ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா| Dinamalar

ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா

Updated : மே 15, 2018 | Added : மே 15, 2018 | கருத்துகள் (85)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காங்கிரஸ், குமாரசாமி,கடிதம், மதசார்பற்ற ஜனதா தளம்

பெங்களூரு: கர்நாடக கவர்னரை சந்தித்து மாநிலத்தில் ஆட்சியமைக்க பா.ஜ., முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா உரிமை கோரினார்.
கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.,104 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து அங்கு, ஆட்சியமைக்க, மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளது. இது தொடர்பாக காங்., மூத்த தலைவர்கள் தேவகவுடா மற்றும் குமாரசாமியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் பா.ஜ., முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கவர்னர் வஜூபாய்வாலாவை நேரில் சந்தித்தார். அப்போது ஆட்சியமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.பின்னர் அவர் கூறுகையில், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் கவர்னரை சந்தித்து உரிமை கோரினோம். ஒரு வாரத்தில் சட்டசபையில் எங்களின் மெஜாரிட்டியை நிருபிப்போம். உரிய முடிவெடுப்பேன் என கவர்னர் கூறியதாக தெரிவித்தார்.கடிதம்


இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், காங்கிரசின் ஆதரவை ஏற்று கொள்வதாகவும், ஆட்சியமைப்பது தொடர்பாக நேரில் சந்திக்க அனுமதி வழங்கும்படி அதில் கூறியுள்ளார்.


எடியூரப்பாவும் முடிவு:


