ஊரை காலியாக்கும் 'ஈ'; வெளியூர் பயணிக்கும் மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரை காலியாக்கும் 'ஈ'; வெளியூர் பயணிக்கும் மக்கள்

Updated : மே 15, 2018 | Added : மே 15, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 சிவகங்கை நகராட்சி, ஈக்கள் தொல்லை, சுந்தரநடப்பு, துவங்கால், மணக்கரை, கிராமங்கள், ஊரைக் காலி செய்ய கிராம மக்கள் முடிவு , 
Sivagangai municipality, Flies trouble, Sundaranadapu, Thuvangal, Mankarai, villages, Villagers decide to vacate the native place ,

சிவகங்கை : சிவகங்கை அருகே 'ஈ'க்கு பயந்து ஊரை காலி செய்ய 8 கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

சிவகங்கை நகராட்சியில் தினமும் 21 டன் குப்பை சேகரமாகிறது. சுந்தரநடப்பு அருகே நவீன குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இக்கிடங்கை சுற்றி சுந்தரநடப்பு, துவங்கால், மணக்கரை, காட்டுநெடுங்குளம், குட்டிதின்னி, உசிலங்குளம், உடையநாதபுரம், கடுக்கா பள்ளம் ஆகிய 8 கிராமங்கள் உள்ளன.

ஐந்தாயிரம் பேர் வசிக்கின்றனர். கிடங்கில் குப்பையை தரம் பிரிக்காமல் அப்படியே எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாச பிரச்னை, கண் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் கழிவுகளால் ஈக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது.

அவை கிராமங்கள் முழுவதும் பரவி, வீடுகளில் மொய்க்கின்றன. தண்ணீர் பானை, உணவுப் பொருட்களில் அமர்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. பலமுறை போராடியும் நடவடிக்கை இல்லாததால் ஊரைக் காலி செய்ய கிராம மக்கள் தயாராகின்றனர்.

சுந்தரநடப்பு பாண்டி கூறியதாவது: கண்மாய் வரத்துக் கால்வாயில் கிடங்கு உள்ளது. மழைக்காலங்களில் குப்பையில் உருவாகும் கழிவுநீர் கண்மாயில் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடத்துவோம். கழிவுநீர் கலப்பால் மீன்கள் அழிந்து விட்டன. குப்பை கிடங்கை அகற்ற மே 1ல் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அனுப்பினோம். நடவடிக்கை இல்லாவிட்டால் கிராமத்தை விட்டு அனைவரும் வெளியேற உள்ளோம், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மே-201818:48:23 IST Report Abuse
a.thirumalai காசு வாங்கிட்டு ஓட்டு போட்டாலே யாரும் மதிக்க மாட்டார்கள் ஆகவே இனி வரும் காலங்களில் நேர்மையாக செயல்படுங்கள். ஊரைவிட்டு செல்லாமல் போராடி வெற்றி பெறுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
15-மே-201817:07:09 IST Report Abuse
Naagarazan Ramaswamy ஈ சினிமா வில் வந்தது போல் நிஜமாகவே ஈ நிறைந்துவிட்டதே. கற்பனைகூட சிலநேரம் நிஜமாக மாறுமோ
Rate this:
Share this comment
Cancel
Gunasekar - hyderabad,இந்தியா
15-மே-201816:28:12 IST Report Abuse
Gunasekar எல்லோரும் வீட்டையும் , சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கண்ட இடத்தில் எச்சி துப்புவது, மலம் , ஜலம் கழிப்பது இதையெல்லாம் தவிர்க்க வேண்டும். மீண்ட பிறகு ஊரில் எல்லோரும் சேர்ந்து வூரை இனியாவது சுத்தமாக வைத்திருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X