பெரம்பலூர் அருகே கோர விபத்து: கார் மீது மற்றொரு கார் மோதியதில் 9 பேர் பலி.| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெரம்பலூர் அருகே கோர விபத்து: கார் மீது மற்றொரு கார் மோதியதில் 9 பேர் பலி.

Added : மே 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் பலியாயினர்.

பெரம்பலூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறி சாலையில் நடுவே உள்ள தடுப்பில் மோதி எதிரே காஞ்சிபுரத்திலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதி பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காஞ்சிபுரத்திலிருந்து திருச்சி சென்ற காரில் பெண்கள், குழந்தை என ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரும் , பெரம்பலூரில் இருந்து சென்னை நோக்கி பயணித்த காரில் இருந்த ஒருவர் என 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். படுகாயமடைந்த 2 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவலறிந்த மாவட்ட எஸ்..பி.திஷா மித்தல் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை