கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள்: கடலோர போலீசில் ஒப்படைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள்: கடலோர போலீசில் ஒப்படைப்பு

Added : மே 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மயிலாடுதுறை: சீர்காழி அருகே, கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள், கடலோர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த, கீழமூவர்க்கரை மீனவர் கிராமத்தை சேர்ந்த சரவணன் மற்றும் நான்கு மீனவர்கள், நேற்று முன்தினம் அதிகாலை, மீன் பிடிப்பதற்காக பைபர் படகில் கடலுக்கு சென்றனர். சில நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, பாலித்தீன் பைகளில் சுற்றப்பட்ட, சில மூட்டைகள் கடலில் மிதந்து கொண்டிருந்தன. அவற்றை படகில் எடுத்து வந்த மீனவர்கள், கிராம பஞ்சாயத்தாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து, திருவெண்காடு போலீசார் மற்றும் பூம்புகார் கடலோர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மீனவர்களால் எடுத்து வரப்பட்ட, 10 மூட்டைகளை பிரித்து, போலீசார் சோதனையிட்டபோது, அவற்றில், 42 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த கடலோர காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினரை பார்த்தவுடன், கஞ்சா மூட்டைகளை கடலில் வீசி, தப்பி சென்றிருக்கலாம் என, தெரிகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை