காவிரி செயல் திட்டம் தமிழகத்திற்கு சாதகமா? Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சாதகமா?
காவிரி செயல் திட்டம் தமிழகத்திற்கு...

'காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டுமே, காவிரி பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்' என, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

காவிரி செயல் திட்டம், காவிரி வாரியம் , காவிரி பிரச்னை, காவிரி பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு, தமிழகத்திற்கு சாதகமா, காவிரி மேலாண்மை வாரியம் ,
Cauvery Action Plan, Cauvery Board, Cauvery dispute, Cauvery irrigation farmers federation,  Federation of Indian Farmers,  Cauvery management board,

காவிரி பிரச்னையில், மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, காவிரி வரைவு திட்டம் குறித்து, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கூறியதாவது:

இளங்கீரன், தலைவர், காவிரி பாசன விவசாயிகள் கூட்டமைப்பு: நீண்ட இழுபறிக்கு பின், காவிரி வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரம் உள்ள அமைப்பை உருவாக்காத வரை, காவிரி பிரச்னை தொடரும். எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்.

விருத்தகிரி, தேசிய தலைவர், இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு: சர்வதேச நீர் சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆற்றிலும், அதன் கடைமடைப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அந்த வகையில், காவிரியில், தமிழகத்திற்கே அதிக உரிமை உள்ளது. தற்போது காவிரி பிரச்னை, இறுதி தீர்வை நோக்கி நகர்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காவிரி வரைவு அறிக்கைக்கு, மத்திய அமைச்சரவை உயிர் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு முதல், தமிழகத்தில் குறுவை சாகுபடி இயல்பான அளவில் நடப்பதை, உறுதி செய்ய வேண்டும்.

விஸ்வநாதன், தலைவர், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம்: இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய போது, '15 ஆண்டு களுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது' என, நீதிபதிகள் கூறினர். இன்றைக்கு முறையீடு; மேல் முறையீடு நடக்கிறது. இதை, நீதிபதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் காலம் தாழ்த்தினால், காவிரி வழக்கு, உச்ச நீதிமன்ற வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்துவிடும்.

வேட்டவலம் மணிகண்டன், தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்: வரைவு திட்டத்தால், தமிழகம் ஏமாற்றப்படும் சூழல் உள்ளது. மேலாண்மை வாரியம் அமைத்தால், முழு அதிகாரம் வாரியத்திடம் இருக்கும்; அணைகள் முழுவதையும், மேலாண்மை வாரியம் எடுத்துக் கொள்ளும். தற்போது, அணைகள், மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை ஏற்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

ரெங்கநாதன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர்: மேலாண்மை வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காவிரி மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். இதனால், அணைகளில் உள்ள நீரை நடுநிலையோடு கையாள வாய்ப்பு உண்டு என்ற நம்பிக்கை இருந்தது. தற்போது, அறிவித்துள்ள வரைவு திட்டத்தில், இந்த நடைமுறைகள் இல்லை. எனவே, மேலாண்மை வாரியம் என்ற பெயரை மாற்றிக் கொண்டாலும், அதில் உள்ள அனைத்து அம்சங்களையும் வரைவு திட்டத்தில் கொண்டு வந்தால் தான், தமிழகத்துக்கு காவிரி நீர் உரிமை முழுமையாக கிடைக்கும்.

Advertisement

'பெயரில் பிரச்னை இல்லை' :


உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையை, தமிழக சட்ட துறை அமைச்சர் சண்முகம், நேரில் பார்வையிட்டார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வரைவு திட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் அனைத்தும், தீர்க்கமாக ஆய்வு செய்யப்படும். வாரியமோ, ஆணையமோ, குழுவோ, எதுவாயினும், அந்த அமைப்பிற்கு அதிகாரம் இருக்கிறதா என்பது தான் முக்கியம். எனவே, பெயர் வைப்பதில் பிரச்னை ஏதும் இருக்கப் போவதில்லை.

மத்திய அரசு அமைக்க போகும் அந்த அமைப்பு, தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை நிலைநாட்டக்கூடிய அதிகாரம் கொண்டதாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

'உரிமையை பெற்று தருவோம்' :

சென்னையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: வரைவு திட்டம், காவிரி சம்பந்தப்பட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநில அரசுகளிடம் தரப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு அடிப்படையில், வரைவு திட்டம் உள்ளதா என பரிசீலித்து, உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என, நம்புவோம். அதில் பாதகம் இருந்தால், தமிழகத்திற்கு நியாயமான உரிமையை பெற்றுத் தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.



- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-மே-201807:53:41 IST Report Abuse

ஆப்புமுதல்வர் அம்மா குடிநீர் வாங்கி காவேரில ஊத்துவாரு....பிரதமர் சட்லெஜ் , பிரம்ம புத்திரா நதிகளோட காவேரிய இணைப்பாரு... ஆனா, கர்னாடகாலேருந்து காவேரி தண்ணி அவிங்க அணையெல்லாம் ரொம்பி வழிஞ்சு வந்தாதான் உண்டு.

Rate this:
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
15-மே-201821:08:03 IST Report Abuse

Krishnamurthy Ramaswamyஅணைகள் , அவற்றை பராமரித்தல் போன்றவை கர்நாடக அரசின் கையில் இருக்கும் என்று 'வாரிய திட்ட நகல் கூறுகிறது ' அப்படி இருக்க ' சாவி உள்ளவன் தான் எஜமான் ,அணையை திறப்பதும் மூடுவதும் அதை தான் வேண்டிய அளவுக்கே திறப்பதும் கர்நாடகாவின் கையில் தான் .மற்றும் ஒரு தெருவை எடுத்துக்கொள்ளுங்கள் . தெருவின் கடை நிலை வீட்டுக்கு தண்ணீர் பிரஷர் குறைந்து தண்ணீர் இல்லை என்ற நிலை வந்தால் 'தெருவின் முதலில் இருக்கும் வீட்டார் தங்கள் பைப்புகளை மூடி தெரு கடைசியிலுள்ள மக்களுக்கு தண்ணீர் தருவார்களா. சிறிது சிந்தியுங்கள்

Rate this:
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
15-மே-201815:17:10 IST Report Abuse

Palanisamy Tவாரியம் அமைப்பதின் நோக்கமே தமிழகத்திற்கு உரிய நீரை உரிமையோடுப் பெற வேண்டும் நீரைக் கேட்டுப்பெறுவதற்காக வாரியம் அமைக்கப் படவில்லை இந்த வாரியத்தில் உள்ள அதிகாரிகள் தமிழகம் கர்நாடகத்தை இருக்கும்போது எப்படி கர்நாடகம் நியாயமான முடிவை எடுப்பார்கள் அணையும் அவன் ஊரில்தானுள்ளது அணையைத் திறந்து விடும் அதிகாரமும் அவனிடம்தான் உள்ளது இப்படியிருக்கும் போது எப்படி நியாயம் கிடைக்கும் அணை மத்திய அரசின் கட்டுப் பாட்டில் வரவேண்டும் மோடி அரசு தமிழர்களிடம் கண்ணா மூச்சி விளையாட்டுக்கள் விளையாடுவது போல் தெரிகின்றது காவேரி தேசிய நதி தேசியக் சொத்து கர்நாடகம் அதற்கு முழு உரிமைக் கொண்டாட முடியாது வரைவுத் திட்டத்திலுள்ள இந்தக் குறைப்பாடுகளை முட்டுக் கட்டைகளை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X