பாக்கம், ராகவேந்திரா மண்டபத்தில், மன்ற நிர்வாகிகளுடன், ஆலோசனைநடத்தினார்.

விமர்சனம் தவிர்க்க முடியாது


அதன்பின், தன் வீட்டில், ரஜினி அளித்த பேட்டி:அரசியல் கட்சி துவங்குவது உறுதி; எப்போது துவங்குவேன் என, கூற முடியாது. சென்னையில் நடந்த, போராட்டத்தின்போது போலீசாரை தாக்கியது, மன்னிக்க முடியாத குற்றம். சீருடையில் இருக்கும் காவலரை தாக்குவதை, எந்தவகையிலும் ஏற்க முடியாது. சட்டம் கையில் உள்ளது என்பதற்காக, போலீசாரும், மக்களை தாக்குவது சரியல்ல.பெண் பத்திரிகையாளர் குறித்து, தெரிந்து செய்துஇருந்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும், நடிகர் எஸ்.வி.சேகர் செய்தது தவறு. பொது

Advertisement

வாழக்கையில் விமர்சனம் இருக்கத் தான் செய்யும்; அதை தவிர்க்க முடியாது. பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம், வெட்கப்பட வேண்டியது. விசாரணைக்கு பின், குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடும் தண்டனை கொடுக்க வேண்டும். இவ்விவகாரத்தில், கவர்னர் பெயர் அடிபடுவது குறித்து, கருத்து கூற விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (46+ 43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-ஏப்-201805:20:38 IST Report Abuse

meenakshisundaramபாக்கிய ராஜ் வேறே கட்சியை துவக்கப்போகிறேன் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னரே சொல்லியிருந்தார் ?எப்படியோ தமிழ்நாட்டில் ஆளுக்கொரு கட்சியை ஆரம்பித்து விட்டால் நல்லது. எவனும் அடுத்தவனுக்கு வாக்கு அளிக்க வேண்டாம் காசும் தர வேண்டாம் ,எப்படி ஐடியா?நேர்மையான தேர்தல் அப்போ நடக்குமில்லையா?

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஏப்-201817:16:11 IST Report Abuse

Endrum Indianதேர்தல் அறிவித்தால் அடுத்த நாள் காலை 10 மணிக்கு அந்த கட்சி அறிவிக்கப்படும்- ரஜினிகாந்தின் மைண்ட் வாய்ஸ்.

Rate this:
Deer - cuddalore,இந்தியா
24-ஏப்-201817:15:34 IST Report Abuse

Deerரஜினி கட்சி ஆரம்பிக்கு போது மீடியா நண்பர்களுக்கு தெரிவிப்பேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார், சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடக்கலாம் , யாரவது பணம் சம்பாதிப்பதை நிறுத்திவிடுவோமா, தன் திரைத்துறையில் இன்றும் வேலை செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். விளம்பரங்களில் நடிப்பதில்லை

Rate this:
Panangudiyan - MUMBAI,இந்தியா
24-ஏப்-201817:02:19 IST Report Abuse

PanangudiyanBUILDING, BASEMATTAM (FOUNDATION) ரெண்டுமே வீக்கு என்ன செய்ய?

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
24-ஏப்-201815:44:44 IST Report Abuse

BoochiMarunthuபாகுபலி வசூலை பார்த்த பொறாமையில் தான் நான் அரசியலுக்கு வரேன் என்று கதை விட்டு இரண்டு படம் வியாபாரம் செய்து விட்டார் . அந்த பணம் எல்லாம் அமெரிக்காவில் முதலீடு செய்யுறார் போல .

Rate this:
மோகன் வைத்தியநாதன் - சுலவ்,யுனைடெட் கிங்டம்
24-ஏப்-201815:40:36 IST Report Abuse

மோகன் வைத்தியநாதன்இன்னுமா இவரை நம்பிட்டு இருக்கீங்க ... தேர்தல் வரும் வரை கட்சி பற்றிய நினைப்பு இவருக்கு வரலைன்னா, இவருடைய எண்ணம் எல்லாம் பதவி பற்றியது மட்டுமே... மக்களுக்கு நல்லது செய்யணும்னு எண்ணம் இருந்தால் இப்போது இருக்கும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்திருப்பார்..

Rate this:
24-ஏப்-201815:32:51 IST Report Abuse

Arun,ChennaiMr. Rajnikanth is not suitable for tamilnadu politics, he will realize it when he came to meet people in field

Rate this:
swami - chennai,இந்தியா
24-ஏப்-201814:46:02 IST Report Abuse

swamiஇவர் கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட எலி. இவரை இவரது விசிலடிச்சான் குஞ்சுகள் கூட்டம் வா வா என்றது. வர முடியாது என்றல், அது அவமானமாகிவிடும், வந்தால் பணம் செலவழிக்க வேண்டும், அதற்கு இவர் தயாரில்லை. இந்த வயதில் வந்து உண்மையாகவே இருக்க நினைத்தாலும், சுற்றி இருக்கும் கூட்டம் இவரை கெட்டவன்னாக்கிவிடும். அதனால் வருவதற்கு பயம். என்ன செய்வதென்று தெரியாமல், இதோ கட்சி ஆரம்பிக்கிறேன் அதோ அரம்பிக்கிறேன் என்று சவுண்ட் விட்டு கொண்டு இருக்கிறார். சத்தியமாக இவர் அரசியலுக்கு வரமாட்டார். இவருக்கு கமல் பரவாயில்லை - எதோ இரண்டு பொதுக்கூட்டம் கூட நடத்திவிட்டார்.

Rate this:
skv - Bangalore,இந்தியா
24-ஏப்-201814:38:57 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>காக்கை இடம் போச்சு வளம்பொச்சானு தெரியலே மனைவி மகள்கள் ப்ராப்லம் வேறு மருமகன் ராவுசுவேறு ஒரே குழப்பாச்சு மயம் வெறும் வெத்துவேட்டு இந்தமனுஷர் சம்பாதிச்சாக பலகோடி எல்லாம் என்னாச்சு GOK

Rate this:
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
24-ஏப்-201813:57:59 IST Report Abuse

Rajhoo Venkateshஇவர் கண்டிப்பாக கட்சி ஆரம்பிக்க மாட்டார் இதோ இப்போ அப்போ என்று சொல்லியே காலத்தை ஒட்டிவிடுவார் .இவரை நம்பிப்பின்னால் போனால் அவ்வளவுதான்.

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement