ரூ.15 லட்சம், 'டிபாசிட்' எப்போது? பதிலளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ரூ.15 லட்சம், 'டிபாசிட்' எப்போது?
பதிலளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு

புதுடில்லி,:'கடந்த, 2014, லோக்சபா தேர்தலின்போது, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி, ஒவ்வொரு இந்தியர் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யும் தேதி தொடர்பான விஷயம், தகவல் உரிமை சட்டத்தின் வரையறைக்குள் வரவில்லை' என, பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

பிரதமர் அலுவலகம்,   நரேந்திர மோடி, லோக்சபா தேர்தல், ரூ.15 லட்சம்,

தகவல் உரிமை சட்ட ஆர்வலர், மோகன் குமார் சர்மா, 2016, நவ., 26ல், தகவல் உரிமை

சட்டத்தின் கீழ், ஒரு மனு தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, 2014 லோக்சபா தேர்தலின்போது அறிவித்தபடி,ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில், 15 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்யும் தேதி குறித்து, அந்த மனுவில் கேட்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் அளித்த பதில்:தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி கூறியபடி, ஒவ்வொரு இந்தியர் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யும்தேதி, தகவல் உரிமை சட்டப்படி, 'தகவல்' என்ற வரையறைக்குள் அடங்காது. எனவே, இதுகுறித்த பதிலை அளிக்க இயலாது.இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.இந்த பதில் திருப்திகரமாக உள்ளதாக, தலைமை தகவல் ஆணையர், ஆர்.கே.மாத்துார் கூறியுள்ளார்.

Advertisementதகவல் உரிமை சட்டப்படி, 'தகவல்' என்பது, ஆவணம், நினைவறிக்கை, இ -மெயில், கருத்து, ஆலோசனை, பத்திரிகை குறிப்பு, சுற்றோலை, உத்தரவு, ஒப்பந்தம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை குறிக்கும்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthi - try,இந்தியா
25-ஏப்-201809:58:27 IST Report Abuse

Karthiஇது எந்த வரையறைக்குள்ளும் வராது... வரும்... ஆனா...வராது ...

Rate this:
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஏப்-201809:52:26 IST Report Abuse

Malimar Nagoreஎல்லாமே ஜனங்களை ஏமாற்றும் பித்தலாட்டம்.

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
24-ஏப்-201822:24:39 IST Report Abuse

Rafi மூன்று மாதத்தில் கருப்பு பணத்தை கொண்டுவருவேன் என்று வீராவேசம்மாக பொதுக்கூட்டத்தில் வானத்தை பார்த்து தான் நான் சொன்னேன்,கேமராவை பார்த்தேனா? என்று கோர்ட்டில் கேஸ் என்று வந்தால் கூட அதிலிருந்து தப்பித்து விடுவார் நம் பிரதமர். அடுத்த தேர்தலில் புதிய ரூட்டில் எப்படி மக்களை கவரலாம் (ஏமாற்றலாம்) என்று சிந்திக்க தொடங்கிவிட்டார். நான்கு வருடம் கழிந்து விட்டது மக்களே அதை மறந்து, நாளை எந்த வகையில் பிரச்சனை அரசு வடிவில் வரப்போகின்றதோ? என்று தினம், தினம் கவலையில் ஆழ்ந்திருக்கின்றார்கள்.

Rate this:
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
24-ஏப்-201821:47:25 IST Report Abuse

Vijay D.Ratnamஅட முட்டாப்பசங்களா, மோடி என்ன சொன்னார், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை கொண்டுவந்தால் அதை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பதினைந்து லட்ச ரூபாய் அளவுக்கு கிடைக்கும் என்று பேசினார். அது பாமரனுக்கும் புரியவேண்டும் என்பதற்காக சொன்னாரு.ஒங்க அக்கவுண்ட் நம்பரை குடுங்க பதினைந்து லட்சம் போடுறேன்னு சொன்னாரா. இதுக்குதாண்டா காமராஜர் படிங்க படிங்கனு சொன்னாரு. இல்லேன்னா எதிர்காலத்தில் படிப்பறிவில்லாத தற்குறிகளா திரிவிங்கடானு சொன்னாரு. அது சரியாப்போச்சு.

Rate this:
Anandan - chennai,இந்தியா
25-ஏப்-201821:27:58 IST Report Abuse

Anandanபதில் சொல்ல என்ன பயம்....

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஏப்-201820:22:45 IST Report Abuse

Lion Drsekarமக்களுக்காக சேவை செய்ய வந்த எவனுக்கும் மன்னிக்கவும் இவனுங்களுக்கு எதுக்கு மரியாதை என்றே தெரியவில்லை, தேர்தலின் போதுதான் மக்களின் நினைவே வரும், மற்ற நேரங்களில் இறைவனுக்கே அடுக்காது, வந்தே மாதரம்

Rate this:
Larson - Nagercoil,இந்தியா
24-ஏப்-201820:02:18 IST Report Abuse

Larsonபிரச்சனை என்னன்னா, இத்தனை கருப்பு பணம் வெளிநாடுகளில் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியாமலே நாட்டு மக்களுக்கு இல்ல ஏழைகளுக்கு கொடுப்பேன்னு சொன்னது, இல்லாத 2 g கேஸை ஊதி பெரிதாக்கி, பல கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம்ப வைத்து, இந்தியா கிளீன், டிஜிட்டல், வல்லரசு, ஒளிரும், என்று எல்லா பொய்களையும் அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்து ஜனநாயகத்தை சீர்குலைப்பதைத்தான் மக்கள் எதிர்க்கிறார்கள்.

Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
24-ஏப்-201819:25:32 IST Report Abuse

வந்தியதேவன்அன்னைக் சொன்னத... அல்லக்கைங்களும்... நொள்ளக் கைங்களும்... என்னமா முழு பூசணிக்காயை சோத்துல மறைக்குறானுங்க...? என்னம்மா... இப்படி பண்றீங்களேமா...? வாங்க... உங்க “டிஜிட்டல் இந்தியா”வுக்கு பதில் சொல்ல இன்னும் பதினோரு மாதம்தான் இருக்கு...? வாக்குச்சீட்டால் பதில் சொல்வோம்... அன்னைக்கு பாருங்க...? அன்னை உங்க... இவிஎம் மெஷின் ஃப்ராடு வித்தையெல்லாம் நடக்காதுங்கோ...? “நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா... வேஷம் கலைக்கவும், ஓய்வு எடுக்கவும் நேரம் நெருங்குதம்மா...? தாய் கொண்டு வந்ததை.... தாலாட்டி வைத்ததை... அந்த மக்களே திரும்ப அடிக்கும் நேரமம்மா...ன்னு பாட்டு பாடு நேரம் வந்தாச்சு... மக்களே...? மக்களுக்கு மக்களே...?

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
24-ஏப்-201817:28:33 IST Report Abuse

N.Kaliraj ஏற்கெனவே சொன்னது போல......ஒருத்தரை ஏமாத்தணும்னா அவரோட ஆசையை தூண்டிவிடனும்....

Rate this:
Rajan - chennai,இந்தியா
24-ஏப்-201819:56:04 IST Report Abuse

Rajanஆம்., பெரியவர் 1950 களில் பண்ணது போல...இப்படி பேசி பேசி ......

Rate this:
Babu Krishnan - atlanta,யூ.எஸ்.ஏ
24-ஏப்-201817:16:13 IST Report Abuse

Babu KrishnanIndian people should have some brains first and then stop expecting freebies like this and instead ask for good infrastructure, health , education and good governance. 15 lakhs rupees is equal to 23000 dollars even country like america wont be able to give to every citizen which has 1/3 population of india. In coming election beg for money and vote to candidates like dinakaran (RK Nagar TN) and expect good things will happen .

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
24-ஏப்-201819:14:21 IST Report Abuse

BoochiMarunthuThen why did he lie ? He was a CM, doenst he know that he cant do that ?...

Rate this:
Sarvam - coimbatore,இந்தியா
24-ஏப்-201817:03:31 IST Report Abuse

Sarvamஅட கூமுட்டை... மோடி எப்ப 15லட்சம் உங்க வங்கி அக்கௌன்ட்ல போடறேன்னு சொன்னாரு....? வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இங்கே கொண்டு வந்தால் ஒவ்வொரு இந்தியகுடிமகனுக்கும் 15லட்சம் கிடைக்கும் அளவுக்கு பணம் அங்கே கிடக்கிறது என்று தான் கூறினார் ... இன்னும் இலவசத்துக்கு அலையாதீங்க டா... அப்படியே அந்த கருப்பு பணம் இந்தியாவிற்கு கொண்டு வந்தால் அதை இந்தியாவின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவது தான் சிறந்த செயல் ஆகும்.

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
24-ஏப்-201819:15:36 IST Report Abuse

BoochiMarunthuஅப்போ ஏன் இன்னும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரல ? அதற்கு பதிலா பெட்ரோல் விலை ஏத்தி கொள்ளையடிச்சாச்சு . GST கொண்டு வந்து சுரண்டியாச்சு ....

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
24-ஏப்-201823:09:38 IST Report Abuse

Rafi இல்லாத கருப்பு பணத்தை இருப்பதுபோல், உங்கள் பாணியில், மக்களை கூமுட்டையாக நினைத்து ஏமாற்றுவதற்கு தான் பேசியுள்ளார் என்றாவது ஒத்து கொள்கின்கிறீர்களா? திரு சர்வம்....

Rate this:
Sarvam - coimbatore,இந்தியா
26-ஏப்-201815:41:55 IST Report Abuse

Sarvamஇல்லாத கருப்பு பணம்னு எப்படி சொல்றீங்க பாஸ்....மேலும்.... இலவசமா எல்லாமே வேணும்னு நினைக்குறவன் கூமுட்டை தானே...

Rate this:
மேலும் 60 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement