தாயகத்திற்கு பணம்: இந்தியர்கள் முதலிடம்: 2017ல், 6,900 கோடி டாலர் குவிந்தது Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
தாயகத்திற்கு பணம்: இந்தியர்கள் முதலிடம்
2017ல், 6,900 கோடி டாலர் குவிந்தது

புதுடில்லி,: வெளிநாடுகளில் பல்வேறு பணிகள் மற்றும் தொழில்களில் உள்ளோர், தங்கள் பிறந்த நாட்டில் உள்ள குடும்பத்தாருக்கு பணம் அனுப்புகின்றனர். இந்த வகையில், 2017ல், வெளிநாட்டில் இருந்து, அதிக பணம் பெற்ற நாடுகளில், 6,900 கோடி டாலருடன், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய மதிப்பில் இது தற்போது, 4 லட்சத்து, 55 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் ஆகும்.

46,600 கோடி டாலர்


இது குறித்து, உலக வங்கியின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஆண்டு, வெளிநாடுகளில் குடியிருப்போர், தாயகத்திற்கு அதிக அளவில் பணம் அனுப்பி சாதனை புரிந்துள்ளனர்.இதன்படி, இந்தியா, 2016ம் ஆண்டை விட, 2017ல், 9.9 சதவீதம் அதிகமாக, அதாவது, 6,900 கோடி டாலர் பெற்றுள்ளது. எனினும், இது, 2014ல் பெற்ற, 7,040 கோடி டாலரை விட, குறைவாகும்.அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சியால், அங்கு வேலை

செய்வோர் அனுப்பும் பணம், பல ஏழை நாடுகளின் பொருளாதார தேவைக்கு துணை நிற்கிறது.கச்சா எண்ணெய் விலை ஏற்றம், யூரோ, ரூபிள் கரன்சிகள் மதிப்பு உயர வழி வகுத்துள்ளது. இதன்காரணமாக, ௨௦௧௭ல், டாலர் அடிப்படையில் தாயகத்திற்கு பணம் அனுப்பியது அதிகரித்துள்ளது.இதன்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகள் பெற்ற தொகை, 8.5 சதவீதம் உயர்ந்து, 46,600 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இது, 2016ல், 42,900 கோடி டாலராக இருந்தது.இதே காலத்தில், உயர் வருவாய் நாடுகளை உள்ளடக்கிய மொத்த பரிவர்த்தனை மதிப்பு, 7 சதவீதம் உயர்ந்து, 57,300 கோடி டாலரில் இருந்து, 61,300 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இந்த இரு பிரிவுகளிலும், இந்தாண்டு பணம் அனுப்புவது, முறையே, 4.1 சதவீதம் மற்றும், 4.6 சதவீதம் உயர்ந்து, 48,500 கோடி டாலர் மற்றும், 64,200 கோடி டாலராக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வெளிநாட்டில்வசிப்போருக்கு, தாயகத்திற்கு பணம்

Advertisement

அனுப்புவதற்கான செலவு, மிக அதிகமாக உள்ளது.
இந்தாண்டு, ஜன., - மார்ச் வரை, 200 டாலர் அனுப்புவதற்கான, சராசரி செலவு, 7.1 சதவீதமாக உள்ளது. இது, நிலையான வளர்ச்சி இலக்கு அளவான, 3 சதவீதத்தை விட, இரு மடங்கு அதிகம்.ஆப்ரிக்க கண்டத்தில், பெரும்பான்மை நாடுகளைக் கொண்ட, தென் பகுதிக்குத் தான், பணம் அனுப்பும் செலவு, சராசரியாக, 9.4 சதவீதம் என்ற அளவில் மிக அதிகமாக உள்ளது.வங்கிகள், தேசிய அஞ்சலகங்கள், பணப் பரிவர்த்தனை நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம், இடர்ப்பாடின்றி பணம் அனுப்ப முடிகிறது.அதனால், குறைந்த செலவில் பணம் அனுப்ப உதவும், இணையம், ஸ்மார்ட்போன் 'ஆப்', 'பிளாக்செயின்' போன்ற நவீன தொழில்நுட்ப பயன்பாடு குறைவாக உள்ளது. எனவே, நவீன தொழில்நுட்பங்களை பரவலாக்கி, பணம் அனுப்பும் செலவை குறைக்க வேண்டும்.கடந்த ஆண்டு, கிழக்காசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில், 13ஆயிரம் கோடி டாலர் ; தெற்காசியாவில், 11,700 கோடி டாலர் குவிந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murukavel - Thruthani,இந்தியா
24-ஏப்-201823:40:25 IST Report Abuse

Murukavelஅனுப்பி என்ன செய்ய ஆளும் பிஜேபிதான் பழ வழிகளில் அதை பிடுங்கி பிச்சைக்கார பொழப்பாக நாட்டை நடத்தி கொண்டிருக்கிறதே?

Rate this:
24-ஏப்-201820:30:12 IST Report Abuse

குறிஞ்சி நில கடவுள்வச்சிகிட்டு நல்லா வாழுங்க பாஸ்... இதுகெல்லாம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேவை...நாடு திரும்புறப்போ ஏர்போர்டல கிடைக்கிற மரியாத இருக்கே அடடா...

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஏப்-201820:13:18 IST Report Abuse

Lion Drsekarமக்களின் வரிப்பணத்தில் குப்பை கொட்டும் அருண் ஜெட்லீ இதற்க்கு வரி போடவில்லையா? சீக்கிரம், எவனையும் வாழ விடாதீர்கள் . எதிர்க்கட்சியில் இருக்கும்போது வருமான வரியே கூடாது என்றெல்லாம் கூக்குரல் இட்ட ,,,, அசிங்கம் இதற்குப் பதிலாக ,,,, வந்தே மாதரம்

Rate this:
Manian - Chennai,இந்தியா
24-ஏப்-201822:48:07 IST Report Abuse

Manianபரஸ்பரம் வரி போடடாமல் இருக்க அமெரிக்காவும், இந்தியாவும் ஒப்பந்தம் செய்துள்ளனர். அதாவது ஒருவர் அமெரிக்காவில் இருந்தாலும், இந்திய வருமானத்திற்கு இத்தாவில் வருமான வரி கொடுத்தகால், அதை அமெரிக்காவிலும் கொடுத்ததாக கருதப்படுகிறது. எனவே, இங்கே வரும் அமெரிக்க டாலருக்கு அங்கே உள்ளவர்கள் வருமான வரி செலுத்தியதால், ஜெட்லி இங்கேயும் வரி போடுவதில்லை. விவரங்கள் தெறியாமல் ஜெட்லி வரி போடுகிறர் என்பது அப்பதான். மேலும், 1 % வரி கொட்டுபவர்கள், மாராவார்கள் எல்லாம் ஓசி வாங்கி இருப்பவர்கள் என்பது தற்போது குறைந்துள்ளது. அது இல்லாவிடடால் , பாகிஸ்தான், சைனா எல்லையில் ராணுவத்திற்கு ஓசியில் சென்று சண்டை போடும் அறிவும், திறமையும் உங்களுக்கு உண்டா? எந்த அரசாங்கம் வந்தாலும், வரி இல்லையேல் பாதுகாப்பு செலவிற்கு வரி தேவை....

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X