Chaos At Tej Pratap Yadav's Wedding, Crowds Stole Food Items, Crockery | லாலு திருமண வீட்டில் ரகளை: பந்திக்கு முந்தியதில் தள்ளு முள்ளு | Dinamalar

லாலு திருமண வீட்டில் ரகளை: பந்திக்கு முந்தியதில் தள்ளு முள்ளு

Updated : மே 13, 2018 | Added : மே 13, 2018 | கருத்துகள் (58)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Lalu son marriage, Rashtriya Janata Dal,Lalu Prasad Yadav, லாலு திருமண வீட்டில் ரகளை, பந்திக்கு முந்தியதில் தள்ளு முள்ளு , லாலு மகன் திருமணம், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி ,பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்,  கால்நடை தீவன ஊழல், ஜார்க்கண்ட் ராஞ்சி மத்திய சிறை, லாலு மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், சந்திரிகா ராயின் எம்எல்ஏ மகள் ஐஸ்வர்யா, திருமண விழாவில் முதல்வர் நிதீஷ்குமார், 
 Bihar former Chief Minister Lalu Prasad Yadav, Lalu eldest son Tej Pratap Yadav, Chandrika Rai MLA daughter Aishwarya, Chief Minister Nitish Kumar,

பாட்னா: லாலு மகன் திருமண வீட்டில் பந்திக்கு முந்தியதில் ஏற்பட்டதள்ளு முள்ளு ரகளையில் முடிந்தது. சிலர் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்றனர். பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவருமான, லாலு பிரசாத் யாதவ், 69, கால்நடை தீவன ஊழல் வழக்கில் , ஜார்க்கண்ட் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், எம்.எல்.ஏ., சந்திரிகா ராயின் மகள், ஐஸ்வர்யாவுக்கும், பாட்னா கால்நடை மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், நேற்று திருமணம் நடந்தது இதில் கலந்து கொள்ள பரோலில் வெளியே வந்தார் லாலு. திருமண விழாவில் முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்நிலையில் திருமண மண்டபத்தில் கட்சியினர் ,உறவினர் என ஆயிரக்கணக்கானோர் கூடினர். அப்போது விருந்து நிகழ்ச்சிக்காக வி.ஐ.பி.களுக்கான பந்தல் போடப்பட்டிருந்த பகுதியிலும் கூட்டம் கூடியதால் அங்கு பந்திக்கு முந்த முயன்ற இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பந்தியில் இடம் கிடைக்காத கட்சியினர் சிலர் ஆத்திரத்தில் டேபிள், சேர்களை அடித்து நொறுக்கி ரகளை செய்தனர். இன்னும் சிலர் அங்கு பரிமாற வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை எடுத்துச்சென்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
14-மே-201812:26:16 IST Report Abuse
Syed Syed நேர்வழில் சம்பாதித்து இருந்தால் தானே நன்மைகள் நடக்கும்.
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
15-மே-201810:29:02 IST Report Abuse
Sitaramen Varadarajanஇனி ஜாமீனும் கொடுக்கப்படக்கூடாது....
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-மே-201800:13:39 IST Report Abuse
Mani . V அரசியல்வாதிகள் ஊழல் செய்து ஆயிரம், லட்சம் கோடிகளில் சொத்து சேர்த்து விடுகிறார்கள். ஆனால் மக்கள் உணவை திருடி சென்று சாப்பிட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய அவமானம்.
Rate this:
Share this comment
Cancel
Sha Shank Shankar - Chennai,இந்தியா
13-மே-201822:39:12 IST Report Abuse
Sha Shank Shankar கால்நடை ஊழலில் சிறை சென்றவர் மகனுக்கு கால்நடை மருத்துவக் கல்லூரியில் திருமணம்.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
13-மே-201821:11:38 IST Report Abuse
jagan திருட்டுப்பய வீட்டுக்கு வருபவர்கள் யாராய் இருப்பார்கள்...ஒன்றும் புதிதல்ல இந்த OBC MBC BC கூட்டத்திற்கு
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-மே-201819:55:56 IST Report Abuse
Lion Drsekar இந்த சமூக விரோதிக்கு இன்னமும் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைள் முன்னுரிமை தருவதால் இந்த குற்றவாளிகள் மென்மேலும் வளர்ச்சி அடைகிறார்கள், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Raman - kottambatti,இந்தியா
13-மே-201819:09:15 IST Report Abuse
Raman விஷயம் ரொம்ப சாதாரணம் தான்.. ஆனா இது நடந்தது லல்லு வீட்டில்..
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-மே-201822:46:02 IST Report Abuse
தமிழ்வேல் மாட்டு கொட்டாயில....
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
13-மே-201817:39:48 IST Report Abuse
r.sundaram போராட்டத்திற்காக ஆம்புலன்ஸ் வண்டியவே திருப்பி அனுப்பியவர்கள் பேசும் பேச்சு இது, கேவலம்.
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
13-மே-201817:28:27 IST Report Abuse
kundalakesi இந்த படாடோப விருந்தெல்லாம் ஏற்கனவே பணத்தில் கொழுத்தவர்கள்தான் தின்கிறார்கள். படு பெரிய மனிதர்கள் தங்கள் வீடு விருந்துகளுக்கு அதிகம் கூப்பிடுவதுமில்லை, தம்பம் காண்பிப்பதும் இல்லை. அநாதை, ஆதரவற்றோர், கிராமத்துக்கே சென்று (பிர்லா, அம்பானி போல) உணவளித்து மகிழ்கின்றனர். வயிறு குளிர்ந்த வாழ்த்தும் பெறுகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
சிவ.இளங்கோவன் . - Kuwait ,குவைத்
13-மே-201817:20:08 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . பீஹாரிகளின் உண்மை முகம் இதுதான் பல இடங்களில் திருடி தின்பது பீகாரிகளுக்கு கை வந்த கலை ... இதுபோன்ற நிகழ்வுகள் ரயில் பயணிகளுக்கும் நடக்குமாம் ...பீகாரை கடந்து செல்லும்போது ..யார் அமர்ந்திருந்தாலும் ..எழுந்திருக்க சொல்லி அமருவார்களாம் .
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
13-மே-201816:36:49 IST Report Abuse
வெகுளி மீண்டும் கால்நடை தீவன திருட்டுன்னு சொல்லுங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை