மணிரத்னம் 'ஸ்டைல்' என்னிடம் இருக்காது : சொல்கிறார் 'படைவீரன்' இயக்குனர் தனா| Dinamalar

மணிரத்னம் 'ஸ்டைல்' என்னிடம் இருக்காது : சொல்கிறார் 'படைவீரன்' இயக்குனர் தனா

Added : ஏப் 29, 2018
Advertisement
மணிரத்னம் 'ஸ்டைல்' என்னிடம் இருக்காது : சொல்கிறார் 'படைவீரன்' இயக்குனர் தனா

தென்தமிழகம் சினிமாவிற்கு பல படைப்பாளிகளை கொடுத்துள்ளது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் இருந்து பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, பாலா உள்ளிட்டோர் உருவானார்கள். அவர்களின் வரிசையில் 'படைவீரன்' என்ற சினிமாவின் மூலமாக முத்திரை பதிக்க வந்துள்ளார் இயக்குனர் தனா.
'சண்டே ஸ்பெஷல்' பகுதிக்காக அவர் அளித்த பேட்டி

* உங்களை பற்றி....தேனி மாவட்டம் சின்னமனூர் சொந்த ஊர். கல்லுாரி படிப்பிற்காக சென்னை சென்றேன். சில ஆண்டுகள் மென் பொருள் நிறுவனத்தில் பணியாற்றினேன்.
* சினிமா ஆசை வந்தது எப்படி?கல்லூரி படிக்கும் காலத்தில் சினிமா ஆர்வம் இருந்தது. எழுத்தாளர் ஜெயமோகன் மூலமாக மணிரத்னத்தின் நட்பு ஏற்பட்டது. அவர் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க திட்டமிட்டிருந்தார். தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள நல்ல வாசிப்பாளர் உதவியாளராக வேண்டும் என கேட்டுள்ளார். ஜெயமோகன் என்னிடம் கேட்டார். நானும் மென்பொருள் பணியில் திருப்தியில்லாமல் இருந்த நேரம். எனவே அதற்கு உடனே ஒப்புதல் அளித்து மணிரத்னத்துடன் சேர்ந்து கொண்டேன்.

* வாசிப்பில் ஆர்வம் ஏற்பட காரணம்...எனது அம்மா மூலமாக தான் எனக்கு வாசிப்பு பழக்கம் உண்டானது. பள்ளி காலங்களில் இருந்தே சிற்றிதழ்கள், நாவல்கள் வாசிக்க துவங்கிவிட்டேன்.

* தீவிர வாசிப்பு தான் சினிமா எடுக்க துாண்டியதா...பள்ளி காலத்தில் நாடகங்கள் எழுதி இயக்கி நடித்தேன். அப்போதே 'டிவி' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். எழுத்தாளர் ஞாநியின் நாடக குழுவில் இருந்தேன். வாசிப்பு பழக்கம் நேர்த்தியான படைப்பை உருவாக்க துணையாக இருக்கும்.

* சினிமாவில் மாற்றம் குறித்து...ஒவ்வொரு காலகட்டத்திற்கும் சினிமாவில் மாற்றம் வந்து கொண்டே தான் இருக்கிறது. கே.பாலசந்தர் காலத்தில் நல்ல படைப்புகள் வரவில்லையா. எனவே மாற்று சினிமா என தனியாக பிரிக்க தேவையில்லை.
* குறும்பட இயக்குனர்களின் வருகை...குறும்படம் மூலமாக சிலர் வென்றுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் சிறந்த இயக்குனரிடம் முறையாக பயின்றால் மட்டுமே நுணுக்கங்களை கற்க முடியும்.

* முதல்பட அனுபவம் குறித்து...உழைப்பு அனைத்தையும் உறிஞ்சிவிட்டது. ஆனால் கண்ட கனவு முழுமையாக நிறைவேறாமல் போனதாக உணர்கிறேன்.
* உங்களுக்கென 'ஸ்டைல்' உருவாக்குவீர்களா...மணிரத்னத்திடம் சினிமா பயின்றதால், அவரின் 'ஸ்டைலில்' என் சினிமா இருக்காது. அதனால் தான் எனது முதல் படம் கிராமத்து கதையை மையமாக கொண்டிருந்தது.

அடுத்த படம் எப்போது...கண்டிப்பாக கிராமத்தை மையப்படுத்திய கதையாக இருக்காது. காதல் மற்றும் 'திரில்லர் 'கலந்த கதை தயாராக உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X