திருமலையில் முதல்வர் வழிபாடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

திருமலையில் முதல்வர் வழிபாடு

Added : மே 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
திருமலையில் முதல்வர் வழிபாடு

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில், தமிழக முதல்வர், பழனிசாமி, தன் குடும்பத்துடன் வழிபாடு நடத்தினார்.ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள, ஏழுமலையானை தரிசிக்க, நேற்று முன்தினம், தன் குடும்பத்துடன் திருமலைக்கு வந்த, தமிழக முதல்வர் பழனிசாமி, நேற்று காலை, அஷ்டதளபாத பத்மாராதனையில், ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து வெளியில் வந்த அவர், வகுளமாதா சன்னதி, விமான வெங்கடேஸ்வர சுவாமி, யோகநரசிம்ம சுவாமி, பாஷ்யங்காரர் சன்னதி உள்ளிட்ட இடங்களிலும் வழிபாடு நடத்தினார். முதல்வரை, ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து, வேத ஆசீர்வாதம் செய்வித்து, ஏழுமலையான் திருவுருப்படம், தீர்த்தம், லட்டு, வடை உள்ளிட்டவற்றை, தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர். அங்கு வந்த உடுப்பி மடாதிபதியிடம், ஆசி பெற்ற தமிழக முதல்வர், கோவில் எதிரில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டு, அகண்டம் முன், ஏழுமலையானுக்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டினார்; பின் சென்னை புறப்பட்டு சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-மே-201809:47:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நீர் செய்த பாவத்தை தீர்க்க எந்த கடவுளாலும் முடியாது.,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X