நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

Added : ஏப் 24, 2018 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ICF Product,Southern Railway,LHB Boxes, நீண்ட கண்ணாடி ஜன்னல் ரயில் பெட்டி, ஐ.சி.எப் தயாரிப்பு, ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை, லிங் ஹாப்மென் புஷ்,  எல்.எச்.பி பெட்டிகள் ,  ஜெர்மன் தொழில்நுட்பம், ஏசி மூன்றடுக்கு பெட்டி, தெற்கு ரயில்வே, 
Long Glass Window Train Box,  Rail Box Link Factory, Ling Humpman Bush, German Technology, AC three-tier Box,

ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான, ஐ.சி.எப்.,பில், நீண்ட கண்ணாடி ஜன்னலுடன், மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. ஐ.சி எப்.,பில், ஜெர்மன் தொழில்நுட்பத்தில், 'லிங் ஹாப்மென் புஷ்' என்கிற, எல்.எச்.பி., பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இத்துடன், 'ரயில் - 18' திட்டத்திற்கான பெட்டிகள் தயாரிப்பில் உள்ளது. வரும், 2020ல், 'ரயில் - 20' திட்டத்திற்கு, முழுவதும் அலுமினியத்தால், உலக தரத்தில், சகல வசதிகளுடன், ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ.சி.எப்.,பில், ஜெர்மன்தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு, ரயில் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ள, எல்.எச்.பி., மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டிகளில், இருபுறமும், ஸ்டீல் சுவர் பகுதியில், கண்ணாடி ஜன்னல்கள், தனித்தனியாக பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடி ஜன்னல்கள், பெரிதாக இருந்தால், பயணம் செய்யும்போது, முக்கியமான இடங்களில், வெளியில் உள்ள இயற்கை அழகையும், ரசிக்க ஏதுவாக இருக்கும், பெட்டியில், இயற்கை வெளிச்சமும் கூடுதலாக கிடைக்கும் என, பயணியர் தரப்பில், ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி, தெற்கு ரயில்வேக்காக, ஐ.சி.எப்.,பில், முதன் முதலாக, 'ஏசி' மூன்றடுக்கு பெட்டி, இருபக்கமும், நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இடையிடையே, ஸ்டீல் சுவர் தடுப்பு இல்லாமல், பெட்டியின் முழு நீளத்திற்கும், நவீன தொழில்நுட்பத்திலான, கண்ணாடி ஜன்னல் பொருத்தப்பட்டு உள்ளதால், பகல் நேரத்தில், விளக்குகள்போடாமலேயே வெளிச்சம் கிடைக்கும்.

பயணத்தின் போது, பயணியர் வெளிப்புற காட்சிகளை பார்க்க, ஜன்னல் ஏதுவாக இருக்கும்.இத்துடன், அழகாக இருக்கை வசதிகள், பெட்டி முழுவதும் எல்.இ.டி., விளக்குகள், நவீன கழிப்பறை பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டி, 130 கி.மீ., வேகத்தில் இயங்கக்கூடியது.இப்பெட்டி, 2.2 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
25-ஏப்-201802:57:20 IST Report Abuse
Rpalnivelu தேச விரோத கம்யூனிஸ்டுகள் மற்றும் கழக திருட்டு தொழிற் சங்கங்களால் தமிழ்நாட்டின் தொழிற் வளர்ச்சி மிகவும் அபாயகரமான, கவலைக்குரியதாக மாறி விட்டது. பெரிய, கனரக தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருகின்றன. தமிழ்நாட்டிற்காவது ஒரு அவசர நிலை மத்திய அரசாங்கம், கொண்டு வருவது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
25-ஏப்-201802:33:29 IST Report Abuse
Rpalnivelu தமிழர் நீதி அவர்களின் பதிவு உண்மையானால் ரயில்வே அமைச்சகம் உடனடி கவனம் செலுத்தி, புல்லுருவிகளை களையெடுக்க வேண்டும். பெருந்தலைவரின் முயற்சியால் உருவான திட்டம் இது. உண்டிகுலுக்கிகளும், கழக தொழிற்சங்க பிரதிநிதிகளையும் அடித்துத் துரத்தி, தொழிற்சாலையை வாழ வையுங்கள். தொழிற் கூடங்களை நவீன ஆலயங்களென்று சொன்னவர் அக்கால தலைவர்கள். யிருப்பதையும் நாசம் செய்பவர்கள் இக்கால உண்டிகுலுக்கிகளும், கழக தொழிற்சங்க பிரதிநிதிகளும்.
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
24-ஏப்-201820:19:02 IST Report Abuse
Sivagiri அனைத்து ரயில்களிலும் - பெட்டிகளிலும் குடிப்பதற்கு தனியாக சுத்தமான தண்ணீர் வைத்தால் ரொம்ப புண்ணியம் . . .
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
24-ஏப்-201819:41:38 IST Report Abuse
தமிழர்நீதி ஐ.சி.எப்.,பில், ஜெர்மன் தொழில்நுட்பத்தில் பெட்டிகள் தயாரிக்கப்படுவது இனி தொடரும் . ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்படும் பெட்டிகள் தண்டவாளம் விட்டு தரையில் ஓடும் . இங்கு 50 % தொழிலாளார் வருகை பதிவை அடுத்தவர்கள் மூலம் பதிவுசெய்து ஊர் சுத்துவார்கள் ,நெடும் தொடர் பார்ப்பார்கள் . வன்முறை தலைவிரித்தாடும் . கொலை கொள்ளை ஐ.சி.எப்.,பகுதியில்தான் அதிகம் . தொழிலே இல்லாமல் பெட்டிகள் மந்திரத்தில் இங்கு உருவாகும் . தொழிற்சங்க தலைவர்கள் ஆடி காரில் வலம் வருவார்கள் . பாக்கெட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் மாதிரி ஒரு அடையாள அட்டை வைத்துக் கொண்டு எங்கும் வேலைநேரத்தில் சுற்றிவருவார்கள் ஐ.சி.எப்.,பில் தொழிலாளர்கள் . இவர்கள் பேட்டி செய்வது சாத்தியம் இல்லை . பல நூறு ஏக்கர் நிலத்தில் பரவிக்கிடக்கும் இந்த ஐ.சி.எப். நிர்வாகம் சரி இல்லாமல் , தொழிச்சங்க ஆதிக்கத்தால் மெல்ல வீழ்கிறது .காமராஜர் ஆரமித்து வளர்த்த ஐ.சி.எப்.,பில் இன்று அக்கிரமம் சூழ்ந்து 15000 தொழிலாளர்களுக்கு இந்தியாவின் வரிப்பணம் கூலிகொடுத்து , பேருக்கு சில தடம் புரளும் ஓங்கி குரல் கொடுக்கும் பெட்டியில செய்கிறார்கள். இப்படி எப்போதுவது கண்ணாடி பெட்டி செய்தியாக்கி தூங்குகிறது ஐ.சி.எப்.. இனி மெல்ல அடுத்தநாடுகள் இங்கு பெட்டி செய்யும் , இந்தியர்கள் சோம்பேறித்தனத்தால் .
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
24-ஏப்-201815:19:34 IST Report Abuse
sundaram செய்தியும் செயலும் பாராட்டப்பட வேண்டியது தான். ஆனால், இடையிடையே, ஸ்டீல் சுவர் தடுப்பு இல்லாமல், பெட்டியின் முழு நீளத்திற்கும், நவீன தொழில்நுட்பத்திலான, கண்ணாடி ஜன்னல் பொருத்தப்பட்டு உள்ளதால், பகல் நேரத்தில், விளக்குகள் போடாமலேயே வெளிச்சம் கிடைக்கும். என்ற வரிகளில் இடிக்கிறது. பகல் வேளைகளில் ரயில்களில் விளக்கு போடும் நடைமுறை கிடையாதே. காலை விடிந்தவுடன் ஒரு பணியாளர் வந்து அனைத்து பெட்டிகளிலும் விளக்குகளுக்கான சுவிட்ச்சை ஆஃப் செய்துவிட்டல்லவா போகிறார்.
Rate this:
Share this comment
Cancel
Balan Palaniappan - Chennai,இந்தியா
24-ஏப்-201815:01:51 IST Report Abuse
Balan Palaniappan . காங்கிரஸ் ஆட்சியிலிருந்திருந்தால் ஒன்றுமே நடந்திருக்காதா? இப்போ நடப்பதெல்லாம் காலத்தின் கட்டாயம். நாம் நவீன யுகத்திலிருக்கிறோம் அதனால் சில மாற்றங்கள் பிஜேபி ஆட்சியிலிருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தாலும் நடந்திருக்கும் . இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் இதை இன்னும் நன்றாகவே செய்திருக்கும், ஏன் என்றால் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தைவிட இப்போது அரசாங்கத்தின் வரி வசூல் இரட்டிப்பாயிருக்கிறது இந்த நான்கு ஆண்டிற்குள். பெட்ரோல் வரியை குறைக்காமல் அதிகமாக பிஜேபி வசூலித்த கூடுதல் வரி மட்டுமே இரண்டு லட்சம் கோடி ரூபாய்கள். அந்த பணம் எங்கே போனதென்று யாருக்கும் தெரியாது. மோடி தேர்தலுக்குமுன் ஏதாவது ரகசிய திட்டத்தில் முதலீடு செய்திருக்கிறேன் என்று சொன்னாலொழிய அந்த வரிப்பணம் என்னானதென்று யாருக்கும் தெரியாது. இவ்வளவு பணம் வசூல் காங்கிரஸ் ஆண்டு அவர்கள் கையில் கிடைத்திருந்தால் இன்னும் பெரிய அளவில் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
24-ஏப்-201813:31:36 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் புது டிசைன் நல்லதுதான். மேலும் இருக்கும் ரயில் பெட்டிகளின் கண்ணாடிகளை முறையாக சுத்தம் செய்யுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
24-ஏப்-201812:10:41 IST Report Abuse
Pasupathi Subbian எல்லாமே சரி, இந்த வெயில் காலத்தில் குடிக்க , பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி அவசியம் செய்துதரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
suresh - covai,இந்தியா
24-ஏப்-201811:22:42 IST Report Abuse
suresh தமிழக மக்களுக்கு ரொம்ப அவசியமான செய்தி இது.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஏப்-201811:00:37 IST Report Abuse
Lion Drsekar மக்கள் இருக்கும் ஐரோப்பா போன்ற இடங்களில் இது நன்றாக இருக்கும், இங்குதான் மக்களுக்கு நன்மைசெய்வதற்காக என்று கூறி மக்களின் வரிப்பணத்தில் பரம்பரை பரம்பரையாக சம்பாதித்துக்கொண்டு இருக்கும் சேவகர்கள் அவ்வப்பது தங்களுக்கு நாற்காலிக்கு கேடுவரும்போது மக்களுக்கு நீதிவேண்டும் என்று கூறி இரயில் மறியல் போராட்டம் என்று ஒன்றை வைத்துக்கொண்டு அடித்து நொறுக்குவது தொழிலாயிற்றே? அதுதான் பயமாக இருக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை