குட்கா ஆலை வழக்கில் விசாரணை: சி.பி.ஐ., மீது ஸ்டாலின் நம்பிக்கை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குட்கா ஆலை வழக்கில் விசாரணை
சி.பி.ஐ., மீது ஸ்டாலின் நம்பிக்கை

கோவை: ''குட்கா விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணை முறையாக நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

குட்கா ஆலை,வழக்கு,விசாரணை,சி.பி.ஐ.,ஸ்டாலின்,நம்பிக்கை,D.M.K,M.K.Stalin,Stalin


குட்கா ஆலை விவகாரத்தில், தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தது. அதில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

குட்கா விவகாரம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டதும், கோவையிலுள்ள குட்கா தொழிற்சாலையில், திடீரென, 18 மணி நேர சோதனை நடத்தப்பட்டுள்ளது. இச்சோதனையை வெளிப்படையாக நடத்தக் கோரிய,

தி.மு.க.,வினரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இந்த அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்.

இது ஒரு சமூகப் பிரச்னை என்பதால், தி.மு.க., சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இந்த விவகாரத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளிட்ட பலரும் மாமூல் வாங்கி இருப்பதற்கான ஆதாரங்களை வருமான வரித்துறை, கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

சி.பி.ஐ., விசாரணை முறையாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி நடக்காவிட்டால், அடுத்து வரும், தி.மு.க., ஆட்சியில், குட்கா விவகாரத்தில் சிக்கிய அனைவரும் தண்டிக்கப்படுவர். இவ்வாறு அவர் பேசினார்.

சந்திப்பு:


கோவை அருகில் 'குட்கா' தொழிற்சாலை விவகாரத்தில் போராட்டம் நடத்தி, கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., வினரை, ஸ்டாலின், நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Advertisement

எஸ்.பி., மீது பாய்ச்சல்!

ஆர்ப்பாட்டத்தில், ஸ்டாலின் பேசுகையில், கோவை, எஸ்.பி., மூர்த்தியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். அவர் பேசுகையில், ''இந்த மாவட்டத்தின், எஸ்.பி., மூர்த்தி, ஆளும்கட்சி அமைச்சர்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு, வழக்குகள் போட்டுள்ளார். இதற்கு, தி.மு.க., ஆட்சியில், பதில் சொல்ல வேண்டியிருக்கும். எஸ்.பி.,மூர்த்தி, விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை மாவட்டத்தில், எஸ்.பி.,யாக இருக்கும் போது, இருவருக்குமான தொடர்புகள் என்னென்ன என்பது எங்களுக்குத்தெரியும்,'' என்றார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (15+ 35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
06-மே-201800:14:27 IST Report Abuse

Manianஎப்படியும், நைநாதன் காவேரி வெவகாரத்துக்கு காரணம், டாஸ்மார்க்கு சவுக்கு அவரே காரணம், அரசாங்க பாசுகளில் சாவருவங்களுக்கு காரணம் ஏன்னு ஒரு பெரிய புரட்சியே வரமா தடுக்கனுமு, இந்த கொச பய இப்போ குடகா போராட்டம் ஏன்னு கூவரான். டாஸ் மார்க் ஆலைக்கு போராட்டம்னு ஏன் ஒரு பயலும் ஆரம்பிக்கலை?. வை கோ எங்கே டூர் போயிட்டாரு? ,

Rate this:
anuthapi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-மே-201816:15:48 IST Report Abuse

anuthapiசி பி ஐ விசாரணை 2g வழக்கில் எப்படி செயல் பட்டதோ அதே மாதிரி செயல் பட சொல்கிறாரா?

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
05-மே-201815:50:11 IST Report Abuse

Shanuஆ ராசா மற்றும் TR பாலு, மாறன் போன்றவர்களை ஒதுக்கி வைத்தால், திமுக மிக பெரிய வெற்றி பெரும். ஸ்டாலின் திருமாவளவன் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை அனுசரித்து போக வேண்டும். தான் ஜெயித்து விடுவோம் என்கிற தலைக்கனம் இருக்க கூடாது.

Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
05-மே-201814:48:33 IST Report Abuse

elakkumananஅய்யா தினமலர் பதிப்பாளர் அவர்களே, இந்த சுடலையின் போராட்டம் எதயுமே உங்க பேப்பர்ல போடாதீங்க. இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உபகாரமாக போகும். ப்ளீஸ், இந்த ஆளு மக்களை ரொம்ப கேவலமா நினைக்கிறார். அது பரம்பரை புத்தி. ஆனால் தினசரி வேளைக்கு போகும் ஏழை மக்களின் உணர்வுகளை இந்த சனியனுக்கு யாரவது அல்லக்கைகள், திருட்டு கட்சி மீடியா டீம் , உண்டுகொளுத்த திருட்டு கட்சி இரண்டாம் மட்ட குண்டர்கள், சிற்றரசர்கள், பழத்தை தின்னுபோட்டு கொட்டையையும் தின்னுபோட்ட திருட்டு கட்சி விலங்குகள் இப்பிடி எந்த .......யாவது இந்த ........திருட்டு பய மகன் கிட்ட சொல்லக்கூடாத? யோவ், நீங்க பிஜேபியை கிண்டல் பண்ணுவீங்க நோட்டாவை விட ஒட்டு கம்மினு. பிஜேபியை இந்த ஆளு சந்தோசப்படுத்தாம விடமாட்டான் போல இருக்கு. இவங்க கட்சி அழிவுதான் தமிழ் நாட்டின் விடிவு என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும், இந்த யோக்கியனோட தொல்லை தாங்க முடியலைடா சாமி. ப்ளீஸ் தினமலர் நிறுவனமே, நீங்க இந்த கழிசடையை கழித்துவிட்டால் என்ன? கொஞ்சம் யோசிங்க சார். உங்க பேப்பரோட சுவாரஸ்யம் கொறையும். இல்லனு சொல்லல. எங்களையும் கொஞ்சம் நெனைச்சு பாருங்க. திருடுன காசு என்னவெல்லாம் பேச சொல்லி, எப்பிடியெல்லாம் திமிரு தறுதுன்னு பாருங்க. இல்லைனா, நகைச்சுவை பகுதின்னு ஒன்னு போடுங்க. அதுல இந்த சனியன் செய்தியை எல்லாம் போடுங்க. நாங்களும் சிரிப்போம், உடம்புக்கு நல்லது. இந்த ஆளு மூஞ்சிய பார்க்கவே பிபி எகுறுது நமக்கு. இந்த ஆலால எந்த .........க்கும் பயன் இல்லை. சிரிக்கவாவது உதவட்டும். ஆவண செய்யுமா தினமலர்?

Rate this:
05-மே-201814:45:24 IST Report Abuse

ஸாயிப்ரியாஉஙகளை பார்த்த பின் எங்களுக்கும் நம்பிக்கை வந்து விட்டது தளபதி எப்படியும் வெளியே வந்து விடுவார்கள் என்று.

Rate this:
RGOPAL -  ( Posted via: Dinamalar Android App )
05-மே-201813:05:47 IST Report Abuse

RGOPALதமிழக மக்கள் அனைவரும் போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்த தயாராகி வருகிறார்கள் ஜாக்கிரதை

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
05-மே-201809:57:46 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஅதென்ன தலைவர் , செயல் தலைவர் யாரை ஏமாற்ற இதெல்லாம் >>>>>>>>>>>>>>>>>>

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
05-மே-201809:55:58 IST Report Abuse

SIVA. THIYAGARAJANமுதல்வர் ஆவதற்காக எப்படி எப்படியோ செயல்படுகிறார் .ஆசை பேராசைதானோ??....பிற கட்சியினரை முக்கியமாக எதிர் கட்சியினரை குறை கூறாமல் பேசினால் மதிப்பு ஏற்படும் .ஏன்னா நீங்கள் ஆளுற நிர்வாகத்தை மக்கள் பார்க்காமல் இல்லை எனவே வீராப்பு இன்றி விவேகமாக பேச்சு இருப்பது நன்மையைதரும்>>>>>>>>>>>>>

Rate this:
Shriram - Chennai,இந்தியா
05-மே-201808:22:58 IST Report Abuse

Shriramநாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியல யாராவது கொஞ்சம் மருந்த அடித்து விடுங்கள்

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
05-மே-201808:09:54 IST Report Abuse

C.Elumalaiஅரசு அதிகாரிகளை மிரட்டவது திமுக,வுக்கு ஒன்றும் புதுசுயில்லை.சமீபபத்தில்நகார்கோவில் அதிகாரியை காங்+திமுகஎம்எல்ஏக்கள் பேட்டைரவுடிகள்,மிரட்டியதுசமூகவலைதளங்களில் வெளிவந்தது.செயல் எப்படியோ அப்படி அவர்கள்,தொண்டர்கள். எதிர்கட்சியாகஇருக்கும் போதே இந்தநிலை இவர்கள்ஆ ளவந்தால்?ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்.

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement