என் வாழ்வின் குத்து விளக்குகள் : நடிகர் ரவிமரியா 'பளீச்'| Dinamalar

என் வாழ்வின் குத்து விளக்குகள் : நடிகர் ரவிமரியா 'பளீச்'

Added : ஏப் 29, 2018
Advertisement
என் வாழ்வின் குத்து விளக்குகள் : நடிகர் ரவிமரியா 'பளீச்'

'ஆசை ஆசையாய்' படத்தில் நடிகர் ஜீவாவை அறிமுகப்படுத்தி, தனது முதல் படத்திலேயே இயக்குனராக கவனம் ஈர்த்தவர். ஒளிப்பதிவாளர் நட்டி நடராஜனுக்கு 'மிளகா 'படம் மூலம் அடையாளம் ஏற்படுத்தியவர். 'வெயில்' படத்தில் தனது முரட்டு விழிகளால், கொடூர வில்லனாக முகம் காட்டியவர். தொடர்ந்து குணச்சித்திரம் மற்றும் காமெடி கலந்த வில்லன் கேரக்டரில் முத்திரை பதித்தவர். விருதுநகரில் பிறந்து நடிகர், இயக்குனராக வலம் வருகிறார் ரவிமரியா.இவர் சினிமாவிற்கு வந்தது குறித்து இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

* இயக்குனர் நடிகரான எப்படி?ஆசை ஆசையாய் மற்றும் மிளகா படங்களுக்குப் பிறகு, சில படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதினேன். அந்த நேரத்தில் இயக்குனர் வசந்தபாலன், வெயில் படத்தில் வில்லனாக அறிமுகம் செய்தார். மக்களும் ஏற்றுக் கொண்டனர். அதில் இருந்து தொடர்ந்து நடித்து வருகிறேன்.

* வில்லனாக வரும் உங்களை பார்த்தாலே உற்சாகம் பிறக்குதே?நான் இயக்கிய படங்கள் போக, பல படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், காமெடி டிராக் எழுதியும் உள்ளேன். கல்லுாரியில் படிக்கும்போது மேடையில் அதிகமாக பங்கேற்றுள்ளேன். இதன் அனுபவத்தால், ரசிகர்களின் மனநிலை அறிந்து நடிக்கிறேன்.
* உங்களின் ரோல் மாடல்?எம்.ஆர்.ராதா. காமெடி கலந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிப்பில் ஜூனியர் எம்.ஆர்.ராதா எனப் பெயர் வாங்க வேண்டும்.

* காமெடி வில்லத்தனம் ரசிப்புக்கு காரணம்?படம் முடிவானவுடன், இயக்குனரிடம் எனக்கான கேரக்டர் எது என்பதை தெரிந்த பின், 'சீன்' பேப்பரை வாங்கி அதில் கவனம் செலுத்தி, மக்களின் ரசனைக்கு தகுந்த மாதிரியாக மேலும் டெவலப் செய்வேன்.

* இயக்குனர் எழில் உங்களுக்காகவே கதை தயார் செய்கிறாரா?எனக்குள் இருந்த காமெடியை கண்டுபிடித்தவர் இயக்குனர் எழில். மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா படங்களில் படத்தில் வில்லன் ஜெயிக்க வேண்டும் என, ரசிகர்கள் எனக்காக வேண்டுவார்கள். இயக்குனர்கள் வசந்தபாலனும், எழிலும் என் வாழ்வில் இரு குத்துவிளக்குகள்.

* இனி தொடர்ந்து நடிப்புதானா?தற்போது நடிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. 3 கதைகள் ரெடி செய்துள்ளேன். சீக்கிரமே படம் இயக்குவேன்.

* தற்போது கை வசம் உள்ள படங்கள்?பூமராங், சண்டைக்கோழி 2, ஜெகஜ்ஜால கில்லாடி, அட்லி, ஒரு ராஜாவும் 5 கூஜாவும், சார்லி சாப்ளின் 2, வெண்ணிலா கபடி குழு 2.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X