Soon, IRCTC app will tell you food items that will be served on trains | ரயில்வேயில் உணவு வகைகளை அறிய புதிய,'ஆப்'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரயில்வேயில் உணவு வகைகளை அறிய புதிய,'ஆப்'

Added : ஏப் 24, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
IRCTC, Shatabdi Express , Rajdhani Express , ஐ.ஆர்.சி.டி.சி.,  சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியருக்கு இலவச உணவு,  இந்திய ரயில்வே,  உணவு மற்றும் சுற்றுலா கழகம், ஆண்ட்ராய்டு போன்கள், ரயில்வேயில் உணவு வகைகளை அறிய புதிய ஆப்,
 Shatabdi Express train, Rajdhani Express train, Indian Railways, Food and Tourism Corporation, Android Phones, New App for Railways,

புதுடில்லி: பயணியருக்கு, ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் மற்றும் அவற்றின் விலைகளை அறிவதற்கான, 'ஆப்' எனப்படும் செயலியை, ஐ.ஆர்.சி.டி.சி., விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. சதாப்தி, ராஜ்தானி போன்ற ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியருக்கு இலவச உணவு வழங்கப்படும்.இதுகுறித்த விபரங்களையும், ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் மற்றும் அவற்றின் விலையை தெரிந்து கொள்ளவும், புதிய செயலியை, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் வடிவமைத்துள்ளது.'ஆண்ட்ராய்டு' போன்கள் போன்றவற்றில், இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, ரயிலில் கிடைக்கும் உணவு வகைகள் மற்றும் விலையை தெரிந்து கொள்ளலாம்.

செயலி வடிவமைக்கப்பட்டு, சோதனை நிலையில் உள்ளதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும், ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Renga Naayagi - Delhi,இந்தியா
24-ஏப்-201808:37:56 IST Report Abuse
Renga Naayagi வெய்யில் காலம் தகுந்த குளிர் சாதன வசதி கிடையாது ...பல நெடுந்தூர ரெயில்களில் பேன்ட்ரி கார் கிடையாது ....ரெயிலில் ரெயில் நீருக்கு பதில் அதிக லாபத்திற்காக தனியார் கான்டராக்டர்களால் மட்டரகமான பாட்டில் தண்ணீர்கள் விற்கப்படுகின்றன ..
Rate this:
Share this comment
Sankar Raman - Kancheepuram,இந்தியா
24-ஏப்-201809:21:21 IST Report Abuse
Sankar Ramanமொத்தத்துக்கு நீ ஜாலரா அடிக்கும் பிஜெபியும் சரி கிடையாது.....
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
24-ஏப்-201812:06:32 IST Report Abuse
Pasupathi Subbianயோவ் இதில் என்ன ஜால்றா கிடக்கிறது. உளறாமல் யோசனை செய்து பதியவேண்டும். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சு போடக்கூடாது....
Rate this:
Share this comment
Cancel
singaivendan - Singapore,சிங்கப்பூர்
24-ஏப்-201808:23:03 IST Report Abuse
singaivendan இப்படித்தான் நான் சென்ற வருடம் சென்னையிலிருந்த ராமேஸ்வரம் சென்ற போது இரவு 9 மணிக்கு ரயில்வே பணியாளர் போல் ஒருவன் பேப்பரும் கையுமாக வந்தான் யாருக்கு என்ன வேணும் என்று முழு ரயிலும் குறிப்பெழுதி காசு வாங்கி சென்றவன் தான் இன்றுவரை வரவே இல்லை...மொத்த ரயிலும் உணவு வரும் வரும் என்று வாயை பார்த்து உக்காந்து இருந்தது தான் மிச்சம்... என்ன ஒரு வில்லத்தனம்???
Rate this:
Share this comment
Sankar Raman - Kancheepuram,இந்தியா
24-ஏப்-201809:22:37 IST Report Abuse
Sankar Ramanஅவன் குஜராத்தில் ஏதாவது டீ கடையில் பக்கடா தின்று மசாலா டீ குடித்து கொண்டிருப்பான்...
Rate this:
Share this comment
sasi - ,
24-ஏப்-201811:56:43 IST Report Abuse
sasiபொருளை வாங்காமல் காசு கொடுத்தது நம் கவனக்குறைவு...
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
24-ஏப்-201812:07:54 IST Report Abuse
Pasupathi Subbianஎதோ காங்கிரஸ் அலுவலகத்தில் தலைவராக இருப்பான். அதுதான் வழக்கமாக உள்ளதே. இருந்தும் கொள்ளை, இல்லாமலும் கொள்ளை ,இது காங்கிரசின் தலையாய கொள்கை,...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஏப்-201808:06:59 IST Report Abuse
Srinivasan Kannaiya விலைபட்டியலை நாம் பார்த்தால் ஆப் ஆகிவிடுவோம் இல்லே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X