இந்நிலையில், பா.ஜ., முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவும் கவர்னரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். தனிப்பெரும்கட்சி என்ற அடிப்படையில் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், சந்திப்பின் போது ஆட்சியமைக்க உரிமை கோருவோம் எனவும் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
21-மே-201801:48:40 IST Report Abuse
Dr.C.S.Rangarajan பெரியதை சிறிதாக்கி சிறியதை பெரிதாக்குவதில் அரசியல் வாதிகள் கைதேர்ந்தவர்கள். கர்நாடகாவில், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 224 சட்ட மன்ற அங்கத்தினர் கொண்ட சபையில் மக்கள் 78 கட்சியினரை தேர்தெடுத்ததால் தனித்து ஆட்சியமைக்க முடியும் தகுதியை இழந்தது. அதேபோல் மதசார்பற்ற ஜனதாதளம் 38 அங்கத்தினரைத்தான் சட்ட மன்றத்திற்கு அனுப்பமுடிந்தது. இக்கட்சியும் மந்திரிசபை அமைக்கமுடியாது. ஒரே கட்சி 104 அங்கத்தினரை சட்ட மன்றத்திற்கு மக்களால் தேர்தெடுக்க பட்டதால் அக்கட்சியை ஆளுநர் மந்திரிசபை அமைக்க அனுமதித்ததுடன் பெரும்பான்மையை நிரூபிக்க கட்டளை இட்டார். காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதாதளம் தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது 'நம்பிக்கையைவிட' "நம்பிக்கை இல்லாததால்' அவர்களின் தனிப்பட்ட சுதந்திரந்திக்கும் மதிப்பை தராமல் அவர்களை 'சிறை' பிடித்தது 'ஜனநாயக' முறையா? 'நம்பமுடியாத' தங்கள் கட்சி அங்கத்தினருடன் ஐந்து ஆண்டுகள் இணைந்து இருக்கவேண்டாமா? அவர்களின் மீது 'நம்பிக்கை' இருந்திருந்தால் பிஜேபி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுதானே போய் இருக்கும்? 'நம்பிக்கை இல்லை' என்ற எண்ணத்தை அவர்களின் மனதில் விதைத்தால் அதன் 'விஸ்வரூபம்' அதன் வேலையை காட்டாமல் விடவே விடாது.
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
17-மே-201811:36:50 IST Report Abuse
Krish Sami பா ஜ வுக்கு கோவாவில் ஒரு நீதி. கர்நாடகாவில் வேறொரு நீதி. இதில் தங்கள் அரசியல் நேர்மையானதென்று மார் தட்டல் வேறு.
Rate this:
Share this comment
Cancel
Seenu Cp - Chennai (Madras),இந்தியா
16-மே-201811:23:39 IST Report Abuse
Seenu Cp ஒரு வார காலம் அவகாசமே எவ்வளவு முடியுமோ அவ்வளவு எம். எல். ஏ க்களை விலைக்கு வாங்க பிஜேபிக்கு தரும் நேரம் தான்.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
16-மே-201811:14:51 IST Report Abuse
ஜெயந்தன் காங்கிரஸும் JDS ம் ஆட்சி அமைக்காமல் இருக்க பிஜேபி க்கு ஒரே வழி.. சுலபமான வழி.. இடையூரப்பாவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்க 5 வருடம் அவகாசம் கொடுத்துவிட்டு கவர்னர் மூலமாக மோடியே ஆட்சி செய்யலாம்.. 5 வருடம் முடிந்த பிறகு பார்த்து கொள்ளலாம்...
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
16-மே-201810:54:11 IST Report Abuse
மணிமாறன் 222 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருதாலும் ஆட்சி அமைக்க ஆளுநர் இடம் தர மாட்டார்... இப்போதய கர்நாடக ஆளுநர் 2001 இல் மோடிக்காக தன் MLA பதவியை ராஜினாமா செய்தவர். மோடி முதல்வராக இருந்தபோது அந்த தொகுதியில் நின்று தான் வெற்றி பெற்றார்.. அதற்கு பலனாக தான் இவருக்கு ஆளுநர் பதவி கிடைத்தது.. இதிலிருந்தே தெரியும்...இந்த நாடகம் எப்படி முடியும் என்று...
Rate this:
Share this comment
Cancel
Susainathan -  ( Posted via: Dinamalar Android App )
16-மே-201810:10:50 IST Report Abuse
Susainathan why required 7 days should be earn some money for all mla pocket
Rate this:
Share this comment
Cancel
Shah Jahan - Colombo,இலங்கை
16-மே-201807:56:58 IST Report Abuse
Shah Jahan என் கருத்து: ஆளுநர் இன்று ஒப்புக்காக சட்டமா அதிபரையும் பிற சட்டவல்லுனர்களையும் கலந்து ஆலோசிப்பார். ஆளுநர் முன்னாள் பா. ஜ. க அரசியல்வாதி.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-மே-201806:23:15 IST Report Abuse
Pugazh V @bal - chennai,:: மிகவும் கீழ்த்தரமான உதாரணம். 100 க்கு 30 மதிப்பெண் கூட வாங்காத FC மாணவர்களும் இருக்கிறார்கள், 100 க்கு 90 மதிப்பெண் வாங்குகிற SC/ ST மாணவர்களும் இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-மே-201804:09:44 IST Report Abuse
Kasimani Baskaran காங்கிரசை அழிக்க மக்கள் செய்த முயற்சி முழுவதுமாக வெற்றி பெறவில்லை... ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்லலாம் - அதாவது காங்கிரஸ் சாகும் தருவாயில் இருக்கிறது... இராகுல்ஜீ தான் கருணையுடன் நடந்து சீக்கிரம் முடித்து வைக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Sabari - Tanjore,இந்தியா
16-மே-201811:19:50 IST Report Abuse
SabariKasimani Baskaran - singapore, அவர்களுக்கு....தேசிய அளவில் ஒரு கட்சிக்கு மாற்றுக்கட்சி இருக்கவேண்டியது அவசியம்...நம் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில். காரணம் ஆளும்கட்சி செய்வதெல்லாம் நல்லதாக இருந்துவிடாது...மக்கள் விரோத அல்லது மக்களை பாதிக்கும் திட்டங்கள், கொள்கைகள் வகுக்கப்பட்டால் அதை எதிர்க்க, எதிர்த்து குரல் கொடுக்க, ஆட்சியாளர்களுக்கு ஒரு புரிந்துகொள்ளலை ஏற்படுத்த...அதன் மூலம் வரப்போகும் பிரச்சினையை, பாதிப்பை முன்பே தவிர்க்கவேண்டிய முயற்சியை செய்ய எதிர்கட்சியால்தான் முடியும். தனிப்பெரும்பான்மை இருக்கிறது என்பதால் ஆளும்கட்சி எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது அர்த்தமல்ல. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றது. ஆளும் கட்சியை ஒருவகையில் திருத்தி நல்ல அரசை செயல்படுத்த எதிர்க்கட்சிகள் உதவியாக இருக்கும். ஆளும் கட்சியோ, எதிர்கட்சியோ அதன் தலைமை எடுக்கும் முடிவுகளால் பாதிப்புக்கு உள்ளாவதும் உண்டு. காங்கிரஸ் செய்த ஊழல், லஞ்சத்தால் மக்களால் தூக்கியெறியப்பட்டது...ஆனால் அதே சில தவறுகளை இப்போதுள்ள பிஜேபி அரசு செய்துகொண்டுள்ளது...முக்கியமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை, காவிரி நீர் விஷயத்தில் தமிழகத்திற்கு துரோகம் போன்றவை. நல்லது செய்வோம் என்ற அறிக்கையை நம்பித்தானே மக்கள் வாக்களித்தனர்? பதவிக்கு வந்து என்ன மாற்றம் நடந்துள்ளது? சென்ற அரசையே குறை சொல்வதில் காலத்தை கடத்துகின்றனர். மக்கள் வெறுப்படைய காரணம் இதுதான்....அவன் சரியில்லையென்று இவனை வைத்தால் இவன் அதைவிட மோசமாக இருக்கிறான்....எந்த மக்கள் பிரச்சினை என்றாலும் முந்தைய அரசை குற்றம் சொல்கிறான் என்று மக்கள் வெறுப்பில் உள்ளனர்....
Rate this:
Share this comment
Cancel
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
15-மே-201821:20:25 IST Report Abuse
Rajhoo Venkatesh இனி என்ன குதிரை பேரம் தான்.எம் எல் எ காட்டில் மழை. ஆமா நூற்று முப்பது சீட், மோடி சூறாவளி, சுனாமி எல்லாம் எங்கே போச்சு.உங்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று கர்நாடக தேர்தல் காட்டிவிட்டது.அறுபத்தி ஐந்து விழுக்காடு மக்கள் உங்களை எதிர்த்து வாக்கு அளித்துள்ளார். அதனாலே சும்மா ஆடாதீங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை