ADMK fears in Rajini's growth | 150 தொகுதிகளில் ரஜினிக்கு செல்வாக்கு : உளவுத்துறை அறிக்கை: ஆளும் மேலிடம் அதிர்ச்சி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
150 தொகுதிகளில் ரஜினிக்கு செல்வாக்கு
உளவுத்துறை அறிக்கை: ஆளும் மேலிடம் அதிர்ச்சி

நடிகர் ரஜினி, அரசியல் கட்சி துவக்குவதற்கு முன்னரே, அவருக்கு, 150 தொகுதிகளில் கணிசமான செல்வாக்கு உள்ளதாக, உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, ரஜினியை, அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்து, நெருக்கடி கொடுக்க, அமைச்சர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும், அ.தி.மு.க., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

ரஜினி, அதிமுக, செல்வாக்கு


ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

சமீபத்தில், சென்னை, மதுரவாயலில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்த, எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழாவில், ரஜினி பங்கேற்றார், அப்போது அவர், 'எம்.ஜி.ஆர்., கொடுத்த நல்லாட்சியை, நானும் கொடுப்பேன்' என, பேசியதன் வாயிலாக, அ.தி.மு.க., தொண்டர்களை கவர்ந்தார். கடந்த, 9ம் தேதி,

சென்னையில் நடந்த, 'காலா' பட பாடல்கள் வெளியீட்டு விழாவில், 'சிவாஜி திரைப்படத்தின் வெற்றி விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன்னை புகழ்ந்து பேசினார்' என, கூறியதோடு, அவரது குரலை மீண்டும் கேட்க, ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதன் வாயிலாக, தனக்கு எதிரி,கருணாநிதி அல்ல என்பதை, தி.மு.க.,வினருக்கு தெரிவித்திருக்கிறார். தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையை ஏற்க விரும்பாதவர்கள், தன் பக்கம் வர வேண்டும் என்றும் விரும்புகிறார்.
தமிழக அரசியலில், ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத வெற்றிடத்தை, தன்னால் நிரப்ப முடியும் என, நம்புகிறார். அமெரிக்காவுக்கு ரஜினி சென்றிருந்த நேரத்தில், '234 சட்டசபை தொகுதிகளிலும், அவருக்கு செல்வாக்கு எப்படி உள்ளது' என்ற, 'சர்வே' உளவுத்துறை தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது. அதில், 150 தொகுதிகளில், ரஜினிக்கு கணிசமான ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, தலித் சமுதாய ஓட்டுகள், 15 சதவீதம்; மொழி வாரியாக உள்ள சிறுபான்மையினர் ஓட்டுக்கள், 8 சதவீதம்; மற்ற சமுதாய ஓட்டுகள், 15 சதவீதம் அவருக்கு கிடைக்குமாம். அதாவது, 35 முதல், 40 சதவீத ஓட்டுக்கள், ரஜினி கட்சிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என, சர்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அதிர்ச்சி அடைந்த ஆளுங்கட்சி மேலிடம், ரஜினியை அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்து,

Advertisement

அவருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என, அமைச்சர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு, 'ரஜினி ஆட்சியை பிடிக்க முடியாது, காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம்' என, கிண்டலாக பேசி, ஒரு சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். அதேபோல், அமைச்சர் ஜெயகுமார், 'நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் ரஜினி; காணாமல் போய் விடுவார்' என்றார். 'டிவி' விவாதங்களில் பேசுகிற ஆளுங்கட்சி நிர்வாகிகளும், ரஜினியை கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளனர்.இவ்வாறு ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (161)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar - chennai,இந்தியா
15-மே-201802:15:33 IST Report Abuse

kumareverybody under estimate rajini. current generation don't know the real mass for rajini during 1990 - 2000. They didn't see that. everybody is settled with family, but definitely they will vote. even if 50% of those fans vote for rajini, it will affect many parties.. if you accept or not, but that's true.

Rate this:
Kit Karson - Chennai,இந்தியா
15-மே-201800:28:45 IST Report Abuse

Kit Karsonரஜினி + பிஜேபி கூட்டணி வைச்சாலும் எங்க NOTA வ ஜெயிக்க முடியாது இது வீண் publicity மக்களே.

Rate this:
MANI S - CHENNAI,இந்தியா
14-மே-201818:38:36 IST Report Abuse

MANI Sஇந்த செய்திக்கு இவ்ளோ பேர் பொங்கறானுங்கன்னா ...... பயம் தான் காரணம் ........... இருக்க தானே செய்யும் ..... இங்க இருக்கற ரெண்டும் திருட்டு காட்சிங்க அப்பா பயம் வரும் .......

Rate this:
dinesh - tirupur,இந்தியா
14-மே-201816:30:07 IST Report Abuse

dineshமக்களை தூங்க விடமாட்டாங்க

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
14-மே-201816:04:55 IST Report Abuse

N.Kaliraj 150 தொகுதிகளா..அல்லது நபர்களா...சரியா சொல்லுங்கள்...

Rate this:
Anandan - chennai,இந்தியா
15-மே-201806:33:47 IST Report Abuse

Anandanஅச்சு பிழை காளிராஜ், 450 தொகுதி....

Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-மே-201814:04:59 IST Report Abuse

A.George AlphonseIn 150 Constituencies Mr.Rajini got selvakku but it is not meant he will win.The Visil Aduchan Kunjugal might have attracked by Mr.Rajinikanth but not by whole.It does not meant he will win in 150 Constituencies. These all meaningless and useless report by his liking people not by ulavu Thurai.

Rate this:
Anandan - chennai,இந்தியா
15-மே-201806:34:45 IST Report Abuse

Anandanஇதை நம்புறாங்களா இல்லை நம்புற மாதிரி நடிக்குறாங்களா. ஆக மொத்தம் நாடு பூரா முட்டாப்பயலுங்க கூட்டம்தான் போல....

Rate this:
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
14-மே-201813:59:54 IST Report Abuse

Rajhoo Venkateshஹா ஹா இது யார் வேலை என்று புரிந்து கொள்ளுங்கள் மக்களே .ரஜினியாவது இவ்வளவு இடங்களை பிடிப்பதாவது எவனாவது தண்ணி அடிச்சுட்டு பொய் விசாரித்திருப்பான் .இப்போ நாம் என்ன செய்வோம் ஆஹா ரஜினிக்கு இவ்வளவு இடமா அப்போ அவருக்கு தான் ஒட்டு போடணும் என்று நம்மை திசை திருப்ப தான் இந்த கருது. எல்லாமே திருட்டு வேலை..

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
14-மே-201813:25:28 IST Report Abuse

Jaya Ramஇவர்கள் சும்மா இருந்தாலே போதும் அவர் காலி பெருங்காய டப்பாதான் கொஞ்ச நாளில் அவரே ஆட்டோமெட்டிக்காக ஒடுங்கி விடுவார் இப்போ பிஜேபி யின் தூண்டுதலின் பேரில் அவர் இறங்கியுள்ளார், அதெற்கென அவருக்கு நிதியும் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது, உளவுத்துறை மூலம் மக்களுக்கு தவறான தகவல்களை பரப்பும்படி உத்தரவும் போடப்பட்டுள்ளது இவைகள் எல்லாம் தமிழ் நாட்டை ஆள்பவர்களுக்கும் தெரியும் ஆனால் இருக்கும்வரை அனுபவிப்போம் என்ற பாலிசியில் அவர்கள் இயங்குகின்றனர் இப்போ தாக்குவார்கள் எல்லாம் நாளை அவருடன் சேர்த்தாலும் ஆச்சரிய படவேண்டியது இல்லை ஏனெனில் யாரும் உத்தமர் இல்லை ரஜினி உட்பட இல்லையென்றால் அவருடைய குடும்பத்தினர் செய்யும் தவறுகளை கண்டிக்காமல் இருப்பாரா எல்லாம் வாக்காளர்களாகிய உங்களை ஏமாற்றும் நாடகமே ஏனென்றால் நீங்கள், காசுக்கும், பொருள்களுக்கும் , பேச்சுகளுக்கு அடிமையானவர்கள் என்பது அவர்கள் உங்களை பற்றி போட்டு வைத்திருக்கும் கணக்கு ,இன்று நீரிணைப்பினை பற்றி பேசும் இந்த ரஜினி இவருடைய ரசிகர்களை வைத்து எத்தனை குளங்களை சுத்தம் செய்துள்ளனர் மக்களுக்கு தெரியாதா, இப்போ சொல்கிறேன் அவருடைய பள்ளியில் ஏழை மாணவர்களை 25% சேர்க்க வேண்டும் என்ற விதியின் கீழ் அந்த சட்டம் போட்டது முதல் இந்தாண்டுவரை அவருடைய பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் ஊர் பெயர் பட்டியலை வெளியிடச்சொல்லுங்கள் பார்ப்போம் எல்லாம் ஏமாற்றுவேலை எம் ஜி ஆர் பெயர் சொன்னால் ஒட்டு கிடைத்துவிடும் என்று நினைக்கும் அவர் , பதவிக்கு வரும் முன் அவர் செய்த அவருடைய செயல்களில் ஒன்றுகூட இதுவரை தமிழக மக்களுக்கு செய்திராத ரஜினி இப்போ பதவி கிடைத்தால் நல்லாட்சி தருவேன் என்கிறார் இது எப்படி சாத்தியமாகும்

Rate this:
tamilselvan - chennai,இந்தியா
14-மே-201813:21:16 IST Report Abuse

tamilselvan''234 சட்டசபை தொகுதிகளிலும், அவருக்கு செல்வாக்கு எப்படி உள்ளது' என்ற, 'சர்வே' உளவுத்துறை தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது. அதில், 150 தொகுதிகளில், ஏன்னா தமிழ் நாட்டில் மக்களுக்கு ரஜினி ஒன்னா செய்வில்லை ஆனால் சர்வே' உளவுத்துறை உள்ளவர்கள் எதை வைத்து சர்வே எடுதத்ர்கள் இது கேள்வி குறி இருக்கிறது இப்படி எல்லாம் விளம்பரம் செய்து மக்களை முட்டாள் ஆக்கி கொண்டுருக்கிறார்கள் தமிழ் நாட்டில் சினிமாவில் நடித்து கோடி கோடி சம்பளத்தை எல்லாம் கர்நாடாவில் சொத்து வைத்துருக்கிறா

Rate this:
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
14-மே-201810:51:43 IST Report Abuse

S.M.Noohuசிவாஜி கணேசன்,பாக்கிய ராஜ்,ராஜேந்தர் ,கார்த்திக்,விஜய காந்த் வரிசையில் ரஜனியும்,கமல் ஹாசனும்...

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-மே-201815:55:43 IST Report Abuse

இந்தியன் kumarஇது உங்கள் கணிப்பு இறைவன் அருள் இருந்தால் எம்ஜி ஆர் என் டி ஆர் வரிசையிலும் வரலாம்....

Rate this:
மேலும் 148 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement