அதிக ஜல்லிக்கட்டு போட்டி: புதுகை சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிக ஜல்லிக்கட்டு போட்டி: புதுகை சாதனை

Added : மே 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுக்கோட்டை : தமிழகத்தில், அதிகமான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திய மாவட்டம் என்ற பெருமையை பெற்றுள்ள புதுக்கோட்டையை, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
23 லட்சம் பேர் பார்வை: வரலாற்று பெருமைகள் கொண்ட புதுக்கோட்டை மாவட்டம், சத்தமின்றி மற்றொரு சாதனைக்கு சொந்தமாகி உள்ளது. தமிழகத்தில், அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்திய மாவட்டம் என்ற பெருமை, புதுக்கோட்டைக்கு கிடைத்துள்ளது.கடந்த ஆண்டுகளில், புதுக்கோட்டை மாவட்டத்தில், 50 இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வந்தன. நடப்பாண்டு, இதுவரை மட்டும், 56 ஜல்லிக்கட்டுகள் நடந்துள்ளன. இன்னும், 17 இடங்களில் நடக்க உள்ளது.இதுவரை நடந்த ஜல்லிக்கட்டுகளில், 54 ஆயிரம் காளைகள் பங்கேற்றுள்ளன. 19 ஆயிரத்து, 280 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி உள்ளனர். 23 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

கலெக்டர் கணேஷ் கூறுகையில், ''புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்போது நடந்து முடிந்த இடங்களில், ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டியை தடையில்லாமல் நடத்தும் வகையில், அனைத்து ஊர்களும் அரசு கெஜட்டில் இடம் பிடித்துள்ளன,'' என்றார். மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் கூறும் போது, 'இந்த சாதனையை உலகம் தெரிந்து கொள்ளும் வகையில், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றனர்.

அரிவாள் வெட்டு : புதுக்கோட்டை, இலுப்பூர் அருகேயுள்ள மதியநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. புதுகை, திருச்சி, கரூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 1,500 காளைகள் பங்கேற்றன; 300 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், 15 பேர் படுகாயம் அடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர், பரிசு வழங்கி பாராட்டினர். மாடு பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில், சித்தன்னவாசலைச் சேர்ந்த சத்யராஜ், 32, என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. காயம் அடைந்த அவர், புதுகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இலுப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X