பாக்., ராணுவம் அத்துமீறல் : பி.எஸ்.எப்., வீரர் பலி| Dinamalar

பாக்., ராணுவம் அத்துமீறல் : பி.எஸ்.எப்., வீரர் பலி

Added : மே 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பாக்., ராணுவம் அத்துமீறல் : பி.எஸ்.எப்., வீரர் பலி

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சர்வதேச எல்லைப் பகுதியில், பாக்., ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பி.எஸ்.எப்., எனப்படும், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள சம்பா மாவட்டம், மங்குசுக் பகுதியில், சர்வதேச எல்லைப் பகுதியில், பாக்., ராணுவத்தினர், அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர்; அவர்களுக்கு, நம் ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர்.ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்த இந்தசண்டையில், பி.எஸ்.எப்., வீரர் தேவேந்தர் சிங்,உயிரிழந்தார்.
பி.எஸ்.எப்., மூத்த அதிகாரி கூறியதாவது:கதுவா மாவட்டத்துக்கு அருகில், சந்தேகத்திற்கிடமான வகையில், ஐந்து பேர் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. வரும், 19ல், பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் மாநிலத்துக்கு வரவுள்ள நிலையில், சர்வதேச எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை