வங்கி கொள்ளையில் மேலும் 2 பேர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி கொள்ளையில் மேலும் 2 பேர் கைது

Added : மே 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, அசேஷம் பகுதியில் உள்ள மெர்கன்டைல் வங்கியில், கடந்த 7ம் தேதி, துப்பாக்கி முனையில், 5.58 லட்சம் ரூபாய் ரொக்கம், 84 கிராம் தங்க நகைகள் கொள்ளைஅடிக்கப்பட்டன.இது தொடர்பாக, தூத்துக்குடியைச் சேர்ந்த நான்கு பேர், கடந்த, 12 ம்தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, இரண்டு கார்கள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், 2.58 லட்சம் ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. மேலும், இதில் தொடர்புடைய, திருவாடானையைச் சேர்ந்த ராஜா, மதுரையைச் சேர்நத அயூப்கான் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.இது குறித்து, மன்னார்குடியில், நேற்று, எஸ்.பி., மயில்வாகனன் கூறுகையில், ''முக்கிய குற்றவாளியான ராஜாவிடம் இருந்து, 60 கிராம் தங்க நகை கைப்பற்றப்பட்டுள்ளது.''மேலும், ஐந்து துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக, மேலும், சிலரை தேடி வருகிறோம்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை