போலி ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தி மோசடி செய்த ருமேனியர்கள் கைது| Dinamalar

போலி ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தி மோசடி செய்த ருமேனியர்கள் கைது

Added : மே 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஐதராபாத்: போலி, ஏ.டி.எம்., கார்டுகளை பயன்படுத்தி, 35 லட்சம் ரூபாய் மோசடி செய்த, ருமேனியாவைச் சேர்ந்த இருவரை, போலீசார் கைது செய்துஉள்ளனர்.தென் கிழக்கு ஐரோப்பிய நாடான, ருமேனியாவைச் சேர்ந்த, வாசில் கேபிரியல் ரஸ்வான், புரிசியா அலெக்சாண்டரு ஆகியோர், 2017 டிசம்பரில், தெலுங்கானா தலைநகர், ஐதராபாதிற்கு வந்தனர். போலி, ஏ.டி.எம்., கார்டுகளை பயன்படுத்தி மோசடி செய்ய, கேபிரியல் சதித் திட்டம் தீட்டினான். காவலாளி இல்லாத, ஏ.டி.எம்., மையங்களில், 'ஸ்கிம்மர்' கருவிகளை பயன்படுத்தி, 'டெபிட்' கார்டுகளின் தரவுகளை சேகரித்து தரும்படி, அவனது நண்பர்கள் இருவரை, இந்தியாவிற்கு வரவழைத்தான். அவர்கள், தரவுகளை சேகரித்து, கேபிரியலிடம் கொடுத்து, நாடு திரும்பினர். இதையடுத்து, கேபிரியலும், அலெக்சாண்டருவும், மஹாராஷ்டிர மாநிலம், மும்பைக்கு சென்று, போலி, ஏ.டி.எம்., கார்டுகளை பயன்படுத்தி, 35 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட, 46 பேர், போலீசாரிடம் புகார் அளித்தனர்.இது தொடர்பாக விசாரித்த போலீசார், கேபிரியல், அலெக்சாண்டரு ஆகியோர், ஐதராபாதிற்கு வந்தபோது கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 35 லட்சம் ரூபாய், போலி, ஏ.டி.எம்., கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதற்கு உடந்தையாக இருந்த, கேபிரியல் நண்பர்கள் இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X